BJP may delay announcement of Modi as PM candidate | பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவது எப்போது?| Dinamalar

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவது எப்போது?

Added : ஆக 11, 2013 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பா.ஜ., பிரதமர், வேட்பாளர், மோடி,BJP, announcement,Modi,PM, candidate

புதுடில்லி:பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்படுவது எப்போதுஎன்பது தொடர்பாக,பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:அடுத்த எட்டு மாதங்களில், லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது.அதனால், பா.ஜ.,வின்பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிப்பது தொடர்பான, ஆலோசனைகள், கட்சியில் துவங்கி விட்டன.இருந்தாலும், இந்த ஆண்டு இறுதியில், டில்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெறவுள்ள, சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, மோடியை பிரதமர் பதவி வேட்பாளராகஅறிவிக்க, கட்சியின் மேல் மட்டத் தலைவர்களில், ஒரு பிரிவினர் தயங்குகின்றனர்.மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது சரியாக இருக்காது என்றும் நினைக்கின்றனர்.

சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, தேர்தல்களில், பா.ஜ., கட்சி தோல்வி அடைந்து விட்ட தால், அது மிகப்பெரிய பாதிப்பாக அமைந்து விடும்.காங்கிரசும், மற்ற கட்சிகளும், மோடியின் தலைமை பற்றிவிவாதிக்கவும், பெரிய வாய்ப்பாக அமைந்து விடும்.நான்கு மாநிலங்களில், ஆண்டு இறுதியில், நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களில், ம.பி., மற்றும் ராஜஸ்தானில், பா.ஜ., வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.சத்தீஸ்கர் மற்றும் டில்லி நிலைமையைப் பற்றி, இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது.

இந்த இரண்டுமாநிலங்களில், பா.ஜ., தோல்வி அடைந்தால் கூட, மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதே, தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழலாம்.அதனால், நான்கு மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின்னரே, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.இவ்வாறு பா.ஜ.,வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
11-ஆக-201321:56:45 IST Report Abuse
INDIAN nomo bro parunga ena nadakuthu nu ama modi ah pathi comments panringale pesama nenga pm ku nilunga thevai illama oru unmaiyana leader ah vimarsanam panathirgal
Rate this:
Share this comment
Cancel
Manidhan - India,இந்தியா
11-ஆக-201307:56:56 IST Report Abuse
Manidhan மத வியாதிகள் இந்திய மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஒதுக்கப்பட்டு இரண்டும் ஒன்றாக இருந்தால் அமெரிக்காவின் ஆயுத வியாபாரத்துக்கும் வேலை இல்லை இந்த போலி மத வாதிகளுக்கும் வேலை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
11-ஆக-201304:54:59 IST Report Abuse
Thangairaja எப்படியும் புலி வந்துடும்னே தோணறது. பட்டுப்போன காங்கிரசுக்கு மீண்டும் உயிர் கொடுத்து ஆட்சியில் ஏற்ற வேண்டுமானால் மோடிப்புலிக்கு மகுடம் சூட்டி வீதியுலா நடைபெற்றே தீர வேண்டும். பாஜகவில் உருப்படியான ஒரு தலைமையின் கீழ் வெற்றி பெற்று அரவணைத்து செல்லும் ஒரு பிரதமரை அடையாளம் காணுவோம் என்ற பக்குவம் வராமலிருப்பது காங்கிரசுக்கு ஒரு வரப்பிரசாதம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X