"2ஜி' வழக்கில் கோர்ட்டில் டினா அம்பானி ஆஜராகி சாட்சியம்| Dinamalar

"2ஜி' வழக்கில் கோர்ட்டில் டினா அம்பானி ஆஜராகி சாட்சியம்

Added : ஆக 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் சம்பந்தப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்பாக, அதன் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க மறுப்பதால், அதன் தலைவரான அனில் அம்பானியை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, சி.பி.ஐ., கோரியது. இதை ஏற்று, அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானியும் சிறப்பு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடர்ந்தும் பலனில்லாததால், நேற்று முன் தினம், அனில் அம்பானி ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், ""கம்பெனியின் பல்வேறு இயக்குனர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதால், எதையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை,'' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், அனில் அம்பானியின் மனைவி, டினா அம்பானி நேற்று சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார். அவர் நீதிபதி, ஓ.பி.ஷைனி முன், சாட்சியம் அளிக்கையில் கூறியதாவது: ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களில் எனக்கு பங்கில்லை. நிறுவனங்கள் தொடர்பான எனக்கு எவ்வித அறிவோ, அனுபவமோ கிடையாது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் எவ்வித முக்கிய பொறுப்பில் நான் இருந்ததில்லை. நான் குடும்ப தலைவி. மருத்துவமனை ஒன்றை நடத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான, கே. கே. கோயல், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டினா அம்பானிக்கு உள்ள தொடர்பு பற்றியும், அது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்ததோடு, அவற்றில், டினா அம்பானி கையெழுத்திட்டு இருப்பதையும் சுட்டி காட்டினார். மேலும் அவர் கூறுகையில்,"" டினா அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் குறித்தும், தன் பங்கு பற்றியும் தகவல்களை மறுக்கிறார்,'' என்றார். அனில் அம்பானியின் கையெழுத்து சரியாக உள்ளதாக என்பதை பார்த்து சொல்லும்படி டினா அம்பானி அழைக்கப்பட்டார். இதற்கு, டினா அம்பானியின் சார்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். ""நேற்று அனில் அம்பானியே, தன் கையெழுத்தை அடையாளம் காட்டியபின், அவர் மனைவியிடம் ஏன் கேட்க வேண்டும்?'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை