வேலூர் சிறையில் நளினி திடீர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் சிறையில் நளினி திடீர் கைது

Updated : ஜூலை 31, 2013 | Added : ஜூலை 31, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராஜிவ் கொலைக் குற்றவாளி நளினி, திடீரென இன்று, கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2010 ஏப்ரல், 20ம் தேதி, சிறையில் நளினியின் அறையில் நடந்த சோதனையில், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நளினியை கைது செய்து, ஆகஸ்ட், 6ம் தேதி, ஆஜர் படுத்தும்படி நீதிபதி, "பிடி வாரன்ட்' பிறப்பித்தார். இதை அடுத்து, பாகாயம் போலீசார், நளினியை இன்று கைது செய்தனர். இதனால் , ஆகஸ்ட், 6ம் தேதி, கோர்ட்டில் நளினி ஆஜர் ஆவார் என, போலீசார் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை