கூர்காலாந்து தனி மாநிலமா?: பிரிக்க விடமாட்டேன் என்கிறார் மம்தா
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதை தொடர்ந்து மேற்கு வங்கத்தையும் இரண்டாக பிரித்து கூர்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதுதொடர்பாக முதல்வர் மம்தாபானர்ஜி , கூர்காலாந்தை பிரிக்க விடமாட்டேன் என்றார். இந்தியாவின் 4-வது மிகப்பெரிய மாநிலம் என அழைக்கப்படும் ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க நேற்று நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்திலும், காங். செயற்குழு கூட்டத்திலும் நடந்த நீண்ட விவாதத்தின் போது, ஒப்புதல் தரப்பட்டது.
இதன் ‌எதிரொலியாக , மேற்குவங்க மாநிலத்திலும் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை கூர்காலாந்து தனிமாநிலமாக அறிவிக்க கோரி கூர்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா 72 மணி நேர பந்த்தினை நடத்தி வருகிறது. இந்த பந்த்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளர். இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ,கூர்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா கட்சியின் பொது‌ச்செயலர் ரோஷன் கிர், மத்திய அரசு, மற்றும் மேற்கு வங்க அரசு ஆகியோரிடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி கூர்காலாந்து டெரிடோரியல் அட்மினிஸ்ட்ரேசன் (ஜி.டி.ஏ.) அமைக்கப்பட்டதற்கான ஒப்பந்தத்தினை பத்திரிகையாளர்களிடம் ‌காண்பித்தார். பின்னர் அவர் பேசியதாவது, மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு பகுதியாக கூர்காலாந்து இருக்கும். இதனை பிரித்து தனி மாநிலம் உருவாக்கப்படாது . மத்திய அரசு தலையிட்டு, போராட்டக்காரர்களிடம் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து விளக்கம்வேண்டும். அவர்கள் தான் தேவையில்லாமல் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர் என்றார்.

ஆந்திராவில் முழு அடைப்பு
இதனி‌டையே தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் அம்மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு ஆந்திராவில் ஆளும் காங்., கட்சி முதல்வர் கிரண்குமார் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பதவி விலகுவேன் எனவும் மிரட்டி வந்தார்.எனினும் காங்., நேற்று அதிரடியாக அறிவித்தது. இதனால் நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா அறிவிக்கப்பட உள்ளது.
6 அமைச்சர்கள் ராஜினாமா

தெலுங்கானா அறிவிப்பு மூலம் மத்திய அரசின் முடிவு தனக்கு வேதனை அளிக்கிறது என்றார். இந்நிலையில் ஆந்திராவின் கடலோர பகுதி, விஜயவாடா, திருப்பதி, ராயலசீமா, ஆனந்தபூர் ,சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. திருப்பதிக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திருப்பதி செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. திருப்பதியில் நடந்த பந்த்தின் போது தெலுங்கானா எதி்ர்ப்பு அமைப்பினர் கார்களுக்கு தீ வைத்தனர். இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்திற்கு எதி்ர்ப்பு தெரிவித்து குண்டூர் எம்.பி. சம்பாசிவராவ், மற்றும், கிரண்குமார் ரெட்டி அமைச்சரவையில் 6 அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதத்தினை முதல்வரிடம் கொடுத்தனர். இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தை பிரித்து கூர்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சியினர் 72 மணி நேர பந்த்திற்கு அழைப்பு விடுத்து நடத்தி வருகின்றனர். இதனால் அங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ksv - chennai,இந்தியா
01-ஆக-201313:05:20 IST Report Abuse
ksv வாமா மின்னலு கூட்டு சேர்ந்து வியாபாரம் பண்ணிட்டு இப்போ குத்துது குடையுதுணா எப்புடி?
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
01-ஆக-201304:49:44 IST Report Abuse
Thangairaja ஒரு தீதி நாலா பிரிக்கனும்குது, இந்த தீதி ஆட்சில இருக்கறதால உட மாட்டேங்குது......இந்த தலைவிகளோட அட்டகாசம் தாங்க முடியலை.
Rate this:
Share this comment
Cancel
01-ஆக-201304:15:53 IST Report Abuse
vethapuram thayumanavangnanavel தமிழ்நாட்டூயும் இரண்டு பண்னினால் விரைவில் வளற்சியடையூம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்