புதுச்சேரி:ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன் துவக்கி வைத்தார். 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் 500க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
இதில், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மூன்று நிலைகளில் மாணவர்களின் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.