Advertisement
திருத்தப்படாத தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு பாதகமே: முதல்வர் ஜெயலலிதா
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

09 செப்
2013
01:10
பதிவு செய்த நாள்
செப் 07,2013 23:36

சென்னை: "மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டு, "மாநில சுயாட்சி' என்ற வார்த்தைக்கு, உயிர் கொடுத்ததே தி.மு.க., தான் என, கருணாநிதி கூறியிருப்பது கேலிக்கூத்தானது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை:



தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவில், அரிசி விலை குறித்தோ, பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில், மாநில அரசே, உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்பது குறித்தோ, "பண மாற்றம்', "உணவு கூப்பன்' ஆகியவை குறித்தோ, மத்திய அரசு, எவ்வித திருத்தங்களும் கொண்டு வராத நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக, தி.மு.க., ஓட்டு போட்டது, தமிழக மக்களுக்கு இழைத்திருக்கும், மாபெரும் துரோகம். இது குறித்து, நான் வெளியிட்ட அறிக்கைக்கு, பதில் அளிக்கும் விதமாக, "உணவு பாதுகாப்பு சட்டம் லாபமா, நஷ்டமா?' என, கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருப்பது, "கழுவுற மீனிலே நழுவுற மீன்' என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.



நிதி சுமை:



தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒரு மாதத்திற்கு 3.20 லட்சம் டன் அரிசி; ஆண்டுக்கு, 38.40 லட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசு 36.78 லட்சம் டன் அரிசி வழங்கினாலும், மீதமுள்ள 1.62 லட்சம் டன், வெளிச்சந்தையில் இருந்து தான் வாங்க வேண்டும். எனவே, மத்திய அரசு தகுதி உள்ள நபர்கள் என வரையறுத்துள்ளவர்களுக்கு, ஒரு கிலோ அரிசியை, 3 ரூபாய் என்ற வீதத்திலும், ஏனையோருக்கு, ஒரு கிலோ அரிசியை, 8 ரூபாய் 30 பைசா என்ற வீதத்தில் வழங்கினாலும், தமிழகத்திற்கான நிதிச்சுமை குறையப் போவது இல்லை.



குறைப்பு:



கடந்த, 2010, மார்ச் மாதம் வரை, ஒரு மாதத்திற்கு 59,780 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த மத்திய அரசு, அதை படிப்படியாக குறைத்து, தற்போது, 29,060 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டும் வழங்குகிறது. இதேபோல், சட்டத்தில் வழிவகை செய்யாவிட்டால், அரிசி அளவை குறைப்பதோடு மட்டுமின்றி, விலையை, மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்லும். கொள்முதல் விலைக்கு, அரிசி பெறக்கூடிய நிலை, மாநில அரசுக்கு ஏற்படும். இப்படிப்பட்ட ஒரு சட்டத்தை ஆதரித்ததன் மூலம், கருணாநிதி மிகப்பெரிய துரோகத்தை புரிந்துள்ளார்.



இரட்டை வேடம்:



மத்திய அரசு, 14.90 லட்சம் டன் அரிசிக்கு, விலை நிர்ணயம் செய்வது என்பதை, தி.மு.க., ஏற்றுக் கொள்ளாது என அறிவித்துவிட்டு, அதற்கான திருத்தத்தை, மத்திய அரசு கொண்டு வராத சூழலில், தி.மு.க., - எம்.பி.,க்களை, தமிழகத்திற்கு எதிரான சட்டத்திற்கு, ஓட்டு போட செய்த, கருணாநிதியின் செயல் இரட்டை வேடம் என்பதையும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை ஆதரித்தது, தன்னலத்திற்காக என்பதையும், அறிவார்ந்த தமிழக மக்கள், எளிதில் புரிந்து கொள்வர். நான், பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில், குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திருத்தங்களையும், மத்திய அரசு மேற்கொள்ளாத வரை, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், தமிழகத்திற்கு பாதகமானதாகவே அமையும். இப்பிரச்னையில், இரட்டை வேடம் போடுவது யார்? தமிழகத்திற்கு பாதகமான சட்டத்தை, ஆதரித்ததால் யாருக்கு லாபம் என்பதை தமிழக மக்கள் சீர்தூக்கி பார்த்து, அதற்கு விடை அளிக்கும் நாள், விரைவில் வர உள்ளது என்பதை, கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sakthivel habshan abudhabi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-201309:09:37 IST Report Abuse
  sakthivel habshan abudhabi இருபேர்கலுமே பேசுவது அரசியலாகவே உள்ளது , ஒருவர்மீது ஒருவர் குதிரை ஏறுவதை எப்போது நிறுத்துவோம்?.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
08-செப்-201315:20:47 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு சபாஷ் சரியான போட்டி.
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
08-செப்-201306:15:07 IST Report Abuse
Thangairaja அம்மா.......சீதேவி.......நீங்க சாத்தியமான்னு கேட்ட சமயத்துல, முடியுமென்று சொல்லி கிலோ ஒரு ரூபாய்க்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை மத்திய அரசின் துணை இல்லாமலே மத்திய அரசை விமர்சிக்காமலே விநியோகித்து வெற்றி கண்டவர் இந்த கருணாநிதி என்ற சாதனையாளர். உங்களை ஆதரிக்கும் மக்களுக்கு வேண்டுமானால் அது மறந்திருக்கலாம், அந்த ஒரு ரூபாயை மட்டும் நீக்கி விட்டு விலையில்லா அரிசி கொடுக்கும் நீங்கள் மறக்கலாமா. குருத்துரோகம் கொடுமையானதம்மா.........இப்போதும் கூட நீங்கள் விட்டுப்போனால் இதை விட சிறப்பாக இத்திட்டத்தை நடத்தும் நிர்வாகத்திறமை அவருக்கு உண்டு.
Rate this:
160 members
0 members
184 members
Share this comment
Sembiyam Balan - Bhopal,இந்தியா
09-செப்-201317:39:17 IST Report Abuse
Sembiyam Balanதிரு தங்கராஜ் அவர்களே இந்த கருது காமடிக்கு ஒரு அளவில்லையா ......
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
vandu murugan - chennai,இந்தியா
08-செப்-201304:27:17 IST Report Abuse
vandu murugan நீங்க சொல்றத நான் நம்புறேன் கவலை படாதிங்கம்மா, நீங்கள் மக்களுக்கு நல்லது செய்வதில் தொடர்ந்து gavanam செலுதுங்கம்மா சிலர் உங்கள் வளர்ச்சி மேல் பொறாமை கொண்டு உள்ளனர் அவர்களை புறந்தள்ளி விடுங்கள் அம்மா
Rate this:
20 members
122 members
104 members
Share this comment
Cancel
Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
08-செப்-201303:29:54 IST Report Abuse
Karuppiah Sathiyaseelan மு க ,கட்சதிவு, காவேரி நீர் பிரச்னை,தமிழகத்திற்கு எதிரான மசோதகளை,ஆதரிப்பது ,என எல்லாவற்றிலும் ,இரட்டை வேடம் போட்டு ,சோனியாவை ஆதரிக்கிறார்.
Rate this:
252 members
0 members
138 members
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
08-செப்-201303:06:04 IST Report Abuse
Sekar Sekaran பேரம் படிந்த நிலையில் தனது சொந்த குடும்பத்தின் நலன் கருதியே கருணா அவர்கள் எந்த ஓர் முடிவினையும் எடுப்பார். வார்த்தை ஜாலங்கள் மூலம் ஏமாற்றலாம் என்கிற வித்தை அறிந்தவர். மாநிலத்தில் தனது செல்வாக்கு என்பது செல்லாகாசாகிப்போனது..என்பதை உணர்ந்தவர்..இருக்கும் எம் பிக்களை வைத்து முடிந்தவரை என்னென்ன துறையில் பணம் பண்ண முடியுமோ..அதே நேரத்தில் அம்மாவுக்கு என்னென்ன வகையில் தொந்தரவு செய்ய முடியுமோ அவற்றை கச்சிதமாக செய்து கடைந்தெடுத்த துரோகத்தை செய்துவருகின்றார். அம்மாவின் ஒவ்வோர் குற்றசாட்டுமே அக்மார்க் உண்மை. இன்றையை இளைஞர்கள் அனைவரும் இணையம் மூலம் தொடர்புகொண்டு உண்மையை அறிந்த காரணத்தால் இன்றைக்கு திமுக மீதான கோபம் கட்டுக்குள் அடங்கா அளவுக்கு உள்ளது. சென்ற சட்டசபை தேர்தலில் படு தோல்வியை சந்தித்த திமுக இந்தமுறை அறுதியிட்டு சொல்வேன்..சவாலாகவே சொல்வேன்..பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஓர் இடம்கூட கிடைக்காமல் நாற்பதிலும் தோல்வியை சந்திக்கும். மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டில்.."கை" வைக்க சொன்னவர்கள்..மின்சார ஒதுக்கீட்டில் "கை" வைக்க சொன்னவர்கள்..இப்போது அரிசியிலும் "கை" வைக்க துணிந்துவிட்டனர். இதற்காகத்தானா திமுகவினர் பாராளுமன்றம் சென்றனர்? யோசித்த இளைஞர்கள் எண்ணிக்கை பல்லாயிரம் ஒவ்வோர் தொகுதியிலும் உள்ளனர்..பதிவு செய்யப்படும் ஒவ்வோர் ஓட்டும் "கையை" முறிக்கும்..செய்ய சொன்னவர்களை அடியோடு திண்ணையை விட்டு கூட துரத்தும்..உண்மையான நிகழ்வுகளை காணத்தான் போகின்றோம்..அதுவரை ஆடட்டுமே இந்த திமுக காங்கிரஸ் ஊழல் கூட்டணியினர்..பாதகமே அவர்களுக்கு..
Rate this:
248 members
0 members
189 members
Share this comment
vandu murugan - chennai,இந்தியா
08-செப்-201319:37:16 IST Report Abuse
vandu muruganஇன்றைய உலகில் யாருமே நல்லவரும் கிடையாது அதே போல கேட்டவரும் கிடையாது...
Rate this:
1 members
0 members
103 members
Share this comment
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
08-செப்-201302:35:12 IST Report Abuse
தங்கவேல்  நீங்க இலவசத்தை நிறுத்துங்கள் எல்லாமே சரியாகிவிடும்.. வீணான அரிசியை இலவசமாகத்தந்து யாரும் உபயோகிப்பதில்லை. பலர் கடையிலேயே கொடுத்துவிட்டு பணம் பெற்றுக்கொள்கின்றனர். அது ஆந்த்ரா... கேரளா என ஏற்றுமதி ஆகின்றன. வாங்கும் சிலரும் அதை உணவுக்கு பயன் படுத்துவதில்லை. அது மாட்டுதீவனமாக உபயோகிக்கின்றனர். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், அதை கூழ் வடவமாக (கூழ் வற்றல்) செய்து பயன் படுத்துகின்றனர். இந்த நிலையில் இலவச அரிசி தேவைதானா ?
Rate this:
55 members
0 members
90 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
08-செப்-201301:27:18 IST Report Abuse
NavaMayam அம்மா மதிய அரசு மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு சுமார் 50 ரூபாய் மான்யம் கொடுத்து கொடுக்கிறது ... கேசுக்கு சிலிண்டெர் ஒன்றுக்கு சுமார் 400 ரூபாய் மான்யம் கொடுத்து மக்களுக்கு கொடுக்கிறது ... இந்த பெற்றோலிய பொருட்களின் மான்யதால் மட்டும் மதிய அரசுக்கு சுமார் 1.5 லட்சம் கோடி ரூஒபை இழப்பு ஏற்படுகிறது... அது ஐந்து வருசத்துக்கு முன் இருந்த கேஸ் இணைப்புகளை விட அதிக பங்கு கேஸ் இணைப்புகள் கொடுத்துள்ளது... அதை ஆதாரமாக வைத்து மண்ணெண்ணெய் சப்ளையை குறைக்கிறது ...இரண்டு நட்டங்களை தாங்க வேண்டியுள்ளதால் அது அந்த இழப்பை தவிர்க்க நினைக்கிறது ... ஆனால் இப்படி கொடுக்கும் மண்ணெண்ணெய் வெளியில் விற்கபடுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை ... மதிய அரசுக்கு ஏற்படும் நட்டமும் நமக்கு ஏற்படும் நட்டம்தான் என்று எல்லா மாநில அரசுகளும் பொது விநியோக முறையில் உள்ள ஊழர்களை களைந்து மதிய அரசுக்கு உதவி புரிய வேண்டியது அவசியம் ... அரிசியும் மதிய அரசு தேவையானவர்களுக்கு மட்டுமே கொடுத்து அதனால் வரும் நட்டத்தை குறைக்க நினைக்கிறது ...அதையே நீங்களும் செய்து விட்டு போங்கள்... அனால் நீங்கள் தேவை இல்லாதவர்களுக்கும் , அதை வாங்காதவர்களுக்கும் உள்ள அரிசியை மதிய அரசு கொடுக்க வேண்டும் , அதில் கட்சி காரர்கள் ஊழல் பண்ண வேண்டும் என்று நினைகிறீர்கள் .....
Rate this:
158 members
0 members
273 members
Share this comment
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
08-செப்-201307:18:59 IST Report Abuse
vaaithaa vampanநவமயம் அவர்கள் கருத்து நூறு சதம் உண்மை. தேவைக்கு அதிகமான மானியம் ஊழலுக்கு வழிவகுக்கும் ......
Rate this:
41 members
0 members
120 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
08-செப்-201300:58:41 IST Report Abuse
Vettri தமிழகத்தை பற்றியும் தமிழர்களை பற்றியும் எதற்க்காக சிந்திக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் தனக்கு பலன் ஏற்படுகிறதோ அது தான் முக்கியம். தமிழர்களை பற்றி சிந்திப்பதால் என்ன பலன்? ராஜ்ய சபை தேர்தலில் பெற்ற ஓட்டிற்காக தீர்க்கப்பட்ட செஞ்சோற்று கடன் இது.
Rate this:
208 members
0 members
179 members
Share this comment
vadivelu - chennai,இந்தியா
08-செப்-201307:17:35 IST Report Abuse
vadiveluஇல்லை பி ஏன் சிங்கை மாற்றியதற்கு கைம்மாறு.ஆனாலும் காங்கிரச காரியம் சாதித்வுடன் தலைவருக்கு அல்வா கொடுத்து விட்டது....
Rate this:
83 members
0 members
35 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.