Video shows Pakistani soldier sharing details of Kargil martyr Captain Kalia's encounter | கார்கில் போர்: கேப்டன் காலியா கொல்லப்பட்டதை அம்பலபடுத்திய மாஜி வீரர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கார்கில் போர்: கேப்டன் காலியா கொல்லப்பட்டதை அம்பலபடுத்திய மாஜி வீரர்

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013 | கருத்துகள் (1)
Advertisement
கார்கில் போர்: கேப்டன் காலியா கொல்லப்பட்டதை அம்பலபடுத்திய மாஜி வீரர்

புதுடில்லி: கார்கில் போரின் போது பாகிஸ்தான் படையினரிடம் சிக்கிய இந்திய கேப்டன் எப்படியெல்லாம் சித்ரவதை செய்யப்பட்டார் என்பதனை சக வீரர் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே, 1999ம் ஆண்டு, ஜம்மு - காஷ்மீரின், கார்கில் பகுதியில் போர் நடந்தது. பனி சூழ்ந்த மலைப் பகுதியில், மூன்று மாதங்கள் நடந்த இந்தப் போரில், இந்தியா வெற்றி பெற்றது.போரின் போது, கார்கில் பகுதியின் கக்சார் என்ற இடத்தில், சிப்பாய்கள், அர்ஜுன் ராம், முலா ராம், நரேஷ் சிங், பன்வர் லால் மற்றும் பிகா ராம் ஆகியோருடன், கேப்டன், சவுரவ் காலியா, ரோந்து சென்று கொண்டிருந்தார்.ராணுவத்தின் முன்னணி படைப் பிரிவுகளில் ஒன்றான, ஜாட் படைப் பிரிவை சேர்ந்த, சவுரவ் காலியா தலைமையிலான வீரர்களை, பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்றது.
கடும் சித்ரவதை செய்த பாக்.ராணுவம்
22 நாட்களாக அவர்களை தங்கள் பிடியில் வைத்திருந்த பாகிஸ்தான், மிகவும் கொடுமையாக, கேப்டன் காலியாவை சித்ரவதை செய்து கொன்றது.பற்களை உடைத்தும், உடல் முழுவதும், சிகரெட்டால் சுட்டும், தலை முடியை பிய்த்தும், எலும்புகளை நொறுக்கியும், ஆணுறுப்பை நறுக்கியும், மிகவும் கொடூரமாக சித்ரவதை செய்ததில், கேப்டன் காலியா இறந்தார்.போருக்கு பின், அவர் உடலை, இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்த போது, காலியா கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டது தெரிந்தது. இந்த விவகாரம் கடந்த ஆண்டு நவம்பரில் தான் தெரிய வந்தது. இந்திய அரசும் இதனை பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளதாக புகார் எழுந்தது.
தன் மகன் கேப்டன் காலியா, பாகிஸ்தான் ராணுவத்தால், சித்ரவதை செய்து கொல்லப்பட்டதை தாமதமாக அறிந்த, அவர் தந்தை, ஓய்வு பெற்ற விஞ்ஞானி, டாக்டர் என்.கே.காலியா, சுப்ரீம் கோர்ட்டை அணுகி, தன் மகன் கொல்லப்பட்ட விதம் குறித்து, சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, பாகிஸ்தானை மன்னிப்பு கேட்கச் செய்ய வேண்டும் என கோரி வருகிறார்.
வீடியோவில் உண்மையை அம்பலத்திய வீரர்
இந்நிலையில் கார்கில் போரில் பங்கேற்ற சகவீரர் ஒருவர் தனது போர் அனுபவங்களை சமூக வலைதளமான யூ டியூப்பில் வீடியோ காட்சிமூலம் தெரிவித்து அதிர்ச்சி தகவலை அளித்தார். அதில், பாகிஸ்தான் படையினர், தங்களிடம் சிக்கிய கேப்டன் காலியா உள்ளிட்டோரை கடும் சித்‌ரவதைகளுக்கு ஆளாக்கினர். ஆனால் இந்த சம்பவம் நடைபெற்றதாக அப்போதைய ராணுவ அதிகாரியான , முஷராப் காட்டிக்கொள்ளாமல் மறைத்து விட்டார். போரின் போது துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக இந்தியாவிடம் உடல்களை ஒப்படைத்துள்ளனர். இதன் மூலம் உண்மையை பாகிஸ்தான் மூடி மறைத்து விட்டது என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201316:28:08 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) துப்பாக்கி படத்தில், இப்படி ஒரு காட்சியை வைத்ததற்கு தான் போராட்டம் நடத்தினார்கள்.இந்திய ராணுவம் கவலைபடாமல் தீவிரவாதிகளை வேட்டையாட வேண்டும். பகவான் துணையிருப்பான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை