கூடங்குளத்தில்15 நாட்களில் மின் உற்பத்தி:அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""கூடங்குளம் அணு மின் நிலையத்தில், இன்னும், 10 - 15 நாட்களில் மின் உற்பத்தி செய்யப்படும்; இரண்டாவது அணு உலை, அடுத்த மாதம், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் செயல்படும்,'' என, மத்திய பணியாளர் நலம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர், வி.நாராயணசாமி கூறினார்.

டில்லியில் நேற்று, அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களுக்கு, வெளிநாட்டு அமைப்புகள் சில, நிதியுதவி அளித்துள்ளன. அந்த அமைப்புகளின் நிதியுதவியை, மத்திய உள்துறை அமைச்சகம் தடுத்து நிறுத்தியுள்ளது.கூடங்குளத்திற்கு எதிரான போராட்டம், நமக்கு விடுக்கப்பட்ட சவால். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் முழுமையும் செலவழிக்கப்பட்டு விட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.ஆனால், எதிர்ப்பாளர்களுக்கு பணம் வந்தது எனக்குத் தெரியும்; அவர்களின் வங்கிக் கணக்குகளை நான் பார்த்துள்ளேன்; எங்கிருந்து பணம் வந்தது என்பதையும் நான் அறிவேன். அத்தகைய, ஆறு நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. சமூக சேவை என்ற நோக்கத்திற்காக வந்த பணம், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

பொதுமக்களை குழப்பமடையச் செய்வது எளிதானது; ஆனால், அந்தத் தகவல்கள் எந்த அளவிற்கு, பொதுமக்களைச் சென்றடைந்துள்ளது என்பது தான் முக்கியம்.ஜப்பானின், புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின், நம் அணு மின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. சில கடினமான முடிவுகளை நாம் எடுக்க வேண்டியதாகியது; பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. ஏனெனில், புகுஷிமா அணு உலை விபத்தை காட்டி, சில தீயசக்திகள், கூடங்குளத்திற்கு எதிராக மக்களை திசை திருப்பி விட்டன.

கூடங்குளம் அணு உலை திடீரென ஏற்படுத்தப்பட்டதல்ல. பல கட்ட, வெற்றிகர பரிசோதனைகளுக்குப் பின், எவ்வித பாதிப்பும் ஏற்படாது, அச்சுறுத்தலுக்கும் இடமில்லை என்பதை இறுதி செய்த பின் தான், செயல்பட அனுமதிக்கப்பட்டது. சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்து உள்ளன; இன்னும், 10 - 15 நாட்களுக்குள், கூடங்குளம் முதல் அணு உலையில், மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விடும். துவக்கத்தில் குறைவான அளவு மின்சாரமே உற்பத்தியாகும்; படிப்படியாக, அதன் அளவு அதிகரிக்கப்படும். இரண்டாவது அணு உலையில், அடுத்த ஆண்டு, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மின் உற்பத்தி செய்யப்படும்.இவ்வாறு, அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (42)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sakthivel habshan abudhabi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-201309:00:02 IST Report Abuse
  sakthivel habshan abudhabi அடபோங்கையா நீங்கள் சொன்னது எதுவாவது நடந்து உள்ளதா ? எதற்கு உங்களிற்கு இந்த வெட்டி வேலை ?.
Rate this:
Share this comment
Cancel
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
07-செப்-201317:26:43 IST Report Abuse
vaaithaa vampan இம்........இம்.............. பாப்போம் .... பாப்போம் .......... டீ வந்து ரெம்ப நேரமாச்சு ...........
Rate this:
Share this comment
Cancel
abcd karuna - chennai,இந்தியா
07-செப்-201317:15:27 IST Report Abuse
abcd karuna எப்படி உங்களால மட்டும் இப்படி வாய்கூசாம பொய் அறிக்கை விட முடியுது
Rate this:
Share this comment
Cancel
bhaski - chennai  ( Posted via: Dinamalar Android App )
07-செப்-201316:22:58 IST Report Abuse
bhaski he is always joking like this, comedy piece
Rate this:
Share this comment
Cancel
PR Makudeswaran - madras,இந்தியா
07-செப்-201316:06:06 IST Report Abuse
PR Makudeswaran நீங்கள் வெளிநாட்டில் இருந்து பணம் வந்த விபரம் யாருக்கு எங்கிருந்து வந்தது என்ற விபரம் தெரிந்து கொண்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி.கணக்குகளும் முடக்கப்பட்டன.இரட்டிப்பு சந்தோசம்.இந்த வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் என்று ஒன்றைப் பற்றி பேசிக் கொள்கிறார்களே.அதைப் பற்றி உங்களுக்குத் தெரியும் ஆனால் நாங்களும் பல வருடங்களாக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.நீங்களும் அதைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசிய ஞாபகம் இருக்கிறதா?அதை இன்னும் 15 நாட்களில் கொஞ்சம் எடுத்து விடலாமா?
Rate this:
Share this comment
Cancel
kumar - Doha,கத்தார்
07-செப்-201315:41:58 IST Report Abuse
kumar புலி வருது புலி வருது கதை கேட்டு ரொம்ப நாளாச்சு
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-செப்-201315:08:54 IST Report Abuse
Nallavan Nallavan இன்னாபா இந்த டயலாக்கையே எத்தனை வாட்டிதான் சொல்லுவ? போன வருஷத்துலேர்ந்து இதையே சொல்லினு கிற நீ கீறல் உயுந்த ரெக்கார்டு மாதிரி ..... அந்தாண்ட போ
Rate this:
Share this comment
Cancel
Siva - Trichy,இந்தியா
07-செப்-201314:19:37 IST Report Abuse
Siva நீர் ஒரு சரியான மங்குனி அமைச்சர் என்பதை 15 நாட்களுக்கு ஒரு முறை நிரூபிக்கின்றாய்...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-செப்-201317:11:05 IST Report Abuse
Nallavan Nallavanஇங்கே, ஐந்து முறை முதல்வராக இருந்தவர் எப்படியாம்?...
Rate this:
Share this comment
Cancel
நவிரன் - Bangalore,இந்தியா
07-செப்-201314:06:23 IST Report Abuse
நவிரன் அவர விட்டுருங்க 15 வருடமா 15 நாள் என்ற டார்கெட்ஐ அடையனுமாம் அதற்கு அடுத்த வருட தேர்தலில் ஜெயிக்க வேண்டுமே
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
07-செப்-201313:52:42 IST Report Abuse
rajan கூடன்குள அணு விஞ்ஞானியே உன் அலம்பல் தாங்க முடியல்லே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்