Won't allow Raja to be made scapegoat: Karunanidhi | ராஜாவை பலிகடாவாக ஆக்க இடம் தரமாட்டோம்: கருணாநிதி பேட்டி | Dinamalar
Advertisement
ராஜாவை பலிகடாவாக ஆக்க இடம் தரமாட்டோம்: கருணாநிதி பேட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: "முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை, பலிகடாவாக ஆக்க யார் முயன்றாலும், அதற்கும் இடம் தர மாட்டோம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


அவரது பேட்டி:கல்வி துறை அமைச்சர், ஆசிரியர் தினவிழாவில், கலந்து கொள்ள இருந்த நேரத்தில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கியுள்ளார். அமைச்சர்களை மாற்றுவது என்பது, முதல்வரின் விருப்பத்தை பொறுத்தது. அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அமைச்சர்களை மாற்றுகிறவரும், மாற்றப்படுகிறவர்களும் தான் கவலைப்பட வேண்டும்; நான் கவலைப்படவில்லை. நாங்கள் யாரையும் பலிகடாவாக ஆக்க மாட்டோம். ராஜாவை பலிகடாவாக ஆக்க யார் முயன்றாலும், அதற்கும் இடம் தரமாட்டோம். லோக்சபா, ராஜ்யசபாவில், ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கிற எம்.பி.,க்களின் எண்ணிக்கையை பொறுத்து, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணை எல்லாம் முடிந்து, அறிக்கை கொடுக்கவுள்ள நேரம் இது. அதில் பிரச்னை ஏற்படாமல் இருப்பது நல்லது. ராஜ்யசபாவில், உணவு மசோதாவின் மீது கனிமொழி தான் பேசினார். அப்போது எந்தவிதமான அமளியும் ஏற்படவில்லை. அவர் அவ்வப்போது, பேசிக் கொண்டு தான் இருக்கிறார்; வாய்ப்புகள் மறுக்கப்படவில்லை. சேது சமுத்திர திட்டத்தில், சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்புக்கு உதவியாக, மத்திய அரசு அளிக்கும் கருத்து இருக்க வேண்டுமல்லவா? சேது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பற்றி ஞானதேசிகன் கவலைப்பட துவங்கியிருப்பது பாராட்டத்தக்கது. இவ்வாறு, கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (71)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
surya - kuwait,குவைத்
06-நவ-201305:12:42 IST Report Abuse
surya கரெக்ட் தான் தலைவரே ஏன்னா உங்க குடும்ப வாரிகளுக்காகவும் அவர்களின் சொத்துகளுக்காகவும் ,ஜெயிலுக்குப் போயிருக்கார் இந்தளவுக்கு அறிக்கை விடலேன்னா எப்படி ?அவரால் சேர்ந்த 1,70,000 கோடி பத்திரமா இருக்குதானே .பலி கடான்னா என்னன்னு தெரியுமா தலைவா ,முதல்ல ஆட்டை குளிப்பாட்டி சிங்காரித்து ஊர்கோலம் போய் அதுக்கப்புறமா பலி கொடுப்பாங்க.இதுல பலி மாத்திரம் நீங்க இன்னும் கொடுக்கலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இறங்கினதுக்கு அப்புறமா இந்த வார்த்தையை இப்ப சொன்னமாதிரியே சொல்லமுடியுமா ஆனா நாங்க கரெக்டா கேட்போம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-செப்-201316:29:15 IST Report Abuse
Pugazh V எந்த பிசினஸ் மேனாவது, ஒரு சாதாரண புதுமுக அமைச்சரிடம் போய் 1.76 லட்சம் கோடிகளைக் கொடுப்பானா? அதுவும் ஹிந்தி கூட தெரியாத தென்னக அமைச்சரிடம்? இந்த அனுமானத் தொகை யாரிடமும் கைமாறவில்லை. இத்தனை தொகை அரசுக்கு கிடைத்திருக்கலாம், ஆனால் அமைச்சகத்தின் டெண்டர் வழிமுறைகளால் இதை விடக் குறைவான தொகை கிடைத்தது என்பது தான் சி ஏ ஜி சொல்வது. அது கூட இன்னமும் புரியாமல், திமுக மற்றும் ராஜாவைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
142 members
1 members
131 members
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
06-செப்-201314:34:22 IST Report Abuse
g.k.natarajan அப்பன் குதிருக்குள் இல்லை [வழக்கமான]அறிக்கை அதான், ஏற்கனவே, உச்ச நீதி மன்றத்தில், உங்கள்,வக்கில்,வாதத்தில்,ஆகிவீட்டீர்களே அய்யா?பாவம் ராசா அவர்கள் நடராசன்.
Rate this:
3 members
0 members
48 members
Share this comment
Cancel
K.SURIYANARAYANAN - chennai,இந்தியா
06-செப்-201314:25:38 IST Report Abuse
K.SURIYANARAYANAN இன்னும் ராசாவை பலிகடா ஆக்கவில்லையா அட பாவிகளா? வந்த செய்திகள் அணைத்தும் வதந்தி தானா. வடை போச்சே....
Rate this:
3 members
1 members
71 members
Share this comment
Cancel
praveen - Chennai,இந்தியா
06-செப்-201313:15:45 IST Report Abuse
praveen அதான் ஆகிடீங்களே அப்புறம் என்ன விளக்கம் வேண்டி கிடக்கு.... பலிகாடு சொல்ற அளவுக்கு ராஜா ஒன்னும் உத்தமரும் இல்லை, அனால் உங்கள் குடும்ப கட்சிக்கு ராஜா பலிஆடுதான்.
Rate this:
0 members
0 members
48 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
06-செப்-201311:44:04 IST Report Abuse
LAX இப்போது தலை தூக்கியிருக்கும் கச்சத்தீவு பிரச்சனையில், ஏற்கனவே இந்த முனா கனா இலங்கைக்கு முழு ஆதரவு அளித்துவிட்டு இப்போது தமிழகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதால், இப்போது இலங்கைக்கு ஆதரவாக மத்திய அரசு தனது கருத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளதை எதிர்க்க முனா கனாவுக்கு கூடுதல் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. (ஒருவர் எதிரியிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள, சம்பந்தமே இல்லாத பலமான ஒருவரின் துணை தேவைப்படும்போது, அந்த பலமானவரிடம் "அந்த ஆள் உங்களைத்தான் கேவலமாகப் பேசினார்" என்று உசுப்பேத்தி எதிரியை தாக்க சரியான ஆளைத் தயார் செய்வதுபோல்) ராசா சிறையிலிருந்து ஜா மீனில் வெளிவந்தபின் மிகவும் தைரியம் வந்தவராய் 2G விஷயத்தில் மவுன மோகனையும் மத்திய அரசையும் தனக்கே உரிய பாணியில் மிரட்டினார். அதுபோல் இப்போது ராசாவைத் உசுப்பேத்தி/தூண்டிவிட்டு இந்த தருணத்தில் மீண்டும் மிரட்டவைத்தால் கூடுதல் பலம் பெறலாம் என்ற குள்ளநரித்தனம்தான் முனா கனாவிடம் மேலிடுகிறது.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
06-செப்-201311:29:36 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN கூட்டாளிகளை யார்தான் பலிகடாவாக மாற்ற முனைவார்கள்? காட்டிக்கொடுத்து விட்டால் மக்கள் முன் எப்படி நேர்மையானவர்களாக வந்து வோட்டு கேட்க முடியும். தேர்தல் முடிந்த பின்பும் இதே அறிவிப்பில் நிலைத்து நிற்கமுடியுமா? அப்படியே காங்கிரெஸ் ராஜாவை குற்றவாளி ஆக்கிவிட்டால், கருணாநிதி என்ன செய்யப்போகிறார்? இதே போல அறிக்கைவிடுவதைத் தவிர அவரால் என்ன செய்ய முடியும்?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
06-செப்-201311:15:25 IST Report Abuse
Rangarajan Pg ""ராசாவை பலிகடாவாக்க யாருக்கும் இடம் தரமாட்டோம்,, அந்த இடத்தை நாங்களே வைத்து கொள்வோம். அந்த உரிமை எங்களுக்கு தான் "" என்று கருணாநிதி கூறினார். இதில் முதல் பாதி மட்டுமே செய்திகளில் இடம் பிடித்து விட்டது.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
06-செப்-201311:07:18 IST Report Abuse
krishna ராசா தவறு செய்யவில்லை
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
06-செப்-201311:07:12 IST Report Abuse
Rangarajan Pg பலிகடாவும் இல்லை ஒன்றும் இல்லை. ராசாவுக்கு தண்டனை கிடைக்காது. விசாரணை என்று வேண்டுமானால் அலைகழிப்பார்கள். அப்படியே தண்டனை என்றாலும் அவருக்கு கவலை இல்லை. என்ன பெரிதாக தண்டனை கொடுத்து விட போகிறார்கள். ஒன்றிரண்டு வருடங்கள் சிறை வாசம். அதன் பிறகு வெளியே வந்து இது வரை அடித்த கொள்ளை பணத்தை வைத்து கொண்டு சுகபோக வாழ்கை. என்னவாகி விட போகிறது? சும்மா பேசி கொண்டே தான் இருப்பார்கள் அரசியல்வாதிகள் ஆனால் உள்ளுக்குள் எல்லா வேலைகளும் நடக்கும். எப்படியும் தப்பித்து விடுவார்கள். நம் நாட்டு சட்டங்களும் நீதி துறையும் மிகவும் பலஹீனமாக பல ஓட்டைகளுடன் இருக்கும்போது இதை போன்ற கயவர்களுக்கு கொண்டாட்டம் தான்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்