பல கோடி ரூபாய் மோசடி வழக்கு திருச்சியைச் சேர்ந்தவர் திடீர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல கோடி ரூபாய் மோசடி வழக்கு திருச்சியைச் சேர்ந்தவர் திடீர் கைது

Added : செப் 06, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருச்சி: பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தொடர்புடையவரை, பெட்டவாய்த்தலை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர் பிலாலுதீன், 52. இவரது உறவினர் பெங்களூருவைச் சேர்ந்த நூரி (எ) அன்வர். பெரும் தொழில் அதிபரான இவர், திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே சிறுகமணி காவல்காரன் பாளையத்தில், பல கோடி ரூபாய் மதிப்பில் இடம் வாங்கி, ஆதாம் ஏவாள் ஆஸ்துமா புட் புராடக்ட்ஸ் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தார். அதை பிலாலுதீனை கவனித்துக் கொள்ள செய்து, லாபத்தில், 75 சதவீதம் அன்வருக்கும், 25 சதவீதம் பிலாலுதீனுக்கும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன்படி, நிறுவனத்தை நடத்தி வந்த பிலாலுதீன், சில காலம் நேர்மையாக செயல்பட்டுள்ளார். பின் சரிவர கணக்கு கொடுக்காமல், லாபத்தொகையும் கொடுக்காமல் அன்வரை ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து அன்வர் கேட்டபோது, நிறுவனமே என்னுடையது என்று கூறி மோசடி செய்ய திட்டமிட்டார். இதுகுறித்து அன்வர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிலாலுதீன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த பெட்டவாய்த்தலை போலீஸாருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தியபோது, பிலாலுதீன் மோசடியில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தது.
இதையடுத்து நேற்று பிலாலுதீனை பெட்டவாய்த்தலை போலீஸார் கைது செய்து, திருச்சி ஜே.எம்., 3 நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் அல்லி முன் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, பிலாலுதீன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
உறவாடிய போலீஸார்: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிலாலுதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, பெண் எஸ்.ஐ., தலைமையில் போலீஸார் வந்திருந்தனர். அவர்கள், பிலாலுதீன் வாங்கிக்கொடுத்த நொறுக்கு தீனிகளை தின்றும், அவர்கள் வாங்கிக் கொடுத்த டீயை குடித்தும், அவர்களுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள், பொது இடத்தில் இப்படி குற்றஞ்சாட்டப்பட்டவரின் உறவினர்களிடம் வாங்கித் தின்றால், எப்படி போலீஸார் மீது மரியாதை வரும் என்று ஆதங்கத்துடன் கூறிச்சென்றனர்.
மிரட்டல்: அதேபோல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிலாலுதீனை பத்திரிகையாளர்கள் ஃபோட்டோ எடுக்க முயன்றபோது, பத்திரிகையாளர்களை அவரின் உறவினர்கள் மிரட்டினர்.
இதையும் போலீஸார் வேடிக்கை பார்த்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை