BJP's 10 commandments on media strategy for 2014 elections | தேர்தலை எப்படி எதிர்கொள்வது ? பா.ஜ., 10 கட்டளைகள்| Dinamalar

தேர்தலை எப்படி எதிர்கொள்வது ? பா.ஜ., 10 கட்டளைகள்

Updated : ஆக 18, 2013 | Added : ஆக 18, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பா.ஜ., 10 கட்டளைகள்

புதுடில்லி: வரவிருக்கும் சட்டசபை மற்றும் பார்லி., தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கும் பா.ஜ., கூட்டம் இன்று தேர்தல் பணிக்குழு தலைவர் மோடி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், அத்வானி, சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, உள்ளிட்டோர் பங்கேற்றனர், கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் திட்டம் மற்றும் பா.ஜ.,வின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் பா.ஜ., மாநில தலைவர்களை நாளை மோடி சந்திக்கவுள்ளார்.
கூட்டத்தில் மீடியாக்களுடன் எப்படி அணுகுவது மற்றும் மக்களிடம் எவ்வாறு பிரசாரம் செய்வது என்பது உள்ளிட்ட 10 கட்டளைகளை மோடி வெளியிட்டுளார்.


இந்த கட்டளையில் கூறியிருப்பதாவது: செய்திதொடர்பாளர்கள் அனைவரும் நாட்டின் அனைத்து நிலவரத்தையும் அறிந்து வைத்து மீடியாக்களிடம் பொறுப்புடன் பதில் சொல்ல கற்று கொள்ள வேண்டும்.

* அன்றைய நாளில் எழும் பிரச்னைகள் குறித்து முழு விவரம் அறிந்தவரே அது குறித்து பேச வேண்டும்.

* எல்லோரும் எல்லாம் பற்றி பேசக்கூடாது. ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசி பிரசாரம் செய்ய வேண்டும்.

* காங்கிரஸ் அரசின் ஊழல், பொருளாதாரநிலை , நிர்வாக சீர்கேடு உள்ளிட்டவைகளை முன்வைத்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் .

* கடந்த 9 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசின் ஆட்சியை குறித்து பதில் பெறும் அளவிற்கு கேள்வி எழுப்பிட வேண்டும்.

* அதே நேரத்தில் ஒழுக்கத்துடனும், நாகரீகமாகவும் இருக்க வேண்டும். ஒரு சொல்லை விட்டால் திரும்ப பெற முடியாது

* டி.வி,. விவாதங்களில் மிக நுண்ணியமாகவும், பா.ஜ.,வின் ஒருமித்த கருத்தை பிரதிபலிக்க வேண்டும்

* மத்திய மாநில நிர்வாகிகள் ஒத்துழைப்பு மிக அவசியமானதாக இருக்க வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சமீபத்தில் மோடியின் சுதந்திர தின பேச்சுக்கு பா.ஜ.,செய்தி தொடர்பாளர்கள் காங்கிரசுக்கு கொடுத்த பதிலடி திருப்திகரமாக இல்லை. இன்னும் காரசாரமாக இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் அருண்ஜெட்லி தனது கருத்தினை தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
18-ஆக-201320:14:07 IST Report Abuse
Sundeli Siththar முதலில் நல்லதொரு கூட்டணி உருவாகவேண்டும். அதற்குள், பாஜகவிற்குள் கூட்டணி அமைத்திடவேண்டும். தலைக்குத் தலை நாட்டாமையாக இருக்கக்கூடாது. யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்ற கேள்வி வரக்கூடாது. ஒற்றுமையே வலிமை என்பதை உணர்ந்திடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
18-ஆக-201320:12:10 IST Report Abuse
Sundeli Siththar பத்து (எட்டு) வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை... கிட்டுமணி போல ஒரு பிச்சுமணி யாருமில்லை... யார்தான் இங்கே ஏமாந்த சோணகிரி... என்பது போல ஆகாமல் இருக்க, பாஜகவிற்குள் ஒற்றுமை வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஆக-201319:59:32 IST Report Abuse
g.s,rajan பரம எதிரியான ஊழல் திலக அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மீது பல முனைத் தாக்குதல் நடத்துங்கள் .அவர்கள் நமது நாட்டை விட்டு மக்களால் துரத்தப்பட்டு கண் காணாத இடத்திற்குச் சென்று ஓடி ஒளிய வேண்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X