Abdul kalam on mother tongue | அறிவியல் சாதனைக்கு உறுதுணையாக இருந்தது தமிழ் மொழியே: அப்துல் கலாம் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் சாதனைக்கு உறுதுணையாக இருந்தது தமிழ் மொழியே: அப்துல் கலாம் பேச்சு

Updated : செப் 09, 2013 | Added : செப் 07, 2013 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Abdul kalam,mother tongue,அறிவியல் சாதனை,உறுதுணை, தமிழ் மொழி,அப்துல் கலாம், பேச்சு

பேரூர்: ""அறிவியல் துறையில் நான் சாதித்திட ஊக்கமாக இருந்தது, தமிழ் வழியில் நான் கற்ற ஆரம்பக்கல்வி தான்,'' என்று, கோவை மாவட்டம் பேரூரில் நடந்த தமிழ் பயிற்றுமொழி மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
கோவை மாவட்டம் பேரூரில், தமிழ் பயிற்றுமொழி -வழிபாட்டு மொழி மாநில மாநாடு நேற்று துவங்கியது. தொடக்க விழா, பேரூராதீன வளாகம், தொல்காப்பியர் அரங்கில், தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் வரவேற்புடன் துவங்கியது. பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசுகையில், ""60 ஆண்டுக்கு முன் துவக்கப்பட்ட பேரூர் தமிழ்க்கல்லூரி, மணிவிழா ஆண்டை கடந்து நிற்கிறது. சிறப்புக்குரிய செந்தமிழ் மொழியின் சிறப்பையும், அதன் பழமையையும் பரப்புவதை நோக்கமாக கொண்டு இக்கல்லூரி செயல்படுகிறது. ""இந்த மண்ணில் சிறப்புற்று விளங்கும் திருக்கோவில்களில் தமிழ் வழியில் திருக்குட நன்னீராட்டு விழாக்கள் சிறப்பாக நடந்தேறியுள்ளன. தமிழ்மொழி மற்றும் சமயத்தை பரப்புவதில் மடம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தமிழ் மற்றும் தமிழர்களின் எதிர்காலம், இளைய தலைமுறையை நம்பியுள்ளது,''என்றார்.

மாநாட்டை துவக்கி வைத்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: நாம் மற்றவருக்கு விளக்காகவும், ஏணியாகவும், படகாகவும் இருக்கவேண்டும். நான் ஆரம்பக்கல்வியை தமிழ் வழியிலேயே கற்றேன். பிற்காலத்தில் அறிவியல் துறையில் நான் சாதித்திட, எனக்கு இது மிகவும் ஊக்கமாக இருந்தது. மொழி என்பது இனத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சேமிப்புக்கிடங்கு, தகவல் சுரங்கம். காலம், தலைமுறையைக் கடந்து நிற்பது தாய்மொழிதான். ஆரம்ப காலத்தில் அறிவியல் பாடத்தை தமிழில் பயின்றது முக்கிய காரணம். கல்வி என்பது வியாபாரமல்ல. மிகப்பெரிய கட்டடத்தில் கல்வி பயின்றால் மட்டுமே, ஒருவர் சாதித்துவிட முடியாது. தரமான கல்வியை, அறப்பணி நோக்கில் போதிக்கும் ஆசிரியர்களால், லட்சிய ஒழுக்கத்துடன் கல்வி பயில்பவர்களே கல்வியில் சாதிக்க முடியும். ஆசிரியர்கள், தாம் செய்யும் பணியை தரத்தோடு செய்ய வேண்டும். அறிவார்ந்த நாடாக வளர, விதை விதைப்பதே சமுதாயத்துக்கு நாம் செய்யும் கடமை. போரில்லாத உலகத்தை உருவாக்க நமது மக்கள் ஒன்றுபட வேண்டும். உறக்கத்தில் வருவதல்ல கனவு, உறங்காமல் செய்வதே கனவு. இந்த மாநாட்டில், தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழின் சிறப்பை நிலை நிறுத்தவும், பல்வேறு பரிமாணங்களுக்கு கொண்டு செல்லவும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இளைய தலைமுறையினர் அனைவரும் கல்வியில் சாதித்தால், நிச்சயம் நமது நாடு வல்லரசாக மாறும். இவ்வாறு, அப்துல் கலாம் பேசினார். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசுகளை, கலாம் வழங்கினார். நிறைவாக, மாநாட்டு செயலர் அப்பாவு நன்றி கூறினார். தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில், கருத்தரங்குகள் நடந்தன. மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள், இன்று நடக்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
08-செப்-201317:51:18 IST Report Abuse
K.Sugavanam எல்லாரும் ஆரம்ப கல்வி தமிழ்ல தானே படிக்கிறாங்க...அப்புறம் என்ன?
