E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஆடம்பர பொருள்கள் மீதான வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

31 ஜூலை
2013
10:44
பதிவு செய்த நாள்
ஜூலை 31,2013 08:59

புதுடில்லி : இறக்குமதியைக் குறைக்கும் வகையில், ஆடம்பர பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி செய்வதற்கு பதிலாக அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் பேட்டி :



புதிய அமைச்சரவை மாற்றத்திற்கு பின் மீண்டும் நிதியமைச்சராகி ஓராண்டு ஆன தினத்தின் போது சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : இந்த வரி உயர்விற்கு குறிப்பிட்ட எந்த திட்டமும் இல்லை; தற்போது இந்த முறை தங்கத்தின் மீதான இறக்குமதியில் மட்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது; பற்றாக்குறையை தவிர்க்க இதனை மேலும் பல பொருட்களின் இறக்குமதியிலும் கையாள திட்டமிடப்பட்டுள்ளது; உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதின் மூலமும் அவசியம் இல்லாத சில ஆடம்பர பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இறக்குமதி அளவு குறைக்கப்படும். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
வரிகள் உயர்த்தப்பட போவதாக தெரிவித்த சிதம்பரம், எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரிகள் உயர்த்தப்பட உள்ளது என குறிப்பிடவில்லை. இருப்பினும் வரி உயர்வு அதிகளவில் இருக்கும் என தெரிகிறது. பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் சரிவு உள்ளிட்ட காரணங்களால் இறக்குமதி அளவை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மை, ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவற்றால் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வருவாய் 5 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அமெரிக்கா மீது குற்றச்சாட்டு :



ரூபாயின் ஏற்ற இறக்கமான நிலைக்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னான்கி மற்றும் இந்தியாவின் முன்னாள் வரவு செலவு கணக்கீட்டாளரும் ஆடிட்டர் ஜெனரலுமான வினோத் ராய்யும் தான் காரணம் என சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். சி.ஏ.ஜி., மற்றும் அதன் தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம் கூறியதாவது: முன்னாள் சி.ஏ.ஜி., நிதித்துறையை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது; எனது சட்ட அதிகாரங்களுக்கும் கட்டுபாடுகளுக்கும் அது கட்டுப்படவில்லை; சி.ஏ.ஜி., அறிக்கைகள் மீதான அரசின் நடவடிக்கையும் என்னை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது; அரசின் கொள்கைகளுக்கும் அமல்படுத்தப்படும் கொள்கைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசமே இதற்கு காரணம் என நான் நினைக்கிறேன்; இத்தகைய கொள்கைகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஏற்படுத்தப்பட்டது அல்ல; ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் ஆகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நம்பிக்கை :



