Advertisement
பொருளாதார வளர்ச்சி குறைந்ததால்...இந்தியாவின் வெளிநாட்டு கடன் 39 ஆயிரம் கோடி டாலராக உயர்வு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 செப்
2013
01:27
பதிவு செய்த நாள்
செப் 08,2013 23:58

புதுடில்லி: சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன், 12.9 சதவீதம் அதிகரித்து, 39 ஆயிரம் கோடி டாலராக (23.40 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.

நடப்பு கணக்கு பற்றாக்குறை:



மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு; இதன் காரணமாக, வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்திருப்பது, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்து உள்ளது.குறிப்பாக, சென்ற நிதியாண்டின் இறுதியில், மேற்கூறிய எதிர்மறை அம்சங்கள் காரணமாக, அயல்நாட்டுக் கடன் உயர்ந்து உள்ளது என, பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
:சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் வெளிநாட்டு கடன், 39 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 34,550 கோடி டாலராக (20.73 லட்சம் கோடி ரூபாய்) குறைந்து இருந்தது.குறுகிய கால கடன், வர்த்தக கடன் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கி டெபாசிட் ஆகியவை உயர்ந்துள்ளன. இவை, இந்தியாவின் வெளிநாட்டு கடன் உயர்விற்கு வழி வகுத்துள்ளன.மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியாண்டில், இந்தியாவின் நீண்ட கால வெளிநாட்டு கடன், 9.8 சதவீதம் அதிகரித்து, 29,340 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், குறுகிய கால கடன், 23.7 சதவீதம் உயர்ந்து,9,670 கோடி டாலராக அதிகரித்துள்ளது.ஒட்டுமொத்த வெளிநாட்டு கடனில், நீண்ட கால கடன், 75.2 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்:



மேலும், வர்த்தக கடன் 31 சதவீதமும் குறுகிய கால கடன், 24.8 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன. வெளிநாடு வாழ் இந்தியரின் டெபாசிட், 18.2 சதவீதமும், பல்வேறு கடன்களின் பங்களிப்பு, 13.2 சதவீதம் என்ற அளவிலும் உள்ளன.அதே சமயம், சென்ற நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடனில், மத்திய அரசின் அன்னிய கடன், 20.9 சதவீதம் (8,170 கோடி டாலர்) என்ற அளவில் குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 23.7 சதவீதமாக (8,190 கோடி டாலர்) இருந்தது.எனினும், இதே காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வெளிநாட்டு கடன், 19.7 சதவீதத்தில் இருந்து, 21.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு, ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதும் காரணம். இருந்தபோதிலும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், இந்தியாவின் வெளிநாட்டு கடனுக்கும் இடையிலான விகிதாச்சார உயர்வு, கட்டுப்படுத்தக் கூடிய அளவிற்கே உள்ளது.

ஒப்பீடு:



வளர்ந்து வரும் பிற நாடுகளின் அயல்நாட்டு கடனுடன் ஒப்பிடும்போது, பாதிக்கும் வாய்ப்பு குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக, இந்தியா தொடர்ந்து விளங்குகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (41)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
10-செப்-201311:04:15 IST Report Abuse
R Bala Sundaram இப்போது இருக்கும் ,முன்பு இருந்த மக்கள் பிரதிநிதிகளிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்து இந்த 39 ஆயிரம் கோடியை வெளி நாடுகளில் வாங்கிய கடனை அடைக்க சொல்லுங்கள் ,இதற்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் .மக்கள் பிரதிநிதியை நம்பியாவரை போதும் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
mani k - trichy,இந்தியா
09-செப்-201321:20:14 IST Report Abuse
mani k மத்திய அரசு பொருளாதார நெருக்கடிக்கும் இந்திய ருபாய் மதிப்பு வீழ்ச்சிக்கும் பொருள்களின் விலை உயர்விர்க்கும் இதனால் மக்கள் படும் இன்னல்களுக்கு கூறும் காரணம் புல்லை காட்டி குதிரையை ஓட வைக்கும் ஏமாற்று வேலை..எவ்வளு நாட்கள் தான் குதிரை புல்லை பார்த்துக்கொண்டே ஓடும். ஒரு நாள் படுத்துக்கொள்ளும் .அந்த நாள் நம் நாட்டிற்கு வராமல் பார்த்துகொள்வது நம் மத்திய அரசின் கையில் தான் உள்ளது.நன்றி.கி.மணி.திருச்சி.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
nara_sg@yahoo.com - brussels,பெல்ஜியம்
09-செப்-201321:20:11 IST Report Abuse
nara_sg@yahoo.com I am very happy to see this news because eventhough i am born indian but left india alone for its stupid ruling government so which is too bad since i left so what decision i took is 100% correct, so atleast my son and wife can live peacefully in overseas, only rowdy,politician, lawyers, and sex judges can live and keep india in bad situation even nehru, gandhi or even british come to power will not save india. Jai mathaji, you are sold out. to them. please save your self. i welcome all indian women and girls and prostitutes of india, and kallakathal women please show your power to lawyer, judges, rowdy, politician to save your country if not you will be in problem. oneday please take kali, thurgai, parasakthi, omsakthi avathar one more time. please. jai sakthi, jai kali, jai parasakthi. save my india.
Rate this:
3 members
0 members
2 members
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
09-செப்-201319:13:07 IST Report Abuse
மும்பை தமிழன் இந்தியாவை வித்துவிடுவோமா
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-செப்-201316:07:42 IST Report Abuse
g.s,rajan நம்ம பொருளாதார மேதைகளுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை கண்டிப்பா குடுத்து அவங்களை இந்திய சார்புல உலக அளவுல கௌரவிக்கணும் .
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
Ashok Raja - London,யுனைடெட் கிங்டம்
09-செப்-201315:06:50 IST Report Abuse
Ashok Raja இந்தியா திவால் ஆவதாக நினைப்பது கசப்பான மருந்துனாலும் தேவையான ஒன்றாக கருத வேண்டும். நேர்மையின்மையும் ஊழலும் நாட்டின் நாடியில் கலந்துவிட்டது மற்றும் கருப்பு பணத்தினால் தான் இன்றைய மறைமுக கருப்பு பொருளாதாரம் இயங்குகிறது. இதை சரி செய்ய ரூபாயின் மதிப்பை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டு, ஊழலை ஊக்குவிக்கும் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றி, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்தி, கல்வி மற்றும் கட்டமைப்பு வசதிகளை வெளிநாடுகளிடம் இருந்து கடன் வாங்கி(அப்போ தான் திரும்ப செலுத்தும் பொறுப்புணர்ச்சி வரும்) மேம்படுத்தி, கலாசாரம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கட்டுபடுத்தினால் தான் நாட்டின் எதிர்காலம் உருப்படும். இதை செய்யாமல் நம்மிடம் உள்ள பல குறைகளின் பழியை நம் அரசியல்வாதிகள் நம்மை பழக்கபடுத்தியது போல் அன்னிய/வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதும், ஜாதி பிரிவினை மீதும் போட்டுவிட்டு காலத்தை கடத்தினால் நாட்டின் ஒருமைப்பாடு சீர்குலைந்து உடைந்துபோக நேரிடும்.
Rate this:
3 members
0 members
7 members
Share this comment
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
09-செப்-201314:13:27 IST Report Abuse
sathish சார்,, சிதம்பரம்,,, ஒரே ஐடியா சொல்லட்டுமா,,,, பேசாமே இந்தியாவிலும் ரூபாயை எடுத்துட்டு,, டாலர் ,, என்று மாத்தி விடுங்கோ,,,
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
09-செப்-201312:41:24 IST Report Abuse
rajan கூடவே எங்க பான் கார்டு, ஆதார் கார்டு எல்லாத்தையும் காட்டி உலகத்துல உள்ள மொத்த கடனையும் வாங்கி குவித்ததுட வேண்டியது தானே.
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201312:39:57 IST Report Abuse
GANAPATHI V தவிர்க்க .லஞ்சம் ,கொள்ளை ,திருட்டு ,இலவசம் ,எல்லாம் சரி ஆகிடும் .நடக்குமா ? அது எப்போது ?
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
09-செப்-201311:25:57 IST Report Abuse
kumaresan.m " கடன் வாங்காமல் நிர்வாகம் செய்ய முடியாதா ??? அனைத்திலும் இலவசங்கள் என்றால் எப்படி ??? கல்வி / மருத்துவம் / விவசாயம் தவிர்த்து அனைத்திலும் இலவசங்கள் என்பதை தவிர்க்க வேண்டும்
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
puratchidhaasan - viruthachalam,இந்தியா
09-செப்-201315:52:16 IST Report Abuse
puratchidhaasanமக்களிடம் ஒருபோதும் விழிப்புணர்ச்சி வரப்போவது இல்லை.இலவசங்களில் ஈடுபாடு உள்ளவரை,யாரும் எதுவும் மாற்றத்தை கொண்டுவரமுடியாது.மக்களிடம் கணக்கு சொல்வதில்தான் அரசியல்வாதிகள் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்....
Rate this:
0 members
1 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.