Address TN's concerns in Food Bill: Jayalalithaa tells PM | உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகள்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகள்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Added : ஆக 03, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
Address, TN,concerns,Food Bill,Jayalalithaa,PM,உணவு பாதுகாப்பு சட்டம், குறைபாடுகள், பிரதமர், முதல்வர், ஜெயலலிதா, கடிதம்

சென்னை: "உணவு பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும்; மத்திய அரசு கொண்டு வர உள்ள, உணவு பாதுகாப்பு மசோதாவில், திருத்தங்களை கொண்டு வர வேண்டும்' என, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசு தன்னிச்சையாக, அவசர கதியில், "தேசிய உணவு பாதுகாப்பு அவசர சட்டம் - 2013' என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இச்சட்டம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, உணவுப் பொருளை பற்றாக்குறை இல்லாமல் செய்வதாக, வாக்குறுதி அளித்துள்ளது.


ஏமாற்றம்:

ஆனால், சட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அவை அனைவரின் மனதிலும், சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், உணவு வினியோக திட்டம், அனைவரும் பாராட்டும் வகையில், சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, தமிழகத்திற்கு, மத்திய அரசு மாதந்தோறும், 2.96 லட்சம் டன் அரிசி வழங்குகிறது. புதிய சட்டம் அமலாக்கப்பட்டால், தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்கப்படும் அரிசியின் அளவு, 1.96 லட்சம் டன்னாகக் குறைந்து விடும். எனவே, உணவு பாதுகாப்பு சட்டத்தில், சில திருத்தங்களை சேர்க்க வேண்டும். லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் மசோதாவில், இவை இடம் பெற வேண்டும். உணவு பாதுகாப்பு அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தில், ஏற்கனவே பொது வினியோக முறையின் கீழ், இதை விட அதிகமானவர்களுக்கு, உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வந்தால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும், உணவு தானியத்தின் அளவை, மத்திய அரசு குறைக்கக் கூடாது. உணவு தானிய அளவை குறைக்காவிட்டால் தான், சம்பந்தப்பட்ட மாநிலங்கள், அந்தியோதயா அன்னயோஜனா, வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்போர், மேல் இருப்போர் ஆகியோருக்கு வழங்கும், உணவு தானியம், தொடர்ந்து அதே அளவு கிடைக்கும்.

* தேசிய அளவில், 75 சதவீதம், ஊரக மக்களும், 50 சதவீதம் நகர்ப்புற மக்களும், மானிய உணவு தானியங்களைப் பெற, தகுதி உடையவர்களாக மனதில் கொண்டு, அரசு மானியத்தோடு கூடிய, உணவுப் பொருள் சேர்க்கப்படுவதற்கு, இந்த அவசர சட்டத்தின் 3(2)ம் பிரிவு வகை செய்கிறது. நகர்ப்பகுதிகளில், உணவு உற்பத்திக்கு வழியில்லை. எனவே, நகர்ப்பகுதிக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு, 100 சதவீதம் அல்லது குறைந்த பட்சம், 75 சதவீதம் இருக்க வேண்டும்.


* முதலாவது அட்டவணைப்படி, இப்போதுள்ள விலைக்கேற்ப மத்திய அரசு, மாநில அரசகளுக்கு உணவு தானியங்களை அளிக்க வேண்டும். இதற்கு, மூன்று ஆண்டுகால வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை, விலக்கிக் கொள்ள வேண்டும்.


* வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு, உணவு தானியங்கள் சற்று கூடுதல் விலைக்கு அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து அமலாக்க, மத்திய அரசு, உணவு தானியத்தை, இப்போதுள்ள அளவுப்படியே தொடர்ந்து வழங்க வேண்டும். லோக்சபாவில், உணவு பாதுகாப்பு அவசர சட்டத்திற்கு பதிலாக, மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தேசித்துள்ள, உணவு பாதுகாப்பு மசோதாவில், இந்த திருத்தங்களை சேர்க்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangairaja - tcmtnland,இந்தியா
04-ஆக-201304:51:17 IST Report Abuse
Thangairaja முதல்வரின் கோரிக்கை நியாயமானது தான். உள்ளதையும் குறைக்கும் திட்டத்தை நாம் ஏன் ஏற்று கொள்ள வேண்டும். அதே நேரம், நகர்புறத்தின் சிலர் மட்டும் பலன் பெரும் இட்லிக்கடைக்கு மானிய விலையில் அரிசி வேண்டுமென்றெல்லாம் கேட்ககூடாது.
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
04-ஆக-201303:57:47 IST Report Abuse
Sekar Sekaran நுணுக்கமாக ஆராய்ந்து சரியான கோரிக்கையை அம்மா அவர்கள் வைத்துள்ளார்கள். சட்டத்தில் ஏற்க்கனவே ஏகப்பட்ட ஓட்டைகள்..ஏன் இவ்வளவு அவசரமாக இந்த சட்டத்தை பார்லியில் வைக்குமுன்னரே சட்டமாக்க பார்கின்றனர் இந்த காங்கிரசார்? ஓட்டுக்களை குறிவைத்து செய்கின்ற அவசர காரியம்தானே? மக்களின் நல்வாழ்விற்க்காக அல்ல..அதனைத்தான் அம்மா அவர்கள் கோரிக்கையாக வைக்கின்றனர். தமிழகத்தில்தான் பசி என்கிற சொல் மறைந்துள்ளது. நாட்டில் பிறபகுதிகளில் கேட்கின்ற அந்த அவல நிலையை தமிழகத்தில் இல்லாமல் செய்ததே அம்மாவின் அபார சாதனை.கோவில்களில் பள்ளிகளில் அம்மா உணவகங்களில் பசி நீக்கும் அருமருந்தாக அம்மாவின் செயல்பாடுகள் சிறப்பாக மிக சிறப்பாக் உள்ளதால்..மத்திய அரசாங்கம் அம்மாவின் ஆலோசனையை கேட்டு நடப்பதே சிறந்தது..பாரத தலைவர்களில் இப்போதைக்கு அம்மாவுக்கு எல்லா தகுதிகளும்..முதலிடத்தில்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X