E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வட மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர ஏற்பாடு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

09 செப்
2013
01:12
பதிவு செய்த நாள்
செப் 07,2013 23:47

வட மாநிலங்களில் இருந்து, தென் மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொண்டு வர, தமிழகத்தில், நான்கு இடங்களில், 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், மின்சாரத்திற்கான தேவை, 12 ஆயிரம் மெகா வாட் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், மின் உற்பத்தி, சராசரியாக, 8,000 மெகா வாட் என்ற குறைந்த அளவில் உள்ளது. இதனால், பற்றாக்குறை மின்சாரம், வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல், மின்வெட்டு, கட்டுப்பாடு போன்றவற்றின் மூலம் ஈடு செய்யப்படுகிறது. தென் மாநிலங்களின் மின் கட்டமைப்புக்கும், வடமாநில மின் கட்டமைப்புக்கும் இடையில், மின்சாரம் பெறுவதில், மின் தொடரமைப்பில், கட்டமைப்பு வசதி போதுமான அளவிற்கு இல்லை. இதனால், குறைந்த அளவிலேயே மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. இதையடுத்து, வடக்கு மண்டலத்தில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை, தென் மண்டலத்துடன் இணைக்க, மின் தொடர் பாதைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிரா-சோலாப்பூர், கர்நாடகா-ராய்ச்சூர், ஆந்திரா-கர்னூல், தமிழகம்-வேலூர் வழித்தடம்; மகாராஷ்டிரா-கோல்காபூர், கர்நாடகா - பிரிதிவாடி - மதுகிரி, தமிழகம் - தர்மபுரி வழித்தடம் என, இரண்டு மின் வழித்தடத்தில், மின்சாரம் கொண்டு வருவதற்கான மின் கட்டமைப்பு அமைக்கும் பணி, "பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா'வின் மூலம், 2012ல் துவங்கப்பட்டது. இதற்காக, தமிழகத்தில், அரியலூர் - கிழக்கு, தர்மபுரி மேற்கு, தூத்துக்குடி - தெற்கு, வேலூர் - வடக்கு ஆகிய நான்கு இடங்களில், 765 கிலோ வோல்ட் துணை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது, வேலூர் மாவட்டம், திருவலத்தில், துணை மின் நிலையம் அமைக்கும் பணி, முடியும் தருவாயில் உள்ளது. மற்ற இடங்களில், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து, அடுத்த கட்ட பணி துவங்கி உள்ளது. பவர்கிரிட் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்படும், 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அருகில், மின் வாரியம் மூலம், 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் வழியாக, மின் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகள், அடுத்த ஆண்டுடன் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, அனைத்து மின் வழித்தடங்களும், ஒரே மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம், வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கும், இங்கிருந்து, பிற மாநிலங்களுக்கும் எளிதாக மின்சாரம் கொண்டு செல்லப்படும் என, தெரிகிறது. இது குறித்து, மின் வாரிய ஊழியர் ஒருவர் கூறுகையில், "ஒரே கட்டமைப்பு ஏற்படுத்துவதால், வட மாநிலங்களில், உபரியாக உள்ள மின்சாரம், தென் மாநிலங்களுக்கு கொண்டு வரப்படும். உயர் அழுத்த பாதைகள் அமைக்கப்படுவதால், மின் திருட்டு மற்றும் இழப்பு வெகுவாக குறையும்' என்றார்.



தமிழகத்தில் மின் வினியோகம் எப்படி?



வேலூர் வழியாக, மேட்டூர், திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களுக்கும், அரியலூர் வழியாக, நாகை, கடலூர், திருச்சி ஆகிய இடங்களுக்கும், மின் வினியோகம் செய்யப்பட உள்ளது. மேலும், தர்மபுரி வழியாக, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கும், தூத்துக்குடி வழியாக நெல்லை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கும், மின்சாரம் கொண்டு செல்லப்பட உள்ளது.

- நமது நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - சென்னை,இந்தியா
08-செப்-201319:30:29 IST Report Abuse
தமிழன் எனக்கென்னவோ கூடங்குளம் மின்சாரத்தை அங்கே எடுத்துச் செல்ல போடப்படும் திட்டம் தான் இது எனத் தெரிகிறது. அடுத்த அணு உலை பயன்பாட்டுக்கு வந்து விட்டால் அதை எடுத்துச் செல்ல வேண்டுமே?
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
M.Balakrishnan - Chennai,இந்தியா
08-செப்-201318:57:35 IST Report Abuse
M.Balakrishnan கிரிட் வேலை முடியும் போது, அங்கே தட்டுப்பாடு என சொல்லி தரமட்டார்களோ? ஏனெனில் அங்கேயும் தொழில்துறை எல்லாம் வளமடைய வேஎண்டுமல்லவா நம் மாநிலத்தில் உள்ள காற்றாலை மின்சாரத்தை சரியாக உபயோகப் படுத்தவில்லை. உற்பத்தியாளர்களுக்கு சரியாக பணம் பட்டுவாடா செய்வதில்லை. பலசமயம் அவர்களிடமிருந்து மின்சாரம் வாங்குதில்லை. ஏன்?
Rate this:
0 members
0 members
155 members
Share this comment
Cancel
sakthivel habshan abudhabi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
08-செப்-201318:34:28 IST Report Abuse
  sakthivel habshan abudhabi தமிழகத்தில் மின்சாரப்பிரச்சனை தீர்ந்தால் அடுத்தும் அம்மா அட்ச்சிதான் .
Rate this:
98 members
0 members
4 members
Share this comment
Cancel
Sivramkrishnan Gk - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-செப்-201312:08:51 IST Report Abuse
Sivramkrishnan Gk காங்கிரஸ் நிச்சயமாக கருணாநிதியோடு சேர்ந்து இதற்கு முட்டுக்கட்டை போடும். அதனை உடைக்க தமிழர்கள் ஒன்று பட வேண்டும்.
Rate this:
111 members
0 members
3 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-செப்-201310:49:10 IST Report Abuse
villupuram jeevithan வட மாநிலங்களுடன் இணைக்கும் மின் தடம் தேவை என்பதை உணரவே இவ்வளவு வருடங்கள் ஓடிவிட்டன. 2012ல் ஆரம்பித்து எப்போ முடிக்கப் போகிறீர்களோ? 15 வருடங்களாய் தொடர்ந்து மத்தியில் இருந்தவருக்கு இதில் கவனம் செலுத்த நேரமில்லை?
Rate this:
76 members
0 members
6 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-செப்-201309:15:37 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த அரசு கண் கேட்டும் சூரிய நமஸ்காரம் செய்ய தயாராக இல்லை..இதை எல்லாம் செய்து முடிக்க குறைந்தது 5 ஆண்டுகளாவது ஆகும்.. அதுவரை மின்வெட்டு இருக்கத்தான் செய்யும்..இந்த மின் நிலையங்களால் மின் உற்பத்தி செய்ய முடியாது..விநியோகம்தான் செய்ய முடியும்.. மின் உற்பத்திக்கு என்ன செய்தீர்கள்..?
Rate this:
3 members
0 members
132 members
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
08-செப்-201308:43:32 IST Report Abuse
JALRA JAYRAMAN , நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து,இதை எதிர்த்து ஏன் யாரும் போராட்டம் செய்யவில்லை அது தானே வழி முறை
Rate this:
1 members
1 members
131 members
Share this comment
Cancel
B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்
08-செப்-201308:27:42 IST Report Abuse
B Sivanesan அடுத்து வரும் ஆட்சி இந்த ஆட்சியின் செயற்கரிய செயலின் பலனை அனுபவிக்கும்.
Rate this:
11 members
116 members
4 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
08-செப்-201318:06:51 IST Report Abuse
Pannadai Pandianஅடுத்தும் அதிமுக ஆட்சிதான்....
Rate this:
138 members
0 members
1 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
08-செப்-201307:41:11 IST Report Abuse
Baskaran Kasimani நாராயண சாமி போல ஒரு ஆளை நியமித்து அதே "இரண்டு வார" பல்லவியை பாடச்சொன்னால் நன்றாக இருக்கும்.
Rate this:
4 members
0 members
12 members
Share this comment
Cancel
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
08-செப்-201307:41:07 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.. வெற்றிப்பெற அரசு, மின்துறைக்கு வாழ்த்துக்கள்...
Rate this:
6 members
37 members
14 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.