வெடிபொருள் கடத்திய இலங்கை அகதிக்கு 11 ஆண்டு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிபொருள் கடத்திய இலங்கை அகதிக்கு 11 ஆண்டு சிறை

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகை: வெடிபொருட்களை கடத்திய இலங்கை அகதிக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இலங்கை மாதாலையை சேர்ந்த அருமைநாயகன் மகன் இத்தாலிராஜன் என்ற சவுந்தரராஜன். இவர் திருச்சி கே.கே.நகர் வெளிப்பகுதி முகாமில் தங்கியிருந்தார். 2012 மார்ச் 18 ம்தேதி வேளாங்கண்ணி புத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் நாகை கியு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சவுந்தரராஜனை சோதனையிட்ட போது அவரிடம் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், சார்டிலைட் போன் மறைத்து வைத்து இருந்தார். மேலும் விசாரணையில் ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளை அனுப்ப படகு தயாரித்ததும் தெரியவந்தது. இவரை கைது செய்த போலீசார் நாகை தலைமை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சீனிவாசன் சவுந்தரராஜனுக்கு 11 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை