காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தேசபக்தி, ஒருமைப்பாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தி வந்த கிராமியக் கலைகள் தற்போது மேற்கத்திய கலாச்சாரத்தினாலும், சினிமா மோகத்தினாலும் மங்கி வருகிறது, ஆனாலும் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பொக்கிஷம் போன்ற கிராமிய கலைகள் முற்றிலும் மறைந்துவிடாமல் காப்பாற்றிவரும் கிராமிய கலைஞர்களில் ஒருவர்தான் சா.முத்துக்குமார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தற்போது திருச்சி துறையூர் பகுதியை வசிப்பவர் . காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார் என்றால் சின்ன பிள்ளைகூட அவரை அடையாளம் காட்டும்,அந்த அளவிற்கு இந்த காளியாட்டக்கலையில் இருபத்தைந்து வருட அனுபவங்களைக் கொண்டுள்ள இவர் இதற்காகவே தான் பார்த்து வந்த போக்குவரத்துக்கழக வேலையையே தூக்கிப் போட்டவர்.


சிறுவயது முதலே நாட்டியத்தில் ஈடுபாடு கொண்டவர் முதலில் கவனம் செலுத்தியது பரதநாட்டியத்தில்தான், பின் ஒரு முறை காளியாட்டத்தை பார்த்தது முதலே அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
காளியாட்டம் என்பது இருப்பதிலேயே சிரமமான ஆட்டமாகும். எட்டு கைகள் மற்றும் உடைகள் அலங்காரங்கள், ஆபரணங்கள் என்று சுமார் பத்து கிலோ எடையை தூக்கிக் கொண்டு ஆட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே மேக்கப் போட்டுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும், ஆடி முடித்த பிறகு மேக்கப்பை கலைக்கவும் இரண்டு மணி நேரமாகும். கண்களுக்கு மேல் கண்மலர் என்ற கண்ணைப்போன்ற வடிவம் கொண்ட இரும்புத் தகடை பொருத்திக் கொள்வோம், இதில் உள்ள ஒரு சிறு ஓட்டையின் மூலம் கிடைக்கும் எழுபது சதவீத பார்வையை வைத்துதான் அரங்கம் முழுவதும் ஆவேசமாக நடனமாடுவோம். எவ்வளவோ பேரை மகிழ்ச்சிபடுத்த நமக்கு கிடைத்த வாய்ப்பு என்று எடுத்துக்கொள்ளும் போது எல்லாம் எளிதாகி விடுகிறது.
இந்த நடனம் என்னை பல்வேறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது, கலைமாமணி விருதினை பெற்றுத் தந்துள்ளது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள காளியாட்டத்தை இன்னும் பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.
காளியாட்டக்கலைஞர் முத்துக்குமாருடன் தொடர்பு கொள்ள: 9942533228.
- எல்.முருகராஜ்AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanagasundaram Sakthidasan - chennai,இந்தியா
09-செப்-201318:57:42 IST Report Abuse
Kanagasundaram Sakthidasan தமிழ் மணம்கமழும் கிராமியகலைகளையும்,இவரைபோன்ற கலைஞர்களையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
karthik - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201315:20:55 IST Report Abuse
karthik இன்னும் எங்கள் ஊர் (திருவாரூர்)பகுதிகளில் இந்த கலை திருவிழாவாக வருடம் தோறும் கொண்டாடப்பட்டுவருகிறது .
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-செப்-201320:40:37 IST Report Abuse
சு கனகராஜ் காளியாட்ட கலைக்காக வேலையை தூக்கி எரிந்தவரா ? ஆச்சரியாமாக இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்