Country econommy now in hospital: Narendra modi | நாட்டின் பொருளாதாரம் மருத்துவமனையில் படுத்து கிடக்கிறது: முதல்வர் மோடி கிண்டல்| Dinamalar

நாட்டின் பொருளாதாரம் மருத்துவமனையில் படுத்து கிடக்கிறது: முதல்வர் மோடி கிண்டல்

Updated : செப் 09, 2013 | Added : செப் 07, 2013 | கருத்துகள் (30)
Advertisement
Country, econommy,hospital,Narendra modi, பொருளாதாரம், மருத்துவமனை,முதல்வர், மோடி, கிண்டல்

அம்பிகாபூர்: சத்தீஸ்கரில் நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பிரதமர், மன்மோகன் சிங்கை, கடுமையாக தாக்கி பேசினார். ""நிதித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ள பிரதமரால், நாட்டின் பொருளாதாரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஆளும், பா.ஜ., சார்பில், தேர்தல் பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர், ராமன் சிங்கை ஆதரித்து, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் மற்றும் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி ஆகியோர், பிரசாரம் செய்து வருகின்றனர்.

அம்பிகாபூரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், முதல்வர், மோடி பேசியதாவது: நம் நாட்டில் உள்ள, இரு சிங்குகளை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். ஒருவர், டில்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்; மற்றொருவர், சத்தீஸ்கரில் உள்ள முதல்வர், ராமன் சிங். இருவரும், டாக்டர் பட்டம் பெற்றவர்கள். ராமன் சிங், மருத்துவம் படித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரின் நல்லாட்சியில், மாநில மக்கள் செழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பிரதமராக உள்ள மன்மோகன் சிங், நிதித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். அவரின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம், நோய் வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அவர் தலைமையின் கீழ், நாட்டின் பொருளாதாரம், உயிருக்குப் போராடும் வகையில், ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள், புதிதாக உருவாக்கப்பட்டன. அப்போது, மத்திய பிரதேசம், பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சியில், இனிப்புகள் வழங்கி, மாநிலம் பிரிக்கப்பட்டதை கொண்டாடினர். இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், காங்., தலைமையிலான மத்திய அரசு, தெலுங்கானா விவகாரத்தை, போர்க்களமாக மாற்றியுள்ளது. இந்த ஒரு விவகாரத்திலேயே, மத்திய அரசின், ஆட்சி செய்யும் திறன், நாட்டு மக்களுக்கு, தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஏழ்மை என்பது, மனம் சம்பந்தப்பட்ட விஷயமே என, ராகுல் கூறுவது, ஏழைகளின் வாழ்வில், "ஆசிட்' வீசுவதற்கு சமமானது. அவர்களின் வாழ்க்கை துயரத்தை நகைப்புக்கு உள்ளாக்கும் வகையிலானது. இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-செப்-201318:46:05 IST Report Abuse
villupuram jeevithan மருத்துவமனையில் இருக்கு என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டாரே. ICU வில் இருக்கா, கோமாவில் இருக்கா, மரிச்சுவரில் இருக்கா என்று தெளிவாக சொல்லவில்லையே?
Rate this:
Share this comment
Cancel
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
08-செப்-201318:36:03 IST Report Abuse
S.MAHESH KUMAR பொருளாதாரத்தை மருத்துவமனைக்கு அனுப்பிய பெருமை யாரை சேரும் என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். வாசகர்களின் அத்தனை கருத்துக்களும் மிக அருமை.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
08-செப்-201316:44:47 IST Report Abuse
K.Balasubramanian ஊழல் அற்ற ஆட்சி நடத்த காமராஜ் போன்ற பண்பாளர்கள் தற்போது காங்கிரசில் இல்லை . LSE டாக்டர் பட்டம் போதாது .
Rate this:
Share this comment
Cancel
Abdul Raheem - india,இந்தியா
08-செப்-201316:27:33 IST Report Abuse
Abdul Raheem குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க இரண்டு வழிகள் ஒன்று சுயநல அரசியல் இரண்டு ஆன்மிகம்
Rate this:
Share this comment
Cancel
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India - Camp,Arifjan,Kuwait,குவைத்
08-செப்-201309:39:13 IST Report Abuse
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India மருத்துவமனையில் இருந்தால் கூட ஏதாவது சிகிச்சை செய்து பிழைக்க வைக்க முயற்சி செய்யலாமே. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை குழிதோண்டியல்லவா புதைத்துவிட்டார்கள் கொள்ளைக்கார படுபாவிகள்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
08-செப்-201309:29:49 IST Report Abuse
kumaresan.m " பொருளாதார மேதை என்று பட்டம் பெற்று என்ன பயன் ??? யாருக்கு பயன் ??? காங்கிரஸ் கட்சியின் தலைமை நாட்டை தவறாக வழி நடத்த சொன்னால் தட்டி கேட்ட வேண்டும் மற்றும் இது சரியான பாதை இல்லை இதனில் பயணம் செய்தால் மரணம் தான் மிஞ்சும் என்று எச்சரிக்கை விட வேண்டும் மீறினால் பதவியை தூக்கி எரிந்து விட்டு சென்று இருக்க வேண்டும் அதுதான் அழகு மற்றும் நற்பெயர் ....தனது பதவி சுகத்திற்க்காக அனைத்துக்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போன்று செயல்படுவதற்கு எதற்கு இந்த பட்டம் /படிப்பு /பதவி ???
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
08-செப்-201309:22:05 IST Report Abuse
kumaresan.m " இந்திய பொருளாதாரம்( காங்கிரஸ் ஆட்சி ) இந்திய மருத்துவமனையில் படுத்து கிடக்கிறது ....காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரம் ( சோனியா )அமெரிக்க மருத்துவ மனையில் படுத்து கிடக்கிறது இவர்களின் நோயை குணப்படுத்தும் மருத்துவராக நீங்கள் ஏன் இருக்க கூடாது????
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-செப்-201308:48:07 IST Report Abuse
Srinivasan Kannaiya படுத்து கிடந்தா என்னா.... .. ? நீங்கள் வைத்தியம் பார்க்கலாமே...
Rate this:
Share this comment
Muthu Lingam - திருநெல்வேலி,இந்தியா
08-செப்-201311:01:38 IST Report Abuse
Muthu Lingam"தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்" அவனா நீ...
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
08-செப்-201307:47:22 IST Report Abuse
Baskaran Kasimani பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள். குறிப்பாக சிதம்பரம் போன்ற திராவிட கட்சிகளின் பிரதிநிதியால் பொருளாதாரத்தை நாசம் செய்ய மட்டுமே முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
08-செப்-201306:38:01 IST Report Abuse
Loganathan நாட்டின் பொருளாதாரம் மருத்துவ மனையில் இருக்கிறது.இதற்க்கு மருந்து (t)கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை