E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
விமான நிலையங்களின் ஆணையம் திருப்பி தந்த 850 ஏக்கர் நிலம்: தமிழக அரசு "அடம்'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

09 செப்
2013
01:11
பதிவு செய்த நாள்
செப் 07,2013 23:45

சென்னை விமான நிலைய, இரண்டாவது ஓடுபாதை அமைக்கும் பணிக்காக, தமிழக அரசு கையகப்படுத்திய நிலங்களில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ.,), திரும்ப வழங்கிய நிலத்தை உடனடியாக, அதன் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விமான நிலைய விரிவாக்க பகுதி நில உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த, 2007, அக்டோபர் மாதம், சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது ஓடுபாதை விரிவாக்க பணிக்காக, மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், காரப்பாக்கம், தொரப்பாக்கம் மற்றும் கோவூர் பகுதிகளில் இருந்து, 1,066.99 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு கையகப்படுத்தி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடம் (ஏ.ஏ.ஐ.,) அளித்தது. இதில், 126.56 ஏக்கரை ஓடுபாதை அமைக்கவும், 92.62 ஏக்கரை, விமானத்திற்கான எண்ணெய் கிடங்குகள், விமான நிறுத்தம் மற்றும் விமானத்தை பழுது பார்க்கும் இடங்களை அமைக்கவும், ஏ.ஏ.ஐ., பயன்படுத்திக் கொண்டது. இரண்டாவது ஓடுபாதை அமைக்கும் பணி, திட்டமிடப்பட்ட, 3,235 மீட்டர் தூரத்திற்கு போடப்படாமல், 2,768 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே போடப்பட்டது.



கடிதம்:



இதுகுறித்து கடந்த, 2011, நவம்பர் மாதம், ஏ.ஏ.ஐ., உறுப்பினர் (திட்டமிடல்) ரகேஜா, தமிழக செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், "இணை ஓடுபாதை அமைக்கும் பணி கைவிடப்பட்டுவிட்டது. தமிழக அரசு கையகப்படுத்திய, 1,066.99 ஏக்கரில், ஏ.ஏ.ஐ., பயன்படுத்திய, 219.18 ஏக்கர் தவிர்த்து மீதமுள்ள, 850.81 ஏக்கர் நிலத்தை, அவற்றின் உரிமையாளர்களுக்கே திருப்பி வழங்கலாம்' என, கூறப்பட்டுள்ளது. தற்போது, 21 மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை, 850 ஏக்கர் நிலத்தை அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.



பாதிப்பு:



இதுகுறித்து, நில உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: தற்போது இப்பகுதியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இப்பகுதியில், நிறைய வீடுகள் அரைகுறையாக கட்டப்பட்ட நிலையில், புதர்மண்டி கிடக்கிறது. வங்கிகள், எங்கள் வீடுகளின் பேரில், கடன் கொடுக்க மறுக்கின்றனர். தமிழக அரசு உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, அவர்கள், "இது சாதாரண வேலை பிறகு பார்ப்போம்' என்று தட்டிக் கழிக்கின்றனர். ஏ.ஏ.ஐ., பயன்படுத்தாமல் திரும்ப வழங்கிய, 850 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு திரும்ப வழங்காமல் இழுத்தடிப்பதால், நாங்கள் பொருளாதார ரீதியாவும், மன ரீதியாவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். நிலங்களை, உடனடியாக வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நில உரிமையாளர்கள் கூறினர்.

- நமது நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan - Alberta,கனடா
08-செப்-201314:49:28 IST Report Abuse
Nallavan தமிழக அரசு உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, அவர்கள், "இது சாதாரண வேலை பிறகு பார்ப்போம்' என்று தட்டிக் கழிக்கின்றனர். இவனுங்க சம்பளத்தை ஒரு ரெண்டு வருஷம் பிடிச்சு வைக்கலாமே
Rate this:
0 members
0 members
37 members
Share this comment
Cancel
Nagarajan Thamodharan - From Panagudi,Tirunelveli,ஓமன்
08-செப்-201309:46:24 IST Report Abuse
Nagarajan Thamodharan திராவிட கட்சிகள் தங்களுக்கே பட்டா போட்டகிவிட்டதோ என்னமோ ? முதலில் EC போட்டு பாருங்கள்.
Rate this:
0 members
0 members
29 members
Share this comment
Cancel
gmohan - chennai,இந்தியா
08-செப்-201308:29:19 IST Report Abuse
gmohan மக்களே, CM செல் என்று ஒன்று உண்டு... அங்கு முறை இட்டீர்களா? ஆராய்ச்சி மணி அடித்தீர்களா?
Rate this:
5 members
0 members
11 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
08-செப்-201307:30:50 IST Report Abuse
Baskaran Kasimani ஒரு வேளை மொத்தமாக ஏப்பம் விட திட்டமோ என்னவோ. இது போன்ற வேளைகளில் இரண்டு குப்பைகளும் பின்னணியில் ஒன்று சேர தயங்காது...
Rate this:
3 members
0 members
31 members
Share this comment
Nallavan - Alberta,கனடா
08-செப்-201314:51:04 IST Report Abuse
Nallavanரெண்டு குப்பை இல்லண்ணே, எல்லாப்பயலும் குப்பைதான்...
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
08-செப்-201317:58:46 IST Report Abuse
Pannadai Pandianஏப்பம் விட இது என்ன பழைய ஆட்சியா ???...
Rate this:
9 members
0 members
1 members
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
08-செப்-201307:20:57 IST Report Abuse
gmk1959 சைனா பிடுங்கி கொண்ட 760 சதுர கீ .மீ. நிலத்தையே நங்கள் கேட்கவில்லை . மக்கள் நிலத்தினை கேட்போமா?
Rate this:
8 members
0 members
17 members
Share this comment
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
08-செப்-201302:03:33 IST Report Abuse
தங்கவேல்  முதலில் கவுன்சிலரை கண்டுகிட்டீங்களா ?
Rate this:
0 members
0 members
21 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.