CAG unearths Rs 17,000 crore scam in railways | ரயில்வேயில் ரூ.17 ,000 கோடி ஊழல் :சி.ஏ.ஜி., அறிக்கையால் அம்பலம்| Dinamalar

ரயில்வேயில் ரூ.17 ,000 கோடி ஊழல் :சி.ஏ.ஜி., அறிக்கையால் அம்பலம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ரயில்வேயில் ரூ.17 ,000 கோடி ஊழல் :சி.ஏ.ஜி., அறிக்கையால் அம்பலம்

புதுடில்லி:ரயில்வேயில், ஏற்றுமதிக்கான சரக்கு கட்டணம் வசூலித்ததில், பல்வேறு முறைகேடுகளை நடத்தி, 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி., ) வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மத்தியில் ஆளும், ஐ.மு., கூட்டணி அரசில், நாளுக்கு நாள் புது புது ஊழல் முறைகேடுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த தகவல்கள் வெளியாகி, பிரதமர் உட்பட மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.இவற்றுடன், ரயில்வேயில், அதிகாரம் மிக்க பதவியை பெற்றுத் தருவதாக கூறி, 90 லட்ச ரூபாய் , லஞ்சம் பெற்றவழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினர் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விசாரணை, தற்போது நடை பெற்று வருகிறது. இந்நிலையில், ரயில்வேயில் மற்றொரு ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரயில்வே சரக்கு போக்குவரத்தில், உள்நாட்டு பயன்பாட்டுக்கு போக, ஏற்றுமதியை ஊக்கும்விக்கும் முகமாக, உள்நாட்டு கட்டணத்தில் சரக்குகளை அனுப்பும் இரட்டை முறையை அறிமுகப்படுத்தியது. இதை பயன்படுத்தி, இரும்பு தாது ஏற்றுமதி செய்பவர்களிடம், குறைந்த கட்டணம் வசூலித்து, அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த, 2008 முதல், 2012 வரையிலான ரயில்வே துறை செயல்பாடுகள் குறித்து, சி.ஏ.ஜி., ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளார். அதில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.தென் மேற்கு, தென் கிழக்கு, கிழக்கு ரயில்வே மண்டலங்களில், இரட்டை போக்குவரத்து கொள்கை நடைமுறையை தவறாக பயன்படுத்தி, ரயில்வேக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். ரயில்வே அதிகாரிகள் முறைகேடு செய்து, 17 ஆயிரம் கோடிக்கு ஊழல் புரிந்துள்ளனர்.இதனால், ரயில்வே துறைக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த, முறைகேடு நடந்த கால கட்டத்தில், ரயில்வே துறைக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இது குறித்து,விரிவாக விசாரணை நடத்தப்பட்டால் தான் உண்மைகள் வெளியே வரும்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (33)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan - Chennai,இந்தியா
09-செப்-201321:36:08 IST Report Abuse
Nagarajan ஹலோ, எங்களை விட நீங்க 1 லட்சது 59 ஆயிரம் கோடி கம்மி. எங்கள யாராலும் ஜெயிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
B.jeyaraman - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201315:48:40 IST Report Abuse
B.jeyaraman தமிழக வாக்காளர்கள் காங்கிரஸ்சுக்கு ஒரு ஒட்டு போட்டாலும் அது தமிழ்நாட்டிற்கு தோல்விதான்.அந்த அளவுக்கு நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.
Rate this:
Share this comment
Cancel
karthik - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201315:23:57 IST Report Abuse
karthik ஊழலில் நம்மதான் முதல் இடம்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
09-செப்-201314:43:40 IST Report Abuse
Loganathan ஏதாவது ஒரு திட்டம் ஊழல் இல்லாமல் நடந்தது என்று CAG கூறினால் அது தான் முக்கிய செய்தி.
Rate this:
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
09-செப்-201319:27:11 IST Report Abuse
K.Sugavanamஉடனே சி ஏ ஜி ஐ பாய்ந்து குதறி விடுவார்கள் நம் அரசியல் வியாதிகள்.....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-செப்-201313:32:18 IST Report Abuse
Pasupathi Subbian அப்பாடா இன்னிய ஊழல் ரயில்வே , நாளை காலயில வேற ஊழல் வரும் அப்போ இது மறந்துபோகும் . நமக்கு மறதி ஜாஸ்தி . எதோ காலையில எந்திரிச்சோமா சாப்டோமா, வீட்டு செலவுக்கு பணம் ரெடி பண்ணுவோமா இத விட்டா வேற எதுக்கும் நமக்கு வக்கு பத்தாது . அங்கே ஊழல் இங்கே ஊழல் இத பத்திரிகைல படிச்சுட்டு வைற்று எரிச்சலோட புலம்பறதே நமக்கு வேலையா போச்சு.
Rate this:
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201312:28:31 IST Report Abuse
GANAPATHI V உழல.....உழல..... எங்கே தான் உழல் இல்லை ? இனிமேல் அந்த நியூ ச போடுங்கப்ப முதல்ல . கண்டு பிடித்து என்ன பயன் ? ஒரு ரூபா குட இது வரைக்கும் வெளி வர வில்லை.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-செப்-201311:57:02 IST Report Abuse
Lion Drsekar இந்திய மக்களுக்கு ஒரு தொலைக்காட்சி சீரியல் அவ்வளவுதான் . சில நிகழ்வுகள் மெகா சீரியல்களாக இருக்கும், முடிவு ஒன்றுமே இருக்கப் போவது கிடையாது, அதற்குள் தேர்தல் வந்து விடும் ஆட்சி , அது இது என்று போகும், மீண்டும் தேர்தல் , மக்கள் மறப்பது இதுதான் உண்மை, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-செப்-201309:05:37 IST Report Abuse
Srinivasan Kannaiya :சி.ஏ.ஜி., இதுக்கு முன்னால் என்ன செய்து கொண்டு இருந்தீங்க ???,, கடந்த மூன்று ஆண்டுகளாக ஊழல் என்கிறீர்கள்.. அதுக்கு முன்புஊழலே இல்லையா...
Rate this:
Share this comment
Cancel
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
09-செப்-201307:10:05 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு என்னடா.....ரெண்டு மூணு வாரமா மழையே பெய்யலைன்னு பாத்தேன்....இதோ பெஞ்சிடுச்சு
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
09-செப்-201307:08:35 IST Report Abuse
villupuram jeevithan இந்த CAG யின் வாயை மூட காங்கிரஸ் ஏதும் செய்யவில்லையா? அல்லது முடியவில்லையா?
Rate this:
Share this comment
Thangamagan - ????????,இந்தியா
09-செப்-201313:51:24 IST Report Abuse
Thangamaganபா. ஜ. க. கட்சிகாரரா இருப்பாரோ இந்த CAG...
Rate this:
Share this comment
Chenduraan - kayalpattanam,இந்தியா
09-செப்-201321:50:31 IST Report Abuse
Chenduraanசீக்கிரம் திக்கு சிங் அப்படித்தான் சொல்லப்போகிறார். முதிய CAG அப்படின்னா இப்போது உள்ளவரும் அவரை மாதிரியே குறை சொல்லுகிறார்.. ஒருவேளை CAG ஆக ஆனபிகறு பிஜேபி யில் சேர்ந்த்துவிடுவார்கள் போல.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.