, Durga's battle: Suspended IAS officer may face chargesheet; she took on sand mafia | நேர்மை பெண் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட் : நியாயப்படுத்தும் அகிலேஷ் அரசு | Dinamalar
Advertisement
நேர்மை பெண் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட் : நியாயப்படுத்தும் அகிலேஷ் அரசு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

லக்னோ : உ.பி.,யில், மணல் மாபியாக்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுத்த, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதால், மத்திய அரசு தலையிடும் அளவிற்கு சென்றுவிட்டது.
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்கு, கவுதம புத்தா நகர் பகுதியில், துர்கா சக்தி நக்பால், 28, என்ற பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, 10 மாதங்களுக்கு முன், உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதுமே, கவுதம புத்தா நகர் பகுதியில், நீண்ட காலமாக அராஜகத்தில் ஈடுபடும், மணல் மாபியாக்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுத்தார். மணல் மாபியாக்களை, கைது செய்து, உள்ளே தள்ளினார். இதனால், துர்காவுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்தினம், உ.பி., மாநில அரசு, துர்காவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில் துர்கா மீது உ.பி. அரசு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. மேலும் துர்கா மீது வழிபாட்டு தலத்தின் சுவரை, எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமலும், முறையான விதிமுறைகளை பின்பற்றாமலும், இடிக்க உத்தரவிட்டதாக வழக்கு தொடரப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், இது குறித்து அவர் 10 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. உ.பி., மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு, பா.ஜ., - காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி துர்கா விவகாரம் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வரை சென்றுவிட்டது. இது குறித்து உரிய அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதான நடவடிக்கை குறி்த்து, உபி. அரசின் விவகாரங்களில் தலையிட முடியாது. எனினும் தவறு நடந்திருந்தால், அம்மாநில அரசுடன் பேச்சு வார்‌த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதுகுறித்து அம்மாநில அமைச்சர் சிவபால் யாதவ் கூறுகையில், , துர்கா நிர்வாகத்திற்குட்பட்ட கவுதமபுத்தா நகரில் மணல்கொள்ளை அவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குவாரிகளில் நடக்கவே இல்லை, அவரது அறிக்கை தவறானது என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhananjayan - Chennai,இந்தியா
02-ஆக-201300:28:29 IST Report Abuse
Dhananjayan வல்லவன் நல்லவனாக இல்லாவிட்டால் இம்மாதிரி நடப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆண்டவனிடம் அழுது முறை இட்டாலும் ஆள்பவனை / வல்லவனை என்ன செய்ய முடியும் இது போன்று புலம்புவதை தவிர.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nagarajan Thamotharan - Chennai,இந்தியா
01-ஆக-201316:32:21 IST Report Abuse
Nagarajan Thamotharan மண் அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகளை அரசு எப்படித்தான் விளக்கினாலும் திருகிரவர்கள் ஓய்ந்தபாடில்லை. வீட்டு தேவைக்கு மண் அள்ளுவதை அனுமதித்து விட்டு வியாபார நோக்குடன் மணல் அள்ளுவதற்கு குறைந்த பட்ச லெவி வசூல் செயலாம். வியாபாரத்திற்காக அள்ளப்படும் எல்லா விதமான மண்ணிற்கு அதற்க்கு தகுந்தால் போல லெவி வசூலிக்க பட வேண்டும். அதனை கண்காணிக்க கிராம நிர்வாகிகள் ஒப்பந்த்ததின் அடிப்படையிலோ அல்லது நெடுஞ்சாலை சுங்கசாவடி போல அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா வாரியாக செயல்படுத்த வேண்டும். இதனால் அரசுக்கு வருமானம் கூடுவதுடன் கிராம புற படித்தவர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது . மாறாக தடை விதிப்பதாலோ / அபராதம் விதிப்பதலோ மணல் கடத்தல் குறைய வாய்ப்பில்லை / அது ஒரு கண்துடைப்பு செயலாகவே தோன்றுகிறது. பலமுறை மணல் அள்ளிவிட்டு பெயருக்காக ஒரு முறை வழக்கு பதிஉ செய்தால் அரசுக்கு என்றாவது ஒருநாள் தான் வருமானம் கிடைக்கும். அரசு விரைந்து செயல்படுமானால் இது போன்ற நிகழ்சிகள் நடைபெறாமல் தடுக்கவும் / நிரந்தர வருமானம் பெற வழிவகை செயலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
01-ஆக-201313:16:47 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் ரௌடிகள் மட்டுமே அரசியலில் இருக்கும் உபி-இல் இந்த தைரியலட்சிமியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இந்திய உருப்பட வேண்டும் என்றால் நேர்மையான அதிகாரிகள், அரசியல் தலையீடு இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இங்கு இருப்பவர்களில் திறமையை ஒழுங்காக உபயோகபடுத்தாவிட்டாலும், திறமையாக செயல்படும் அதிகாரிகளை தடுக்காமல் இருந்தால் கூட போதும். யார் கொண்டு வருவார் அந்த மாற்றத்தை?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Ragunathan - Kumbakonam,இந்தியா
01-ஆக-201311:56:49 IST Report Abuse
Ragunathan மேடத்தின் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்..
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
Ragunathan - Kumbakonam,இந்தியா
01-ஆக-201311:54:51 IST Report Abuse
Ragunathan நல்ல அரசாங்கம் பா.. நல்லது செஞ்சா புடிக்காதே..
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Mr. Right - Delhi, ,இந்தியா
01-ஆக-201311:22:45 IST Report Abuse
Mr. Right ////// உ.பி.,யில், மணல் மாபியாக்களுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை எடுத்த, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, "சஸ்பெண்ட்'///// நேர்மைக்கு கிடைத்த பரிசு............
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
K.Baskar - Tiruvallur,இந்தியா
01-ஆக-201310:12:43 IST Report Abuse
K.Baskar இந்தியாவில் எந்த IAS அதிகாரி நியாயமாக செயல் பட்டாலும் இந்த நிலைதான்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
01-ஆக-201309:24:36 IST Report Abuse
S.MAHESH KUMAR முலாயமின் சொத்து குவிப்பு வழக்கே தள்ளுபடி செய்த காங்கிரஸ் அரசு இவர் மீது கருணை காட்டவா போகிறது. ஆனால் ஒரு நாள் நிச்சயம் நீதி கிடைக்கும். நம்பிக்கையோடு ..............................
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
MANUSHI - chennai,இந்தியா
01-ஆக-201308:42:52 IST Report Abuse
MANUSHI அரசியலில் கலெக்டர் அதிகம் பந்தாடபடுகிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
01-ஆக-201307:26:56 IST Report Abuse
Sami அட அட என்ன ஒரு அருமையான செயல்பாடு. நம்ம நாட்டின் நிர்வாக திறமையை பற்றி படிக்கும்போதே புல்லரிக்குது. எதோ படிச்சமா, பரிட்சைல தேறி அதிகாரி ஆனோமா, அப்புறம் பெயரளவுக்கு பதவியை பயன்படுத்தினோமா என்று இல்லாமல் இப்படி நல்லதா யோசிச்சா எங்களுக்கு என்றுமே புடிகாதம்மா. அதான், கொஞ்சம் மிரட்டி பார்க்கிறோம். இதுவே கொஞ்சம் அதிகமான, இருக்கவே இருக்கு எமலோக வழி. புரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன். இல்லன்னா நல்லா இரும்மா, அவ்வளவுதான் சொல்லிபுட்டேன்.
Rate this:
1 members
0 members
39 members
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
01-ஆக-201311:23:06 IST Report Abuse
K.Sugavanamஇந்த லட்சணத்தில பி எம் ஆகவேண்டும் என்ற ஆசை வேறு...இவங்கல்லாம் நாடாண்டா.......நம்ம தலை எழுத்து.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்