TN Govt., orders to conduct raid in Tasmac shops | தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்| Dinamalar
Advertisement
தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

"டாஸ்மாக்' கடைகளில், வரும், 22ம் தேதி வரை, அதிரடி சோதனை நடத்த, மாவட்ட மேலாளர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதனால், செய்வது அறியாது ஊழியர்கள், விழி பிதுங்கி நிற்கின்றனர்.
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம், நாள்தோறும், 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.



ஏராளமான முறைகேடு:


டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கூடுதல் விலைக்கு மது வகைளை விற்பனை செய்வது, சரக்கின் அளவை குறைத்து காட்டுதல் போன்ற முறைகேடுகளில், ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு கடையிலும், சராசரி விற்பனையை காட்டிலும், தேவைக்கு அதிகமாக, சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. இதனால், விற்பனையாகாமல் உள்ள சரக்கை, பார் உரிமையாளர்கள், ஊழியர்களை மிரட்டி வாங்கி, அவற்றை, பார்களில் அதிக விலைக்கு விற்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்க, மாவட்ட மேலாளர்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ஆய்வின் போது, பணம் மற்றும் சரக்கின் இருப்பு, கணக்கை விட, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம்; 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும் ஒரு மாதம், "சஸ்பெண்ட்' நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும். இருப்பு தொகை, 25 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், இரண்டு மாதம், சஸ்பெண்ட்; 50 ஆயிரம் முதல், 99 ஆயிரம் ரூபாய் வரை குறைவாக இருந்தால், 24 சதவீத அபராதம் மற்றும், மூன்று மாதம், சஸ்பெண்ட்; ஒரு லட்சம் ரூபாய் மேல் இருந்தால், "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது: கடைகளில் உள்ள சரக்கு விவரங்களை தெரிந்து கொள்ள, வரும், 22ம் தேதி வரை, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம், ஏழு நாட்கள், அதிகபட்சம், 10 நாட்களுக்கு, தேவையான சரக்கை மட்டும் கடைகளில், இருப்பு வைக்க வேண்டும். விற்பனையாகாமல் இருக்கும் சரக்கு விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. இதன் பின், முறைகேடான பார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.



சோதனையில் ஆடிட்டர்கள்:


ஆய்வுக்காக, ஒரு மண்டலத்துக்கு, 40 ஆடிட்டர்கள் வீதம், ஐந்து மண்டலங்களுக்கு, 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஒரு மாவட்டத்தில், ஒரு நாளைக்கு, 10 - 15 கடை வரை சோதனை செய்ய உள்ளனர். ஆய்வின் போது, வெளி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் உடன் செல்வர் என, தெரிகிறது.



"குறைந்த ஊதியமே தவறுக்கு காரணம்':


ஆய்வு குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை வேலை செய்யும், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு முறையே, 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் என்ற, குறைந்த ஊதியமே பிடித்தம் போக, வழங்கப்படுவது தான், தவறு செய்ய தூண்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, பார் உரிமையாளர்கள், இரவு நேரத்தில் சீக்கிரமாக, கடைகளை மூடச் சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். எனவே, ஆய்வின் போது, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிர்வாகம், பார் உரிமையாளர் மற்றும் அதற்கு துணை போகும், மாவட்ட அதிகாரிகளும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani Pangan - Obajana,நைஜீரியா
07-செப்-201300:09:31 IST Report Abuse
Mani Pangan இங்கு அதிகம் பணம் புழங்குவது உண்மை...டாஸ்மாக் மூலம் வருமானம் 20000 கோடியை தாண்டுவது நிச்சயம்...அது 40000 கோடியாகக்கூட இருக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-செப்-201309:26:11 IST Report Abuse
Srinivasan Kannaiya கட்டிங் சரியாய் கொடுக்கறது இல்லையாமே.. அதுதான் ரெய்டு
Rate this:
Share this comment
Cancel
தென்றல் பிரியன் - Chennai,இந்தியா
06-செப்-201308:26:03 IST Report Abuse
தென்றல் பிரியன் ஒருபுறம் டாஸ்மாக் கின் குறைகளை சொல்கிறீர்கள்.மறுபுறம் ஆய்வு என்றால் பாவம் என்கிறீர்கள். இது எந்தவகையில் நியாயம்?
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
06-செப்-201308:20:52 IST Report Abuse
ரத்தினம் இந்த அதிரடி சோதனைகளை தாலுகா ஆபீசிலும் ரெஜிஸ்ட்ரார் ஆபீசிலும் நடத்துங்க. குடிச்சிட்டு சீரழியிரவன் செத்து தொலையட்டும்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
06-செப்-201307:33:03 IST Report Abuse
kumaresan.m " மூடிவிட்டு போங்கள் எந்த பிரச்சினையும் இருக்காது .....தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி வரலாறு படையுங்கள்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
06-செப்-201307:31:02 IST Report Abuse
kumaresan.m " ஊதியம் குறைவு என்றால் வேறு வேலைக்கு போகலாமே ??? இந்த வேலை இல்லாமல் பல பேர்கள் உள்ளார்கள் .........கரும்பு தின்னும் வேலை என்றால் கசக்கவா செய்யும் ........செய்யும் தொழிலில் நேர்மை இல்லையெனில் எப்படி சம்பளம் உயரும்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
06-செப்-201306:42:58 IST Report Abuse
N.Purushothaman உலகத்திலேயே தமிழ்நாட்டுல மட்டும் தான் குடிக்கறது ஒரு பேஷன்...இந்த லட்சணத்தில .தண்ணி கலந்து குடிச்சா என்ன????இல்ல தண்ணி கலக்காம குடிச்சா என்ன????
Rate this:
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
06-செப்-201306:42:54 IST Report Abuse
Sathyamoorthy 4,660 ரூபாய், 3,390 ரூபாய், 2,510 ரூபாய் ......என்னய்யா சம்பளம் இதெல்லாம்?? இந்த சம்பளத்தில் இன்றைக்கு என்ன செய்ய முடியும் என்பதையும் அரசே சொல்லி விட்டால் நல்லது. மாத மாதம் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. காய்கறிகள், அரிசி, பருப்பு மற்றும் இதர மளிகை சாமான்களின் விளையும் ஏறிக்கொண்டே செல்கிறது. சாமானியன் என்ன செய்வான்?
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
06-செப்-201314:31:14 IST Report Abuse
Baskaran Kasimani"சாமானியன் என்ன செய்வான்" - சாமானியன் சாராயக்கடை பக்கம் போகக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
06-செப்-201304:45:22 IST Report Abuse
Baskaran Kasimani TASMAC துறை என்று தனியாக ஒரு துறையை நிர்மாணித்து அதற்கென்று தனி அமைச்சரை போட்டால் ஒரு வேளை இது போல நடப்பதை தவிர்க்கலாம். குறைந்த பட்சம் TASMAC கழகம் என்று ஒரு அமைப்பை ஆரம்பித்து நிறைய அரசு வேலைகளை ஏற்படுத்தலாம். மக்கள் வரிப்பணம் தானே வீணாய்போனால் யாருக்கு கவலை.
Rate this:
Share this comment
Cancel
Shaik Dawood - Tiruchirappalli,இந்தியா
06-செப்-201303:44:09 IST Report Abuse
Shaik Dawood அவன்தான் கொள்ளை அடிப்பது தெரியுது ,அப்புறம் ஏன் போகணும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்