Plant 10 trees: Abdul kalam | வாழ்நாளில் 10 மரங்கள் வளர்க்க முன்னாள் ஜனாதிபதி கலாம் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழ்நாளில் 10 மரங்கள் வளர்க்க முன்னாள் ஜனாதிபதி கலாம் அறிவுரை

Updated : செப் 08, 2013 | Added : செப் 07, 2013 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
10 மரங்கள்,முன்னாள் ஜனாதிபதி, கலாம்,Plant, 10 trees, Abdul kalam

கோவை : "ஒவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டுமானால், வாழ்நாளில், 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும்' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை வழங்கினார்.

கோவை, உக்கடம் பெரியகுளம் அருகில், "சிறுதுளி' அமைப்பின், 10ம் ஆண்டு விழா, "பசுமை பஞ்சாயத்து' மற்றும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரித்து, காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டங்கள் துவக்க விழா, நேற்று நடந்தது.

திட்டங்களை துவக்கி வைத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது: கோவை உக்கடத்தில் இருந்த, பெரியகுளம், முட்புதர், குப்பை நிறைந்திருந்தது; இன்று, நீர் நிரம்பி, பறவைகள் சுதந்திரமாக உலாவுகின்றன. கூட்டு முயற்சிக்கு, இதுவே சாட்சி.வெளிநாட்டில் வேலை பார்த்த ஒருவர், 10 ஆண்டுகளுக்கு பின், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, தன் சொந்த கிராமத்துக்குத் திரும்பினார். கிராமத்தைக் கண்டதும், அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. "சிறுவயதில் குளித்து, நீந்தி விளையாடிய, ஊரணியைக் காணவில்லை' என்பது புகார்; ஆய்வு செய்த கலெக்டரும் அதிர்ச்சி அடைந்தார். ஊரணியை ஆக்கிரமித்து, "ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்' கட்டியிருந்தனர். ஆக்கிரமிப்பை அகற்றி, ஊரணியை மீட்டார் கலெக்டர்.

தமிழகத்தில், காணாமல் போன, ஊரணிகளை கண்டுபிடித்து, தூர்வார, அரசுக்கு, பத்திரிகைகள் உதவ வேண்டும். கோவையில், அரசூர், மயிலம்பட்டி கிராமத்தில், பசுமை பஞ்சாயத்து திட்டம் துவங்கியுள்ளதை போன்று, இந்தியாவில், 1,000 கோடி மரங்களை நட்டு வளர்க்கும் திட்டத்தை, இளைஞர்கள், மாணவர்களை வைத்து துவங்கியுள்ளேன். ஒவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டுமானால், வாழ்நாளில், 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும்.இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Oyvupetravingyani.. - Thane,இந்தியா
10-செப்-201303:41:21 IST Report Abuse
Oyvupetravingyani.. சத்குரு ஜக்கி வாசுதேவ் ஏற்கனவே ஆரம்பித்த திட்டம் thaan
Rate this:
Share this comment
Cancel
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India - Camp,Arifjan,Kuwait,குவைத்
07-செப்-201318:15:50 IST Report Abuse
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India புதிய மரக்கன்றுகளை நடுவதேல்லாம் வரவேற்க வேண்டியதுதான் இருந்தாலும் இருக்கும் மரங்களை வெட்டாமல் தடுத்து வழிவகை செய்தால் நல்லது ஏனென்றால் வீட்டுமனை என்ற பெயரிலும் தொழிற்சாலை என்ற பெயரிலும் மரங்களை வெட்டி சீரழித்து வருகின்றனர்.ஒருமரத்தை வளர்க்க குறைந்ததது ஐந்து பத்து வருடங்களாவது ஆகும்.எனவே வருங்கால தேவை கருதி மரங்களை நடுவதுபோல் இக்கால அவசர தேவையை மனதில் கொண்டு மரங்களை வெட்டாமல் பாதுகாப்போமாக......மரமும் ஒரு உயிர்தான்.
Rate this:
Share this comment
Cancel
MANUSHI - chennai,இந்தியா
07-செப்-201313:55:59 IST Report Abuse
MANUSHI மரம் வளர்ப்பது நமக்கு மட்டுமல்ல நமது எதிர் கால தலைமுறைக்கு நல்ல பலனை கொடுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Govindarajan - Chennai,இந்தியா
07-செப்-201313:28:22 IST Report Abuse
Govindarajan முன்பெல்லாம் பேருந்திலும், அரசாங்க கட்டங்களிலும் சமுதயா சிந்தனை சார்ந்த கருத்தக்களும், பழமொழிகளும் இடம்பெறும். ஆனால் இன்றோ, பள்ளிகளிலும், மரம் வளர்தலை பற்றிய பாடங்கள் மறைக்கப்பட்டுவிட்டன... இனிமேலாவது அதை பிஞ்சுகளின் நெஞ்சில் விதைக்க வேண்டும்.. மரம் வளர்ப்போம், மழையை பெருக்வோம். ALL IS WELL
Rate this:
Share this comment
Cancel
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
07-செப்-201312:45:15 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi தமிழகத்தில், காணாமல் போன, ஊரணிகளை கண்டுபிடித்து, தூர்வார, அரசுக்கு, பத்திரிகைகள் உதவ வேண்டும் என்று கூறி இருப்பதை பத்திரிக்கைகள் மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பத்திரிக்கைகள் மனதுவைத்தால் காணாமல் போகும் மரங்கள் கூட தடுத்து நிறுத்தப் படும். ஒரு பக்கம் கஷ்டப்பட்டு மரங்கள் வைத்து அதை காப்பாற்ற,ஒரு பக்கம் காடுகள் அழிக்கப் படுவதும் மரங்கள் வெட்டப் படுவதும் எந்த விதத்தில் முன்னேற்றத்தை தரும்.நாட்டின் நான்காவது தூண் சரியாக இருந்தால் நாட்டு மக்கள் நிம்மதியுடன் இருக்க முடியும்.இல்லை என்றால் விளைவுகள் அபாயகரமாக இருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
07-செப்-201311:30:45 IST Report Abuse
K.Sugavanam இன்னிக்கு தான் சி ஏ ஜி அறிக்கை சொல்லி இருக்கு,காடுகளை அழித்து பன்னாட்டு,இந்நாட்டு கார்போறேட்டுகளுக்கு எந்த சட்டத்தையும் பொருட்படுத்தாது கொடுத்த தால் பல்லாயிரம் கோடி பணமும்,விரயம்,சுற்று சூழலும் காலி இன்னு..
Rate this:
Share this comment
Cancel
Moideen Nandhini - Ad Dammam,சவுதி அரேபியா
07-செப்-201311:20:52 IST Report Abuse
Moideen Nandhini இருக்க ஒரு வீடு இல்ல,பேருக்கு கொஞ்சம் நிலமில்ல நாங்க எங்க போய் மரம் நடுரது
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
07-செப்-201310:50:00 IST Report Abuse
Rangarajan Pg உண்மையிலேயே மிக மிக நல்ல செய்தி. இழந்த பொலிவை கோவை திரும்ப பெற வேண்டும். ஆனால் எங்காவது சாலை விரிவாக்கம் என்ற பேச்சு எழுந்தாலே முதலில் அந்த சாலை ஓரத்தில் உள்ள மரங்களை வெட்டி விடுகிறார்கள். தேவையோ தேவை இல்லையோ ஆனால் மரங்களை வெட்டி விற்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அலையும் அரசு காண்ட்ராக்டர்கள் இந்த மரங்களையும் வெட்டி விடுவார்கள். அவர்களுக்கு சுற்று சுழல் முக்கியமில்லை. பணம் தான் முக்கியம். முதலில் மரங்களை வெட்டுவதற்கு தீவிர தடை விதிக்க வேண்டும். முடிந்தவரை அவைகளை வெட்டாமல் சாலைகளை வடிவமைக்க வேண்டும். கோவை மேட்டுபாளையம் சாலை ஒரு காலத்தில் பசுமையாக இருந்தது. ஆனால் தற்போது பெரியநாயகன் பாளையம் வரை பாலைவனம் போல காட்சி அளிக்கிறது . சாலையும் விரிவு அடைந்து எந்த பிரயோஜனமும் இல்லை. மரங்களை இழந்தது தான் மிச்சம். ஆகவே மரங்களை வெட்டுவதற்கு தீவிரமான தடை விதிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vijayabaskar Ramacha - Hong Kong ,சீனா
07-செப்-201310:14:53 IST Report Abuse
Vijayabaskar Ramacha இது ஒரு அருமையான பணி. அரசை நம்பி எந்த பயனும் இல்லை. மக்கள் தெளிவாகி விட்டால் யாரும் ஏமாற்ற முடியாது.
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
07-செப்-201309:59:09 IST Report Abuse
JAY JAY நல்ல செய்தி...அதனாலேயே விரைவில் காற்றில் கரைந்துவிடும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை