Karunanidhi says, expenses may reduce | ஆண்டுக்கு ரூ.797 கோடிசெலவு குறையும்: கருணாநிதி அறிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆண்டுக்கு ரூ.797 கோடிசெலவு குறையும்: கருணாநிதி அறிக்கை

Updated : செப் 10, 2013 | Added : செப் 08, 2013 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆண்டுக்கு ரூ.797 கோடிசெலவு  குறையும்: கருணாநிதி அறிக்கை

சென்னை:"உணவுப் பாதுகாப்புச் சட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு ஆகும் செலவு, ஆண்டுக்கு, 797 கோடி ரூபாய் குறையும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தேசிய உணவு பாதுகாப்பு மசோதா பார்லிமென்டிலும், ராஜ்யசபாவிலும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மக்களுக்காக, வாங்க வேண்டிய அரிசிக்காக, ஆண்டு ஒன்றுக்கு, தமிழக அரசுக்கு ஆகும் செலவு, 578 கோடி ரூபாய்.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக, வாங்க வேண்டிய அரிசிக்காக, ஆண்டு ஒன்றுக்கு, தமிழக அரசுக்கு ஆகும் செலவு, 856 கோடி ரூபாய்; இரண்டும் சேர்ந்து, ஒட்டு மொத்தமாக, ஆண்டு ஒன்றுக்கு, புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசிக்காக, தமிழக அரசு செலுத்திட வேண்டிய மொத்த விலை, 1,434 கோடி ரூபாய். ஆனால், தற்போது, மத்திய அரசின் ஒதுக்கீட்டில் பெறப்படும் அரிசிக்காக, தமிழக அரசு கொடுக்கின்ற விலை, 2,231 கோடி ரூபாய். எனவே, உணவுப் பாதுகாப்புச் சட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு ஆகும் செலவு ஆண்டு ஒன்றுக்கு, 797 கோடி ரூபாய் குறையும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
09-செப்-201322:05:52 IST Report Abuse
Arvind Bharadwaj என்ன இருந்தாலும் என் தலைவன் டாக்டர் கலைஞர் இயற்றிய மணிமேகலை திருப்பதிகத்தை விஞ்ச இந்தப் பூவுலகில்தான் எவரும் உண்டோ? அந்த நாரணனை நினைத்து திருப்பாவை இயற்றிய ஆண்டாளே தோற்றிட்டாள் என் தலைவனிடம்.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
09-செப்-201320:41:15 IST Report Abuse
raghavan இவ்வளவு வக்கணையாக பேசும் இவர் ஆட்சியை விட்டு செல்லும்போது கஜானாவை காலியா வைத்து விட்டுபோனதின் மர்மம் என்ன ?
Rate this:
Share this comment
Cancel
Ilavarasan - Isfahan,ஈரான்
09-செப்-201318:25:23 IST Report Abuse
Ilavarasan இந்த திட்டம் தி.மு.க. ஆட்சியில் வந்திருந்தால், இந்த Surplus Budget கருணாநிதி பைக்கு போயிருக்குமோ, கணக்கு கட்சிதம்மா இருக்கே?
Rate this:
Share this comment
Cancel
Sulo Sundar - Mysore,இந்தியா
09-செப்-201314:47:34 IST Report Abuse
Sulo Sundar வந்துட்டாரா புள்ளிவிவரம் சொல்ல....700 கோடி மிச்சம் என்பது உண்மையானால் அம்மா அதை என் எதிர்க்கப்போகிரார்கள் என்ற சாதாரண பகுத்தறிவு கூட இல்லியே இந்த பகுத்தறிவு பகலவனுக்கு...எப்போதுமே தமிழர்களை கேனையன் என்று நினைப்பதே எல்லோ டவலுக்கு வேலையா போச்சு
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
09-செப்-201313:45:22 IST Report Abuse
Pasupathi Subbian குப்பற உழுந்தேன் ஆனா மீசையில மண் ஒட்டல. எப்படி நம்ம தெறம. சரியான இம்சை அரசன் 24ம் புலிகேசி . இவரின் துதிபாடும் கூட்டம் இப்போ பாடறதே இல்லே ஏன் ?
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201312:16:53 IST Report Abuse
Yaro Oruvan அடடா.. வர வர இந்த மஸ்கிடோ தொல்ல தாங்க முடியல..
Rate this:
Share this comment
Cancel
Kamal - Kumbakonam,இந்தியா
09-செப்-201311:43:29 IST Report Abuse
Kamal இவர் யாரை ஏமாற்ற பார்க்கிறார். மசோதாவில் முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும்தான் இவர் கூறிய சலுகைகளை மத்திய அரசு வழங்கும். அதன் பிறகு கொள்முதல் செய்யப்படும் கட்டணத்திற்கு மத்திய அரசு வழங்கும் என்பது இவருக்கு தெரியாதா?
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
09-செப்-201310:20:18 IST Report Abuse
JAY JAY கருணா சொன்னா சரிண்ணா...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-செப்-201309:33:28 IST Report Abuse
g.s,rajan அது சரி மக்களுக்கு கொடுக்க உணவு பாதுகாப்பாக புழு பூச்சி,வண்டுகள் அண்டாமல் சுத்தமாக சாப்பிடும் நிலையில் இருக்கிறதா ?அதுதானே மிக முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
09-செப்-201308:47:12 IST Report Abuse
Arvind Bharadwaj ஆகமொத்தம் என் தலைவன், தமிழினத் தலைவன், கழகத் தலைவன் டாக்டர் கலைஞருக்கு ஆட்சிப் பித்துப் பிடித்து வாட்டுவது மட்டும் நன்கே புலப்படுகிறது. ஆட்சியில் தான் இல்லாவிட்டாலும் கூட, இருப்பதாகத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு திட்டங்களை அறிவிப்பது எந்த வகையான வியாதியோ? திமுக ஆதரித்துவிட்டது என்பதற்காகவே இந்தத் திட்டத்தில் இல்லாத பயங்களை இருப்பது போல் காட்டுகிறான் என் தலைவன். எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்தரும் பல்வேறு புள்ளி விவரங்களை கழக நூலகத்தில் சேமித்தும் வைக்கத் தொடங்கிவிட்டான் தமிழினத் தலைவன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை