தேர்தலை மனதில் வைத்தே தெலுங்கானா தனி மாநிலம்: காங். மீது மோடி குற்றச்சாட்டு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆமதாபாத்: வரப்போகும் 2014-ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்தே தெலுங்கானா விவகாரத்தில் அவசர முடிவு எடுத்திருக்கிறது காங். எனினும் இது தாமதமான முடிவு. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதை வரவேற்கிறேன் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி்த்தெலுங்கானா மாநிலம் உருவாக்க நேற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்.,செயற்குழு ஆகியன ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா தனி மாநிலம் உருவாக உள்ளது.தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது குறித்து முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.வின் பிரசாரக்குழு தலைவரான நரேந்திரமோடி தெரிவித்திருப்பதாவது,
தேர்தலை மனதில் வைத்தே முடிவு
ஆந்திர மக்களுக்கு டுவிட்டரில் மோடி எழுதி உள்ள கடிதத்தில், வரும் ஆக.11-ம் தேதி ஆந்திராவில் நடக்க உள்ள ‌பொதுக்கூட்டத்தில் உங்களை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தேன். அப்போது தெலுங்கானா குறித்த விவகாரத்தில் பா.ஜ.வின் நிலை என்ன என்பது குறித்த விரிவாக பேச இருந்தேன்.தற்போது தெலுங்கானா விவகாரத்தில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 9 வருடங்களாக‌ செய்த தவறினை மூடி மறைக்க இப்போது தெலுங்கானா விவகாரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. தெலுங்கானா விவகாரத்திற்காக காங். கட்சியை விமர்சித்து எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
2004-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வாக்குறுதி கொடுத்து , ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசு, தெலுங்கானா மக்களை பல ஆண்டுகளாக நம்ப வைத்து ஏமாற்றி விட்டு, இப்போது 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலையும், ஆந்திராவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையும் மனதில் வைத்து தான் இந்த அவசர முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், தாமதமாக தெலுங்கானா மாநிலம் உருவானது தெலுங்கானா பகுதி மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது 2000-ம் ஆண்டு ஜார்கண்ட், உத்தர்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.இது வாஜ்பாயின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31-ஜூலை-201316:25:13 IST Report Abuse
Nallavan Nallavan ஐயா தினமலர் ....... மேலும் சுமார் பதினைந்து மாநிலங்களில் இருந்து (தமிழகத்திலும் சேர்த்துத்தான்) இக்கோரிக்கை எழும் .... தமிழகத்தை இரண்டாகப் பெரித்தால் வட தமிழகத்தில் ஜாதி ஓட்டுக்களை வைத்து ராமதாஸ் கோலோச்ச விரும்புவார் ..... தேவைப்பட்டால் வட தமிழகத்தில் ஸ்டாலின் திமுகவுடன் கூட்டணி வைத்து தென் தமிழகத்தில் அழகிரி திமுகவின் கூட்டணியை நாடுவார் ...... இப்படி அவரவருக்கு (இந்தியா முழுவதும் உள்ள அரசியல் வியாதிகளுக்கு) அரசியல் அபிலாஷைகள் மாறுபடும் ..... ஆப்பசைத்த குரங்கின் நிலையாக காங்கிரசின் நிலை இனி மாறும் ..... காங்கிரஸ் ஆசைப்பட்டதற்கு மாறாக நடக்கும் ...... மோதிக்கு அரசியல் தெரியவில்லை ....... இது அவர் மகிழ வேண்டிய நேரம் .....
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
31-ஜூலை-201315:58:20 IST Report Abuse
KMP ஆமாம்
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
31-ஜூலை-201315:49:06 IST Report Abuse
ksv நல்லது மற்ற பிரிவுகளுக்கு என்ன காரணம் சொல்லவரிங்க நிறைய சிறு மாநிலங்கள் உருவாவதை வரவேற்கிரிர்களா?
Rate this:
Share this comment
Cancel
MarkaAlagan - hocinminh city,வியட்னாம்
31-ஜூலை-201315:24:02 IST Report Abuse
MarkaAlagan சரி அதற்க்கு இப்ப என்ன ? நிர்வாக காரணங்களுக்காக எப்படியோ தனியாக ஒரு மகாணம் உருவாகியுள்ளது
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
31-ஜூலை-201314:58:33 IST Report Abuse
Tamilar Neethi குஜராத்தை கூட சில சிறு மாநிலமாக பிரித்து பல முதல்வர்கள் ஏற்படுதலாம். மோடி PM ஆகிவிட்டால் ????? ஆள்வதற்கு எளிதாக இருக்கும் . இந்தியாவில் வட்டிக்கு விடும் குஜாராத்திகள் வாழ்த்த பகுதி , பான்மசாலா விற்கும் குஜராத்திகள் வாழ்த்த பகுதி , தொழில் அதிபர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் குஜராத் , வெளிநாட்டில் கொடிகட்டி பறக்கும் குஜராத்திகள் வாழ்ந்த பகுதி என்று எதோ ஒரு காணக்கை கொண்டு பிரித்து விடலாம். பாவம் இந்த மோடி போல சந்திரபாபு நாய்டு PM பதவிக்கு ஆசைபட்ட்வர் , இப்போது ஆளைகாணோம் , இரு அந்த்ராவில் கடுகாய் ஆகிபோனார். இந்த காங்கிரஸ் எதோ செய்து, பூதம் போல வரும் நபர்களை புஷ் வாணம் அக்கி போடுது. இதுதான் பிரித்து ஆளும் சூட்சி.
Rate this:
Share this comment
Cancel
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
31-ஜூலை-201314:50:37 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி மாநிலம் பிரிக்கப்பட்டது கவலை தரும் விஷயம்,, ஆனா உங்க கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் சன்னார்,, மோடி பிரதமர் ஆனால் முதலில் போடப்போகும் கய்யெலுத்து தனி தெலுங்கானாவுக்கெ ன்னு கொக்கரிச்சாரு ,, காங் க்கு தாங்குமா???? இவன் வந்து என்னெத்த கிழிக்கிறது..-.. நமக்கு தான் கிழிக்கிரதுனா ஈஸியாச்சே ன்னு சோனியா கிழிச்சாங்க.. நாட்டோட நிர்வாக செலவு கூடுது.., வேறென்ன, தம்மாதூண்டு மாநிலத்த ரெண்டு பேர் ஆண்டு, ரெண்டு பேர் கொள்ள அடிக்க போறாங்க..
Rate this:
Share this comment
Cancel
ram prasad - Sri rangam,இந்தியா
31-ஜூலை-201314:02:40 IST Report Abuse
ram prasad இருந்துட்டு போகுது உமக்கு ஏன் எரியுது ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-ஜூலை-201313:13:51 IST Report Abuse
Pugazh V இனி ஆளாளுக்குப் பிரிவினை கேட்பார்கள். ஆனால் மோடி என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை..// அவசர முடிவு, தாமதமாக எடுக்கப்பட்டிருக்கிறது, எனினும் வரவேற்கிறேன்// ஏதாவது புரிகிறதா? பதவிப் பித்து தலைக்கேறியதால் இனியும் இது மாதிரி விசித்திரக் கருத்துக்களை மோடி மேலும் உதிர்ப்பார் என்று நம்பலாம்.
Rate this:
Share this comment
Cancel
இளங்கோ - chennai,இந்தியா
31-ஜூலை-201312:52:16 IST Report Abuse
இளங்கோ தேர்தலை வைத்து தான் பெரும்பாலான கட்சி முடிவுகள் எடுக்கபடுகின்றன. அவற்றால் கேடு விளையாத வரை O K தான்..
Rate this:
Share this comment
Cancel
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
31-ஜூலை-201312:28:04 IST Report Abuse
S.MAHESH KUMAR காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தன்மானத்தையும் இழந்து, நாட்டையும் அடகு வைக்க தயார் நிலையில் தான் உள்ளது. இல்லையென்றால் கையெழுத்து போட்டி நடந்திருக்குமா. (எம்பிக்கள் செய்த வெட்கக்கேடானா செயல் )பழியை இப்போது சுயேச்சை சுமந்து கொண்டுள்ளார். இதுவும் ஒரு பிரிவினை வாதத்திற்கு அச்சாரமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்