ராணுவம் ஆக்கிரமித்த வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைப்பு| Dinamalar

ராணுவம் ஆக்கிரமித்த வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைப்பு

Updated : ஆக 06, 2013 | Added : ஆக 06, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொழும்பு: இலங்கையின், யாழ்ப்பாணத்தில், தமிழர் வீடுகளை ஆக்கிரமித்திருந்த ராணுவத்தினர், 77 வீடுகளை, உரியவர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான சண்டை, 2009ல் முடிந்தது. விடுதலை புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதால், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், ராணுவத்திடம் சரணடைந்தனர். இதையடுத்து, யாழ்ப்பாணத்தை, ராணுவம் தன் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது. அங்குள்ள தமிழர்கள் வீடுகளை, வாடகைக்கு எடுத்து, ராணுவ வீரர்கள் தங்கிவிட்டனர். தமிழர் நிலங்கள் பலவற்றையும், ராணுவத்தினர் பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே, வடக்கு மாகாணத்தில், அடுத்த மாதம், 21ம் தேதி, தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. "தேர்தல் நடக்கும் இடங்களில், ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும்' என, தமிழ் கட்சிகள் கோரியுள்ளன. சர்வதேச அளவிலும் இந்த கருத்து வற்புறுத்தப்பட்டது. இதையடுத்து, யாழ்ப்பாணத்தில், 77 வீடுகள் மற்றும் 29 நிலங்களை, ராணுவத்தினர் கடந்த வாரம், உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
07-ஆக-201306:52:27 IST Report Abuse
kumaresan.m " வாடகைக்கு மாதம் மாதம் பணம் தந்தார்களா ???
Rate this:
Share this comment
Cancel
kuchipudi gumma - chennai,இந்தியா
06-ஆக-201322:12:13 IST Report Abuse
kuchipudi gumma நல்லவை நடக்க தொடங்கட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை