Food Security Bill: India can feed its people, says Sonia | பிரதமரை தாண்டி சோனியா உணர்ச்சிகர பேச்சு: களைகட்டியது உணவு பாதுகாப்பு மசோதா விவாதம்: குறைகளை அடுக்கி பா.ஜ., உட்பட கட்சிகள் பட்டியல்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (52)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி : பொதுவாக அமளியாகக் காணப்படும் லோக்சபாவில், உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக, மணிக்கணக்கில் விவாதம் நடந்தது. களைகட்டிய இந்த விவாதத்தில், மசோதாவில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டிய, பா.ஜ., உட்பட சில கட்சிகள், அரசை விமர்சனம் செய்தன. பிரதமரும், சபையும் உன்னிப்பாக கவனிக்கும் வகையில், காங்., தலைவர் சோனியா, ""இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா,'' என குறிப்பிட்டு, அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, உணர்ச்சிகரமாக பேசினார்.

ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் அவசர சட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த மாதம் கையெழுத்திட்டார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, லோக்சபாவில் நேற்று, உணவு மசோதா மீதான விவாதத்தை, மத்திய உணவு அமைச்சர், தாமஸ் துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநிலங்களுக்கு அளிக்கப்படும், உணவு தானியங்களின் அளவு குறைக்கப்படும் என, ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்காது. இதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களின் அளவு குறையாது. கூட்டாட்சி அமைப்பை மாற்றும் மசோதா அல்ல.கடந்த, மூன்று ஆண்டுகளில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தானியங்களின் அளவை, சராசரியாக எடுத்துக் கொண்டு, மாநிலங்கள் தற்போது எந்த அளவு பெற்று வருகின்றனவோ, அதே அளவு, அவர்களுக்கு கிடைக்கும்.இவ்வாறு, தாமஸ் பேசினார்.

பா.ஜ., உறுப்பினர், முரளி மனோகர் ஜோஷி பேசியதாவது:
மசோதாவில் உள்ள குறைகளை திருத்த வேண்டும். தேர்தலை கருத்தில் வைத்து தான், மசோதாவை நிறைவேற்றுவதற்கு, மத்திய அரசு துடிக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, இதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்து விட்டு, ஆட்சியை விட்டு, இறங்கும் நேரத்தில், மசோதாவை நிறைவேற்ற பார்க்கின்றனர். இந்த திட்டத்தால் பயன் பெற முடியாத மக்கள், ஸ்பெக்ட்ரத்தையும், நிலக்கரியையுமா சாப்பிடுவர்?இவ்வாறு, முரளி மனோகர் ஜோஷி பேசினார்.

சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ் பேசுகையில், ""மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்காமல், இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது. இந்த திட்டத்தால், மாநில

அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படும்,'' என்றார்.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர், சரத் யாதவ் பேசுகையில், ""இந்த திட்டத்தை பாராட்டுகிறேன். அதே நேரத்தில், இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மாநில அரசுகளின் நிதிச் சுமையை அதிகரிக்கக் கூடாது,'' என்றார்.

இது போன்ற முக்கியமான மசோதாக்களை பற்றிய விவாதம் நடக்கும் போது, அரசு சார்பில், பிரதமர் அல்லது மூத்த அமைச்சர்கள் பேசுவது வழக்கம். ஆனால், இது, காங்., தலைவர் சோனியாவின் கனவு திட்டம் என்பதால், அபூர்வமாக, சோனியாவே, சில நிமிடங்கள் உரிய குறிப்புகளை வைத்துக் கொண்டு பேசினார்.

உணர்ச்சிப்பூர்வமாக அவர்பேசியதாவது:
இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா. நாட்டில் நிலவும் வறுமையை விரட்டப் போகிறோம் என, உலக நாடுகளுக்கு, இதன் மூலம் அறிவிக்கப் போகிறோம். நாட்டு மக்கள் எவரும், பசியுடன் தூங்கக் கூடாது; எந்த குழந்தையும், ஊட்டச்சத்து குறைவுடன் இருக்கக் கூடாது என்பதற்காக, இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறோம். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, போதிய வளங்கள் உள்ளனவா என, கேட்கப்படுகிறது. எப்படியிருந்தாலும், இந்த திட்டம் நிறைவேறும். அதற்கான வளங்களை, நாம் உருவாக்குவோம். உணவு பாதுகாப்பு மசோதாவை, வெற்றிகரமாக நிறைவேற்ற, அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, சோனியா பேசினார்.

தி.மு.க., உறுப்பினர், டி.ஆர்.பாலு பேசுகையில், ""வறுமையை ஒழிப்பதற்காக, சோனியா எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். ஆனால், நாட்டில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், இன்னும் அதிக அளவில் உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும்,'' என்றார்.

அ.தி.மு.க., உறுப்பினர், தம்பிதுரை பேசுகையில்,
""தமிழகத்தில், அனைத்து குடும்பங்களுக்கும்,

Advertisement

ஏற்கனவே, விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டத்தால், மாநிலங்களுக்கான உணவு தானியம் குறையும். இது, தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் தான், மசோதாவை எதிர்க்கிறோம். இந்த திட்டம், மாநில அரசுகளுக்கு, அதிக சுமையை ஏற்படுத்தும்,'' என்றார்.

"தேர்தலை கருத்தில் கொண்டு இம்மசோதாவை அரசு கொண்டு வருகிறது' என, மார்க்சிஸ்ட் கட்சியும், "இம்மசோதா மக்களுக்கு நல்லது செய்யும்' என, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் தேசியவாத காங்கிரசும் கருத்து தெரிவித்தன.விவாதங்களுடன் செயல்படும் பார்லிமென்ட் வேகத்தின் அறிகுறியாககூட்டத் தொடரும், செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.காரசாரமான விவாதம், தொடர்ந்து நடந்தது. பின்னர், மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் பெறும் வகையில் ஓட்டெடுப்பும் நடந்தது. மசோதாவில் அரசு கொண்டு வந்த திருத்தங்கள் அனைத்தும் ஏற்கப்பட்டன.

உணவு மசோதா நிறைவேறியது : உணவுப் பாதுகாப்பு மசோதா லோக்சபாவில், நேற்று, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.நேற்று இரவு, 9:45 மணியளவில், முதலில் ஓட்டெடுப்பு நடந்தபோது, எந்திரக் கோளாறு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவையில், பயங்கர அமளி ஏற்பட்டது. பின், மீண்டும், இது தொடர்பாக, கடும் விவாதம் நடைபெற்றது.இறுதியில், குரல் ஓட்டெடுப்பு மூலம், உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறியதாக, சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார். இதற்கிடையே, ஓட்டெடுப்பு துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, திடீரென, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சபையில் இருந்து, மகன் ராகுலுடன் வெளியேறிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (52)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.J.P. MADHAVAN - chennai ,இந்தியா
27-ஆக-201314:51:56 IST Report Abuse
B.J.P. MADHAVAN நாட்டின் அபிவிருத்திக்கான திட்டங்களுக்கு ஒதுக்கிய பணத்தை எல்லாம் ச்விச்ஸ் வங்கியில் டெபாசிட் செய்து, நாட்டில் வறுமையை ஏற்படுத்திவிட்டு உணவு போடுகிறோம் என்பது எப்படி நன்றாய் இருக்கும்? இந்தியன் ஒவ்வொருவனுக்கும் சாப்பாடு ஒன்று தான் முக்கியமா?
Rate this:
Share this comment
Cancel
balachandir - puducherry,இந்தியா
27-ஆக-201314:10:43 IST Report Abuse
balachandir நாசமா போச்சு ...... இந்த சோனியா தொல்ல தாங்கல ப்பா
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
27-ஆக-201314:09:27 IST Report Abuse
mirudan இந்த போஸில் சோனியாவை பார்க்கவே பரிதாபமாக தான் இருக்கு ?
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
27-ஆக-201313:14:42 IST Report Abuse
krishna தேர்தலை மனதில் வைத்து கொண்டு அவசரமாக நிறைவேற்ற பட்ட மசோதா. 9 வருடமாக நிறைவேற்றாமல் இப்போது ஏன் அவசரம்.
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
27-ஆக-201313:09:01 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் மக்கள் எல்லாம் என்ன பிச்சைகாரர்களா. எதை எதையோ திணித்து கடைசியில் பிச்சையும் திணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குடும்பம் ஆட்சியில் தொடர நாமெல்லாம் பிச்சைகாரர்கள் ஆகவேண்டி உள்ளது. ஒழுங்காக மக்கள் வாழ வழி செய்தாலே, மக்கள் அவரர் தேவையை நிறைவேற்றி கொள்வர். அதற்க்கு துப்பில்லாத அரசு எல்லா பித்தலாட்டத்தையும் செய்கிறது. அனுப்புங்கள் இந்த குடும்பத்தை அவர் சொந்த நாட்டிற்கு. போதும் இவர்கள் செய்தது. இவர்களை இப்படியே விட்டால் இலவசத்தையே இலவசமாக தருவார்கள். இந்தியன் என்ன சாப்பிட்டு விட்டு தூங்க மாட்டும் செய்யும் பிண்டமா என்ன. இவளவு கேட்டையும் நான் என் வாழ் நாளில் கண்ட நான், என் நாடு நேர்மையான ஒருவரால் ஆள்வதை காண்பேனா? குடும்ப ஆட்சிக்கு முடிவு காட்டுங்கள் மக்களே. இல்லை என்றால், நமது சந்ததிகள் நாம் இப்போது வழ்பதை விட மேலும் பிச்சைகாரர்களாக ஆக்கப்படுவார்கள் . நாம் செத்தாலும், நம் அடுத்த சந்ததிகளாவது தன மானத்தோடு வாழ வழி செயுங்கள் மக்களே. காங்கிரஸ்-ஐ தூக்கி எறியுங்கள் மக்களே. இல்லையேல் மேலும் நீங்கள் பிச்சை காரர்கள் ஆக்கப்படுவீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
dinesh - pune,இந்தியா
27-ஆக-201312:35:54 IST Report Abuse
dinesh எல்லா காங்கிரஸ் தலைவர்களும் வளம் பெற இத்திட்டம் மிகவும் உதவும்
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
27-ஆக-201311:44:18 IST Report Abuse
v j antony இந்த சட்டத்தின் பயன் உண்மையான ஏழைகளுக்கு சென்றடைய அரசு முறையான திட்டங்கள் வகுக்க வேண்டும் . இலவசங்கள் குறைத்து மக்கள் தங்கள் சொந்த உழைப்பில் வாழ நல்ல சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்க போதுமான கவனம் செலுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Rockes Porte - pudukai,இந்தியா
27-ஆக-201311:29:26 IST Report Abuse
Rockes Porte போதிய வளங்கள் உள்ளனவா என, கேட்கப்படுகிறது. எப்படியிருந்தாலும், இந்த திட்டம் நிறைவேறும். ,,...இது எப்பூடி இருக்கு? வெறும் காகிதத்திலே திட்டம் நிறைவேறும் ன்னு சிம்பாலிக்கா இந்த பொம்பளே சொல்லுது
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
27-ஆக-201310:53:20 IST Report Abuse
Sundeli Siththar இங்கே மக்கள் என்று கூறுவது உண்மையான ஏழைகளையா... அல்லது ஏழைகள் போல நடிக்கும் அரசியல் வியாதிகளுக்கா? உணவுத் தானியம் வீணாகாமல் மக்களுக்கு சென்றடைய இந்த திட்டம் அவசியம். அதேநேரம், அரசு விவசாயத்தைப் பெருக்கினால், இந்தத் திட்டம் நல்லதே...
Rate this:
Share this comment
Cancel
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
27-ஆக-201310:21:08 IST Report Abuse
Arvind Bharadwaj சுதந்திர இந்தியாவுக்கு 67 கழுதை வயதாகிறது. இந்த 67 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 60 ஆண்டுகள் தேசவிரோத காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. இன்னமும் நாட்டில் பட்டினிச் சாவு, வறுமை, தற்கொலை என்ற கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறதென்றால் அதற்கும் சேர்த்து தேசவிரோதிகளையே பொருப்பாக்கவேண்டுவது அவசியம். தலைமையேற்று ஆட்சி நடத்துவதற்கு ஒரு துளியும் திறமை, தகுதி மற்றும் யோக்கியதை இல்லாத கூட்டம் இந்த தேசவிரோதிகள் என்பதற்கு இதுவே நல்ல சான்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.