2014 தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி-3 கூட்டணியை உருவாக்கும் என சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட பிரச்னை மீது யாரும் ஓட்டளிக்க போவதில்லை; ஒட்டுமொத்தமாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட கட்சிகள் இணைந்த காங்கிரஸ் கூட்டணிக்கே மக்கள் ஓட்டளிப்பர்; காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைக்க நல்லதொரு வாய்ப்பு உருவாகி உள்ளது; ஐ.மு., கூட்டணி 1 ஐ விட 2 மாற்றி அமைக்கப்பட்ட ஒன்று; அதே போன்று ஐ.மு., கூட்டணி 3 ல் யார் யார் இருப்பார்கள் என இனி வரும் காலங்களில் தெரியும். இவ்வாறு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி குறித்து பதிலளித்த சிதம்பரம், உலக பொருளாதாரம் மிகுந்த சவாலான நிலையில் உள்ளது; அதனால் இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது; பொருளாதாரம் உடனடியாக சரிவில் இருந்து மீள வேண்டும் என நினைப்பது நடக்காத காரியம்; பொருளாதாரத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்; உற்பத்தியை பெருக்கி நல்லதொரு வளர்ச்சியை ஏற்படுத்தவே பாடுபட்டு வருகிறோம்; இதற்காக சர்வதேச நாணய நிதியகத்திடமும் உ‌தவி கேட்டுள்ளோம். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (52)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmikanthan - chennai,இந்தியா
31-ஜூலை-201315:28:55 IST Report Abuse
Lakshmikanthan கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செயல் தான் (இதுவும் வெறும் வெட்டி பேசத்தான் இருக்கனும்). ////அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி செய்வதற்கு பதிலாக அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.//// croude ஆயில் இறக்குமதி இந்திய ரூபாயை பதிபதாக இருந்தால். hydro engin , bio fuel இதெல்லாம் அதிகரபுர்வமா ஆரைட்சில் கண்டுபிடிக்க திறமைசாலிகள் நமிடம் உண்டு எற்றுமதி உக்குவிக்க இவங்க ஒனும் பண்ண மாதிரியும் தெரியல. புது கண்டுபிடிப்புக்கு இந்தியால உக்குவிகறதா சேதிஎ இல்ல. இதெல்லாம் பார்த்தால் இவங்க ச்விச்ஸ்ல போட்ட பணம் இங்க வந்தா தேர்தல்ல செலவு செய்யலாம், லாபம் ஈட்டலாம் மற்றும் பல. அதுக்காக திட்டமிட்டு இந்திய ரூபாய்ன் மதிப்பை குறைபதாக தெரிகிறது. சமிபத்தில் ச்விச்ஸ்ல இந்திய பணம் சேமிப்பு குறைவதாக வந்த சேதி இதை உறுதி செய்கிறது
Rate this:
5 members
0 members
11 members
Share this comment
Cancel
mk - chennai  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201315:27:54 IST Report Abuse
mk unஉங்க சொத்தி்லிருந்து சறிதளவு வெளியெ இறக்குங்க இந்தி்யாவின் மொத்த பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்
Rate this:
4 members
0 members
19 members
Share this comment
Cancel
solai - singapore.  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201315:07:47 IST Report Abuse
solai முதலில் அரசியல்வாதி்களுக்கு வரி ஏத்தனும் சட்டம் போடுறதும் நீங்க தான் அதை ஏமாற்றுவதும் நீங்கதான் ஓட்டு போட்ட நாங்க என்னடா பண்ணமுடியும்
Rate this:
2 members
0 members
17 members
Share this comment
Cancel
Luminie Hauzaen K - Chennai,இந்தியா
31-ஜூலை-201314:48:49 IST Report Abuse
Luminie Hauzaen K ரூம் போட்டு யோசிப்பாங்களோ, எப்படியெல்லாம் மக்களை கொள்ளைஅடிகலாம்னு....
Rate this:
2 members
0 members
16 members
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
31-ஜூலை-201314:40:09 IST Report Abuse
Rangarajan Pg இப்போது தங்கம் வாங்காதீர்கள், அது ஆடம்பர பொருள் என்பார். பிறகு முழு வயிறு சாப்பாடு சாப்பிடாதீர்கள் அது கூட ஆடம்பர பொருள் தான் என்பார்.
Rate this:
3 members
0 members
35 members
Share this comment
Cancel
Jayakumar - Tirunelveli  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201314:19:32 IST Report Abuse
Jayakumar INDIA means TAX (CORRUPTION)
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Cancel
kannan.v - coimbatore.1  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201314:11:21 IST Report Abuse
kannan.v ஆடம்பர பொருட்கள் எவை அரிசி கோதுமை இவை முக்கிய ஆடம்பர பொரூட்கள்இவைகளுக்கு வரிகூட்டூ னா போதும் ப சி யின் கருணையால் மக்கள் மடிந்து போவார்கள் அப்போது சொல்லலாம் இதுஎங்கள்ஆட்சீ செய்தது என்று மார்தட்டீசொல்லலாம் என்ன சிதம்பரம் அவர்களே
Rate this:
2 members
0 members
19 members
Share this comment
Cancel
Gunasekaran - pudhucherry,இந்தியா
31-ஜூலை-201313:53:28 IST Report Abuse
Gunasekaran கூட்டணி 2 என்பது 2ஜி கூட்டணி 3 என்பது 3ஜி யா? புரிஞ்சி போச்சு..
Rate this:
3 members
0 members
19 members
Share this comment
Cancel
Gunasekaran - pudhucherry,இந்தியா
31-ஜூலை-201313:50:16 IST Report Abuse
Gunasekaran இவர் கூற்றுப்படி ஊழலை அனுமதிக்காததுதான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார். எனவே, டாலர் மதிப்பு கூடியது அமெரிக்காவில் ஊழல் அதிகரித்ததால்தான் என்பார். மக்கள் காதில் பூ சுற்றலாம். என்னிடம் முடியாது. கடைசியில் எங்களுக்கு ஒன்றும் தெரியாது, உங்களால்தான் என்று மக்களை குறை சொல்லிவிட்டு ஓடி விடுவார்கள். இவர்களுக்கும், இவர்களை ஆதரித்தவர்களுக்கும் மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
Rate this:
3 members
0 members
17 members
Share this comment
Cancel
Hari Doss - Pollachi,இந்தியா
31-ஜூலை-201313:28:37 IST Report Abuse
Hari Doss அப்படியே காங்கிரஸ் வந்தாலும் உம்மை யாரும் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. அதனால் ஆடுவதை எல்லாம் ஆடி முடித்து விடு கண்ணா
Rate this:
4 members
0 members
15 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.