'Naked marriage' gaining acceptance in China: Survey | சீனாவில் பெருகி வரும் "நிர்வாண திருமணம்': சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் என இளைஞர்கள் நம்பிக்கை| Dinamalar

சீனாவில் பெருகி வரும் "நிர்வாண திருமணம்': சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் என இளைஞர்கள் நம்பிக்கை

Updated : ஆக 17, 2013 | Added : ஆக 15, 2013 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Naked marriage,China,சீனா, நிர்வாண திருமணம்,இளைஞர்கள், நம்பிக்கை

பீஜிங்: சீனாவில், "நிர்வாண திருமணம்' எனப்படும், புதிய வகை திருமண முறை, வேகமாக பரவி வருகிறது. இளைஞர்கள் பலரும், இவ்வகை திருமணத்தை பெரிதும் விரும்புவதால், அந்நாட்டில் இந்த திருமண முறைக்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சீனாவில், கடந்த, 13ம் தேதி, காதலர் தினம் கொண்டாடப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் பிப்., 14ம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டாலும், சீனாவில் சற்று வித்தியாசமாக, அந்நாட்டு பாரம்பரியத்தின் படி, காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், நாட்டில் பல பகுதிகளைச் சேர்ந்த காதலர்களும், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் பூங்காக்களுக்கு சென்று, காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது அந்நாட்டின், "டிவி' நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது. சீன இளைஞர்கள் எவ்வகை திருமணம் செய்ய விரும்புகின்றனர் என்ற வகையில், அந்த ஆய்வு அமைந்திருந்தது. சீனர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்யும் போது, மணமகள் வீட்டார், மணமகன் வீட்டாருக்கு, ஏராளமான வரதட்சணை கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன், பெருமளவு தானியங்களும், ஆடை ஆபரணங்களாகவே தரப்பட்ட இந்த வரதட்சணை, நாளடைவில் நாகரீக மாற்றத்திற்கேற்ப, கார், வீடு என உருமாறியது. இதனால், பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்வதில், ஏராளமான பொருட்செலவு ஏற்படுகிறது. இக்கால இளைஞர்கள் பலரும் இதை விரும்புவதில்லை. இதனால், இளைஞர்களில் சிலர், சில ஆண்டுகளுக்கு முன், வரதட்சணை பெறாமல், மிக எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. எனினும், அதிகப்படியான இளைஞர்கள் இந்த புதிய முறை திருமணங்களால் பெரிதும் கவரப்பட்டு, எளிய வகை திருமணங்களை செய்து கொண்டனர். பாரம்பரியத்தில் மூழ்கிய பலரும், இவ்வகை திருமணங்கள், "நிர்வாணத் திருமணங்களே' என, கேலி செய்தனர். முறையான சடங்குகள் பின்பற்றாமல் செய்யப்படுவதால், "ஆடையில்லாத மனிதனுக்கு ஒப்பானது' என, கூச்சலிட்டனர். பழமைவாதிகளின் எதிர்ப்புக் குரலையும், தங்களுக்கு உந்து சக்தியாக எடுத்துக் கொண்ட இளைஞர்கள், இவ்வகை திருமணத்திற்கு, "நிர்வாணத் திருமணம்' என்றே பெயர் சூட்டினர்.

கடந்த சில ஆண்டுகளாக, சீன இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவ்வகை திருமணங்கள், நாடு முழுவதும் வேகமாக பரவத் துவங்கியுள்ளன. "டிவி' நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற, 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், நிர்வாணத் திருமணத்தை ஆதரித்தனர். இவ்வகை திருமணம் செய்வதால், தேவையற்ற பொருட் செலவு குறைக்கப்படுவதாகவும், பெற்றோரின் மன உளைச்சலை குறைக்க முடிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். "ஆடம்பர திருமணத்திற்காக செலவிடப்படும் தொகையை சேமித்து, திட்டமிட்ட வாழ்க்கை வாழலாம்' என, கூறியுள்ளனர். அக்காலத்தில் இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்காகவே, வரதட்சணைகள் கொடுக்கப்பட்டதாகவும், இக்காலப் பெண்கள் அதிகம் படித்துள்ள நிலையில், கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பதால், வரதட்சணை, பெற்றோர் மீது சுமத்துப்படும் தேவையற்ற சுமை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ""புதிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், ஆடம்பரமற்ற திருமணங்களை பழமைவாதிகள், நிர்வாணத் திருமணம் என கேலி செய்தனர். நாங்கள் அதையே எங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, எங்களின் புதிய முயற்சிக்கு "நிர்வாணத் திருமணம்' என்றே பெயர் சூட்டியுள்ளோம்'' என, சீன இளைஞர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
22-ஆக-201307:07:13 IST Report Abuse
மு. தணிகாசலம் காதலை, காதல் என்றே பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. காதலை காதல் என்று சொன்னாலே, ஒரு வேளை அது முறிந்துவிட்டால், அதற்க்கு கண் காது மூக்கு வைத்து பேசி கொச்சைப்படுத்தி விடுகிறார்கள். எனவே, காதலை "பழகலாம் வாங்க" என்ற புதுப்பெயரிட்டு அழைக்கவேண்டும். அந்த "பழகலாம் வாங்க" வை யும், பெண் வீட்டார் பையன் வீட்டார் ஆகிய இரு தரப்பினரோடும் சேர்ந்து செய்யலாம்.
Rate this:
Share this comment
Cancel
சிவமுருகன் - Newyork,யூ.எஸ்.ஏ
20-ஆக-201313:24:38 IST Report Abuse
சிவமுருகன் தமிழ் நாட்டுல கல்யாணம் பண்ண மணப்பெண் கிடிக்றது இல்லை, அப்படியே கிடைத்தாலும், மணமகன் வீட்டார்தான் வரதச்சனை கொடுக்க வேண்டும், அப்புறம் மணப்பெண் போடுற கண்டிஷன், அமெரிக்க ஈரான் மேல போடுற கண்டிஷன் விட அதிகமா இர்ருக்கு, மேற்கு தமிழ் நாட்டின் தற்போதைய நிலை இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
MANUSHI - chennai,இந்தியா
16-ஆக-201316:52:41 IST Report Abuse
MANUSHI சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
Sadique - Tiruvarur,இந்தியா
16-ஆக-201316:12:05 IST Report Abuse
Sadique இஸ்லாம் எப்பவோ சொல்லிவிட்டது எளிய வகை திருமணத்தை எப்பொழுது தான் சீனர் கள் பின்பற்றி வருவது நல்ல முயற்சி
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
16-ஆக-201318:04:40 IST Report Abuse
மதுரை விருமாண்டிசொல்லி இருக்கலாம்.. நல்லதை எல்லா மதமும் தான் சொல்லுது.. எவன் கேக்குறான், அதைச் சொல்லுங்க..? அடிச்சிக்கிட்டு தானே சாகுறாங்க? என்ன நான் சொல்றது?...
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-ஆக-201320:08:46 IST Report Abuse
Pasupathi Subbianஎல்லா மதத்திலும் இந்த சிக்கனம் சொல்லப்பட்டுள்ளது ஆனால் அதை பின்பற்றுபவர்கள் யார் ?...
Rate this:
Share this comment
jpjp - thammampatti,இந்தியா
16-ஆக-201320:42:01 IST Report Abuse
jpjpஅய்யா உங்கள் மத விஷயத்தை எல்லா இடத்திலும் நுழைக்க வேண்டாம். கொஞ்சம் ஆம்பூர் , வாணியம்பாடி பக்கம் வந்து பாருங்கள். வரதட்சினை கொடுமை புரியும். எல்லா மதங்களும் நல்லதையே சொல்கின்றன. யார் பின் பற்றுகிறார்கள்?...
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
16-ஆக-201313:12:55 IST Report Abuse
பி.டி.முருகன்    ஆமாம். சமுதாயமாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.(). எல்லோரும் துறவிகளாகவும் துறவினிகளாகவும் மாறி விடுவார்கள். செக்ஸ் என்பது சீரோ என்பது தெரிந்து போகும்.
Rate this:
Share this comment
Mahendra Babu R - Chennai,இந்தியா
16-ஆக-201319:29:53 IST Report Abuse
Mahendra Babu Rஐயா, செய்தியை முழுசா படிச்சிட்டு கருது எழுதுங்க. வெறும் தலைப்பை மட்டும் படிச்சிட்டு கருது எழுதாதீங்க. 'நிர்வாண' துக்கும், இந்த செய்திக்கும் சம்பந்தமே இல்ல. வரதட்சணை இல்லாம திருமணம் பண்றாங்க, அதுக்குதான் அப்படி பேர் வெச்சி இருக்காங்க. காரணம் தெரிஞ்சிக்க செய்தியை முழுசா படிங்க. நன்றி....
Rate this:
Share this comment
Selvaraj B - coimbatore,இந்தியா
16-ஆக-201321:05:48 IST Report Abuse
Selvaraj Bசெய்தியை முழுமையாக படிக்கவும்...
Rate this:
Share this comment
Cancel
ingurkumar - mettupalayam ,இந்தியா
16-ஆக-201313:06:45 IST Report Abuse
ingurkumar சமீபத்தில் ஒரு திருமணத்துக்கு சென்று இருந்தேன் மணமக்கள் எளிமையான உடை அணிந்து இருந்தனர் . மணமகள் ஒரு நகை கூட அணியவில்லை . ..மணமக்களும் சரி அவர்கள் உறவினரகளும் , நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சி உடன் இருந்தார்கள் .வந்த விருந்தனர் அனைவரயும் மிக சிறப்பாக கவனித்து அனுபினார்கள் .இத்தனைக்கும் பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட திருமணம் தான் .. திருமண செலவுகளை எல்லாம் சமமாக பங்கிட்டு கொண்டார்கள் .வேற கொடுக்கல் ..வாங்கள் ஏதும் இல்லை .... திருப்தி .. கவுரவம் ..எல்லாம் எங்கே இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
ingurkumar - mettupalayam ,இந்தியா
16-ஆக-201312:48:02 IST Report Abuse
ingurkumar எந்த திருமணமாக இருந்தாலும் ..எந்த காலத்திலும் .. ஒருவனுக்கு ..ஒருத்தி ..ஒருத்திக்கு ..ஒருவன் என்கிற நெறி பிறழாமல் ..வாழ வேண்டும் . அது தான் மனித குணம் ..மாறினால் .அது மிருக குணம்
Rate this:
Share this comment
Cancel
jumbo ganesh - chennai,இந்தியா
16-ஆக-201312:45:21 IST Report Abuse
jumbo ganesh சீனாகாரன் இதுல கூட முன்னேறிட்டான். நம்ம மக்கள்?? கஷ்டம் தான்.
Rate this:
Share this comment
Mr. Right - Delhi, ,இந்தியா
16-ஆக-201315:31:34 IST Report Abuse
Mr. Rightநம்ம இதுலயாவது முன்னேறலாம்ன்னு பாத்தா.... ராமதாசு விடமாட்டாரே..........
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
16-ஆக-201312:44:13 IST Report Abuse
Sundeli Siththar வரதட்சணை இல்லாமல் எளியமுறையில் நடத்தப்படும், இந்தத் திருமணங்கள் வரவேற்கத் தக்கதே... அதேநேரம், திருமண நேரத்தில், பலரது வாழ்த்துக்களைப் பெறுவதன் மூலம், திருமண வாழ்வு சிறந்து விளங்கும். இதையும், உணர்ந்துக் கொண்டு, பெரியவர்கள் விட்டுக்கொடுத்து, இவ்வகைத் திருமணத்தை ஊக்குவிக்கவேண்டும். சீனாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும்.
Rate this:
Share this comment
Cancel
sasikumar - guangzhou,சீனா
16-ஆக-201311:24:06 IST Report Abuse
sasikumar சீனா வுல அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது . ஆண்கள் தான் டவுரி கொடுக்கவேண்டும் . ஆனால் அதுவொன்றும் கட்டாயம் இல்லை . பணம் நெறைய இருக்கிறவர்கள் கடமையாக செய்கிறார்கள். ஆனால் இரண்டு குடும்பத்தார்களும் நன்கு ஒத்துழைகிறாகள்.
Rate this:
Share this comment
Jegan - chennai,இந்தியா
16-ஆக-201318:59:35 IST Report Abuse
Jeganபணம் நிறை இருந்தால் நிறைய கல்யாணம் நிறை டைவர்ஸ் என்பதுதான் சீனாவில் நிலைமை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை