Youth supports for modi | லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு அமோக வெற்றி நரேந்திர மோடிக்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம் | Dinamalar
Advertisement
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு அமோக வெற்றி நரேந்திர மோடிக்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"லோக்சபா தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றும்; வட மாநிலங்களில், நரேந்திர மோடிக்கு அமோக ஆதரவு உள்ளது' என, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகள், அதிகாரப்பூர்வமாக, தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்படாத நிலையில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கு, வட மாநிலங்களில், அமோக ஆதரவு உள்ளது. அதே நேரத்தில், தென் மாநிலங்களில், மோடி மற்றும் ராகுல் ஆகியோருக்கு சம அளவில் ஆதரவு உள்ளது என, ஏசி நீல்சன் - ஏ.பி.பி., நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

வட மாநிலங்களைப் பொறுத்தவரை, 42 சதவீதம் பேர், இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என, 60 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங் மீது, இளைஞர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.வாக்காளர்களில், 40 சதவீதம் பேர், மோசமான பொருளாதார சூழ்நிலைக்கு, மன்மோகன் சிங்கே காரணம் என, தெரிவித்துள்ளனர். ஆனால், தென் மாநிலங்களில், 45 சதவீதம் பேர், நிதி அமைச்சர் சிதம்பரம் தான், மோசமான பொருளாதார நிலைக்கு காரணம் என, கூறியுள்ளனர். இவ்வாறு, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (85)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
j vasaka chinnappan - Erode,இந்தியா
14-செப்-201306:22:32 IST Report Abuse
j vasaka chinnappan மோடிக்கு ஒரு பெரிய விசில் அடிங்க.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
09-செப்-201320:55:19 IST Report Abuse
m.viswanathan யாரேனும் இந்திய மக்களை கரை சேர்க்க ஒரு நல்ல தலைமை யாக வரமாட்டார என ஏங்குகிறோம் . திரு மோடி அவர்கள் அந்த நல்ல காரியத்தை செய்தால் நல்லது .
Rate this:
1 members
0 members
19 members
Share this comment
Cancel
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
09-செப்-201316:55:54 IST Report Abuse
S.MAHESH KUMAR அவர் இன்றும் இளைஞர் தானே. அவரின் பின்னால் செல்வதில் பெருமை கொள்வோம்.
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
09-செப்-201315:09:20 IST Report Abuse
TamilArasan மக்கள் நாங்கள் உங்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் மோடி அவர்களே...தேசத்தை நல் வழி நடத்தி செல்லுங்கள்....
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201312:30:01 IST Report Abuse
GANAPATHI V யார் வந்தால் என்ன ? நல்ல ஆச்சி செய்தல் எல்லாருக்கும் நல்லது .
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
Murali P - Tamilnadu, India,இந்தியா
09-செப்-201312:19:53 IST Report Abuse
Murali P நிச்சியமாக மோடிதான் பிரதமர், அவரை விட்டால், காங்கிரஸ் வந்துவிடும். போதும் இந்த காங்கிரஸ் ஆட்சி, மாற்றம் தேவை, விலை ஜெட் வேகத்தில், சம்பளமோ ஆமை வேகத்தில், சிலிண்டருக்கு மாதம் ரூ.10/ அதிகமாம்........கேட்டால் டாலர் ரேட் வீழ்ச்சி.... ...... போதும் சாமி..........முடியவில்லை
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Cancel
gmohan - chennai,இந்தியா
09-செப்-201312:01:00 IST Report Abuse
gmohan யார் பி எம் ஆஅனாலும், என்னுடைய வோட்டு பிஜேபி க்குத்தான். காங்கிரஸ்- ஐ துண்டைக்காணோம் துணியைக்காணோம்-நு ஓட ஓட அரசியலை விட்டே விரட்டணும். தென் மாநிலங்களில் ராகுலுக்கு சம அளவில் வைப்பா? காமெடி. கருத்துக்கணிப்பு தமிழில் செய்தார்களா அல்லது இந்தியில் செய்தார்களா?
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
10-செப்-201300:23:51 IST Report Abuse
rajen.tnlஎன் ஒட்டும் பிஜேபி தான் ...இனி என் வாழ்கையில் காங்கிரெஸ் கச்சிக்கு ஒட்டு போட மாட்டேன் .............
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Cancel
Periya-Rasu - Baton Rouge,யூ.எஸ்.ஏ
09-செப்-201311:29:46 IST Report Abuse
Periya-Rasu தென்மாநில மக்களின் திராவிட மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் கேடுகெட்ட புத்தி எப்ப மாறுகிறதோ அன்று தான் தமிழகம் உருப்படும்.. மோடி ஒருவரே இந்தியாவை காப்பாற்றும் ஒரே சக்தி
Rate this:
17 members
0 members
89 members
Share this comment
Cancel
Thanjaithamilar - QATAR,இந்தியா
09-செப்-201310:46:01 IST Report Abuse
Thanjaithamilar மோடி பிரதம வேட்பாளாராக அறிவிக்க பட்டவுடன் திரு மோடி அவர்களின் மதிப்பு மேலும் கூடும்..
Rate this:
11 members
2 members
63 members
Share this comment
SURESH SUBBU - Delhi,இந்தியா
09-செப்-201317:00:07 IST Report Abuse
SURESH SUBBUசத்தமா சொல்லாதீங்க.. அப்புறம் அதுக்கும் மதிப்பு கூட்டு வரி போட்டுற போறாரு சிதம்பரம்.....
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
pgr - cbe,இந்தியா
09-செப்-201310:28:44 IST Report Abuse
pgr எனக்கு தெரிந்த சுமார் நூறு பேரிடம் விசாரித்ததில் காங்கிரஸ்க்கு எதிரான கருத்துகளே கூறினார்கள். அதேசமயம் மோடிக்கு அதரவாகவும் கூறினார்கள். இதில் நாட்டு நடப்பு தெரியாதவர்கள் மட்டும் விதிவிலக்கு.
Rate this:
7 members
2 members
71 members
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
09-செப்-201319:01:11 IST Report Abuse
Pannadai Pandianஎனக்கு தெரிந்த நூறு பேரிடம் விசாரித்ததில் காங்கிரசுக்கு எதிராக 150 பேர் கருத்து கூறினார்கள். என்னடா நூறு பேரிடம் விசாரித்ததில் எங்கேந்து 150 பேரு வந்தாங்க என்கிறீர்களா ??? கருத்து கூறிவிட்டு சென்றவர்களில் பாதி பேரு கோவத்தோட திரும்பி வந்து காத்து கிழியிராப்ல காங்கிரச திட்டினாங்க....
Rate this:
2 members
0 members
9 members
Share this comment
சிவஸ்ரீ. விபூதிபூஷண் - கோவை,இந்தியா
10-செப்-201312:59:54 IST Report Abuse
சிவஸ்ரீ. விபூதிபூஷண்திரு பாண்டியன் சிரிக்கவைத்து சிந்திக்க வைத்திருக்கிறார். யாரைக்கேட்டாலும் கடுமையாக திட்டுகிறார்கள் காங்கிரஸையும். அன்னிய சோனியாவையும். கருத்துக்கணிப்பு மெய்யாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும்....
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்