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
08-செப்-201313:34:09 IST Report Abuse
Nalam Virumbi டாக்டர் கலாம் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. தமிழ் வாயிலாக ஆரம்பக் கற்றவர்கள் சாதித்ததை பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும் என்கிற பள்ளிகளில் படித்தவர்கள் சாதிக்கவில்லை. சாதித்ததெல்லாம் நமக்கு வேண்டாத மேலை நாட்டு நாகரிகம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
08-செப்-201310:56:23 IST Report Abuse
Matt P அறிவியலிலும் குடியரசுத்தலைவராக அரசியலிலும் ஒருவர் சாதித்த்போதும் தன தாய்மொழியான தமிழ் தன வளர்ச்சிக்கு தடங்கல் இல்லாமல் இருந்தது ...மாறாக தன வளர்ச்சிக்கு உதவியது என்று சொல்கிறார் என்றால் ...அது சிந்திக்கத்தக்கது...பாராட்டத்தக்கது...,,,இங்கிலீஷ் வளர்ந்ததன் காராணம் ....இங்கிலிஷ்காரன் உலகத்தின் பலநாடுகளை ஆண்டதாலும்...இங்கிலீஷ் பலமொழிகளிலிருந்து வார்த்தைகளை ஏற்று கொண்டதாலும் தான்.........இங்கிலீஷ் ஒன்றும் ....லடினை போல சமஸ்கிருதத்தை போல கிரேக்கை போல அரபியை போல ...தமிழை போல ....உலகத்தின் முன்னோடி மொழி அல்லவே .......இங்கிலீஷ் ...வளர்ந்து எல்லா நாடுகளிலும் பரவி உலக மொழியாகிவிட்டதால் அதுவும் தாய்மொழியோடு தேவையான மொழியாகபடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
08-செப்-201310:53:22 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN அப்துல் கலாமின் பேச்சு நூற்றில் ஒரு வார்த்தை. நானும் ஒரு பொறியியலாளன் என்ற முறையில் இதை ஏற்றுக்கொள்கிறேன். ஆரம்பக்கல்வி (அறிவியல், சமூக இயல், சரித்திரம், கணிதம்) தமிழில் இருந்ததால்தான் என்னால் பிற்காலத்தில் பொறியியல் உத்திகளை ஆங்கிலத்தில் படிக்கும்போது சரியாக உணர்ந்துகொள்ள மிகவும் உதவியாக இருந்தது. தமிழோடு ஆங்கிலமும் நல்ல முறையில் படித்திருந்தால் நம்மை வளர்த்துக்கொள்வதில் தடை இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
itashokkumar - Trichy,இந்தியா
08-செப்-201308:44:00 IST Report Abuse
itashokkumar எழுத்தாளர் சுஜாதா எழுதிய "கம்யூட்டரின் கதை" என்ற புத்தகமே என்னை போல தொழிற்கல்வி படிக்காதவன், கம்யூட்டர் கற்க காரணமாக இருந்தது, அவர் எப்பவோ எழுதிய விஷயங்கள் இப்போது தான் இந்தியாவில் எட்டி பார்க்கிறது. அவருடைய எழுத்துக்களில் இருந்த மேன்மை, அறிவு வேறு புத்தக்காகங்களில் நான் பார்த்தது இல்லை. இன்னமும் தமிழில் அறிவியலை ஜல்லி அடிக்காமல் எழுத ஆள் இல்லை. எந்த தமிழக அரசும் அவரை கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசு மட்டும் போனால் போகிறது என்று ஒரு விருது கொடுத்தது. மின்னணு ஓட்டு இயந்திரத்திர ப்ராஜெக்ட் தலைவர் அவர்தான்(பெல்). கற்றதில் சிறந்தும்,பெற்றதில் நிறைந்தும் இருந்தவர் அவரே. அவருடைய "கம்யூட்டரின் கதை" புத்தகத்தை பாடமாக வைக்க இயலும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskar Jain. - Stockholm,சுவீடன்
08-செப்-201307:20:24 IST Report Abuse
Bhaskar Jain. அவர் கடவுளுக்கு சமமானவர் .
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
08-செப்-201306:39:45 IST Report Abuse
Thangairaja ""அறிவியல் துறையில் நான் சாதித்திட ஊக்கமாக இருந்தது, தமிழ் வழியில் நான் கற்ற ஆரம்பக்கல்வி தான்,'' அப்துல் கலாம் அவர்களின் இந்த பேச்சை எத்தனை இளைஞர்கள் ரசிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆங்கிலமும் இந்தியும் ஆத்திசூடியிலிருந்தே கற்காததால் தங்கள் வாழ்வும் எதிர்காலமும் இருண்டு விட்டதாக புலம்புவோர் மத்தியில் தமிழகத்தின் இரு பெரும் சாதனையாளர்கள் (அப்துல் கலாம், சதாசிவம்) தமிழ் வழி கல்வி தான் தங்களை தலை நிமிர செய்ததாக சொல்வது தாய்த்தமிழின் பெருமைக்கு சான்று. (மாநிலங்களவையில் கடந்த 5ஆம் தேதி உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசியல் சீடருமான தருண் விஜய் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்திருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்ட அவர், தமிழை இந்தியாவின் தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார். அத்துடன் நிற்காமல் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் தமிழுக்கு தேசிய இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும் வட இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தமிழின் சிறப்பை பரப்ப வேண்டும் தமிழ் மொழியை பயிலும் வட இந்தியர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் ஏழு கடல், ஏழு மலை தாண்டி சிறந்து விளங்கும் செம்மொழியான தமிழின் சிறப்பை வட இந்தியரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தருண் விஜய் பேசியிருக்கிறார். இதற்காக மு க மற்றும் ராமதாஸ் தருண் விஜய்க்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லியிருக்கிறார்கள்.) ஆனால் தமிழகத்தில் செம்மொழியான தமிழின் நிலை என்ன? கருணாநிதி உருவாக்கினார் என்பதற்காக செம்மொழி ஆராய்ச்சி நிறுவனமே குப்பைக்கு போய் விட்டது.
Rate this:
Share this comment
Chandru K - Paris,பிரான்ஸ்
08-செப்-201308:55:57 IST Report Abuse
Chandru Kநீங்கள் சொல்வது அனைத்தும் சரி ராசா.... ஆனால் உங்கள் கடைசி வரிக்கான காரணத்தையும் நீங்களே சொல்லி இருக்கலாமே "பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவை பருவம் அடைந்தவளாம் கருணை நதியிலே குளித்தவளாம் காவிரிக் கரையில் களித்தவளாம் தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் – தமிழ்த் தாயின் மலரடி வணங்கிடுவோம்"... என்று வெறுமனே வாய் அசைக்காமல் தமிழ் மொழி காக்க ஆட்சிக்கு வந்தவுடன் அமரர் எம்.ஜி.ஆர். தஞ்சைத் தரணியிலே "தமிழ்ப் பல்கலைக்கழகம்" அமைத்தார். தமிழ் அறிஞர்கள் 100 ஏக்கர் தேவை என்றனர் ஆனால் எம்.ஜி.ஆர். தந்தது 1000 ஏக்கர் நிலம். இதே தினமலரில் செய்தி வந்தது. அந்த தமிழ் பல்கலைகழகத்தின் கதி என்ன?...
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
08-செப்-201305:49:10 IST Report Abuse
N.Purushothaman தமிழ் என்பது மோகம் கொள்ள கூடிய காதல் கொள்ள கூடிய பாசம் கொள்ள கூடிய ஒரு சிறந்த மொழி .....என்ன தான் மற்ற மொழிகளை நாம் தெரிந்து கொண்டாலும் தமிழ் பேசுவது ,தமிழில் எழுதுவது என்பது ஒரு தீராத உணர்வு....அதை வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்வது நம் தலையாய கடமை....இங்குள்ள சிலர் அரசியல ஆதாயம் பெற தமிழை மற்ற மொழிக்கு போட்டியாக நினைக்க வைக்க கடும் முயற்சி செய்கின்றனர்....தமிழ் எந்த மொழிக்கும் போட்டியானது அல்ல....
Rate this:
Share this comment
Cancel
prabhu - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
08-செப்-201301:39:22 IST Report Abuse
prabhu இஸ்லாமில் அப்துல் கலாம் போல் ஒரு சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
08-செப்-201301:21:36 IST Report Abuse
Vettri தமிழராக தமிழை கற்பது அவசியம் அதே வேலை மற்ற மொழிகளையும் தகவல் தொடர்புக்காகவும், வாணிகம் செய்வதற்கும் கற்பதில் தவறில்லை. தமிழை மட்டுமே அறிந்து கொண்டு அதை சிறப்பான மொழி என்று போற்றுவதை விட பல மொழிகளை அறிந்த பின்னர் தமிழ் எவ்வளவு உயர்ந்தது என்று ஏற்படும் ஞானம் சிறந்தது.
Rate this:
Share this comment
Sriram - chennai,இந்தியா
08-செப்-201311:20:04 IST Report Abuse
Sriramஇப்படி தான் பாரதியார் தமிழின் பெருமையை உணர்ந்து "யாம் அறிந்த மொழிகளிலே தமிழை போல் எங்கும் கண்டதில்லை என்று கூறினார்". ஐயா அப்துல் கலாம் கூறியது போல் நமது தாய் மொழியில் அறிவியல் வளர்ப்பது மிகவும் நல்லது. மேலும் கற்பதற்கும், பேசுவதற்கும் பிற மொழி உபயோகம் தவறில்லை....
Rate this:
Share this comment
Krish - Madurai,இந்தியா
08-செப்-201311:42:01 IST Report Abuse
Krishவெற்றி அவர்களே, உங்கள் கருத்து யதார்த்தமானது. சூப்பர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை