சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (9)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சென்னையில், கடத்தல் தங்கம் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில், ஓர் ஆண்டிற்கு தங்கத்திற்கான தேவை, 850 டன் என்ற அளவில் உள்ளது. உள்நாட்டில், தங்கம் உற்பத்தி குறைவாக உள்ளதால், துபாய், லண்டன், சுவிட்சர்லாந்தில் இருந்து, இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதிக்கான உரிமம் வைத்துள்ள ஆபரண வர்த்தகர்கள், வங்கிகள் மூலம் தங்கத்தை வாங்கி, ஆபரணங்களாக மாற்றி, நகை கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.சர்வதேச அளவில், லண்டனில் உள்ள ஆபரண சந்தையில், தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை பின்பற்றி, அனைத்து நாடுகளிலும், நாள்தோறும், தங்கம் விற்கப்படுகின்றன. இந்தியாவில், சர்வதேச விலையோடு, இறக்குமதி வரி, மதிப்பு கூட்டு வரி, வங்கி கமிஷன் ஆகியவற்றுடன், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மும்பை, கோல்கட்டா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களை காட்டிலும், சென்னையில், ஆபரண தங்கம் விலை குறைவாக உள்ளது. இதற்கு

கடத்தல் தங்கம் வருகை காரணம் என, கூறப்படுகிறது.தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் இருந்து, சென்னைக்கு அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான், சென்னையில், மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, தங்கம் விலை, கிராமுக்கு, 30 - 50 ரூபாய் வரை விலைகுறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

"குறைந்த லாபம்':இதுகுறித்து, ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:மும்பை உள்ளிட்ட நகரங்களில், அசல் தங்கம் விலையுடன், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றிலும் லாபம் வைத்து விற்கப்படுகிறது. இதனால் தான், அங்கு, தங்கம் விலை அதிகமாக உள்ளது. சென்னையில், செய்கூலி, சேதாரத்தில் மட்டுமே லாபம் வைத்து விற்கப்படுகிறது. தற்போது, மறு சுழற்சிக்காக தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். கடத்தல் தங்கம் என்பதெல்லாம், பொய்யான தகவலாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னையில் ஒருநாள்விற்பனை எவ்வளவு:தங்கம்

Advertisement

பயன்பாட்டில், மும்பைக்கு அடுத்து, தமிழகம் உள்ளது. இங்கு, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகை நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் விற்பனையாகும், மொத்த தங்கத்தில், 70 சதவீதம்,சென்னையில் விற்பனையாகிறது.

சென்னையில், நாள்தோறும் சராசரியாக, 120 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ (ஒரு கிலோ, 27 - 28 லட்சம் ரூபாய்), தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.
-நமது நிருபர்-
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ak Gopal - chennai,இந்தியா
09-செப்-201321:31:21 IST Report Abuse
Ak Gopal எதிர்கால சேமிப்பு என நம்பி தங்க நகைகள் வாங்கும் அன்பர்களே சற்று சிந்தியுங்கள் .. பெரிய கடைகளில் கூட நகைகள் வாங்கும் போதே செய்கூலி , சேதாரம் மற்றும் 916 kdm ஹால் மார்க் போன்ற உத்திரவாததிர்க்கு கூடுதல் செலவு .. பிறகு அவசர தேவைக்கு வேறு கடைகளில் விற்கும் போது தான் தெரிகிறது நகைகள் 22 karat கிடையாது . karat கம்மி எனவே மதிப்பும் கம்மி .. என்று சொல்கின்றனர் ..
Rate this:
Share this comment
Cancel
manokaran - kanchipuram,இந்தியா
09-செப்-201313:10:26 IST Report Abuse
manokaran முதலில் கோவில்களில் உள்ள தங்க நகைகள் எவ்வளவு உள்ளன என்பதை மக்களுக்கு காட்டவேண்டும் ஏனென்றால் இது மக்கள் பணத்தில் வாங்கப்பட்டது மேலும் பலர் நன்கொடையாக கொடுக்கப்பட்டது இன்று நம் மக்களுக்கு அவர்களின் பூர்விகம் மற்றும் வரலாறு தெரியாத காரணத்தால் பல முறைகேடுகள் நடக்கின்றன எனவே தினமலர் போன்ற இதழ்கள் உண்மையை மக்களுக்கு தெரிவித்தால் உண்மை விளங்கும் நமது கலாச்சாரத்தின் பெருமையை விளங்கும், தினமலர் நிருபர்கள் காஞ்சிபுரம் போன்ற பெரிய கோவில்களுக்கு உள்ள சொத்துக்கள் என்ன அவை இன்றைய நிலையில் எப்படி இருக்கிறது என்பதைவெளியிடவேண்டும்,அதிக அளவில் நன்கொடைகொடுத்தவர்கள் யார் என்பதையும் கோவில் நிலங்களின் இடங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தலாமே இதனால் நமது கோவில்களின் வருமானம் என்ன அங்கு எப்படி பூஜைகள் நடக்கிறது இதில் யார்யார் தலையீடு உள்ளது என்று தெரியவரும் கடவுள் வெளியே வரமாட்டார் என்ற நினைப்பில் நடக்கும் ஊழல்களுக்கு முட்ட்ருபுள்ளி வைக்க தினமலர் முன் வரவேண்டும் கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
09-செப்-201312:57:19 IST Report Abuse
Natarajan Ramanathan சென்னையில் பெரும்பாலான நகை கடைகளே திருட்டு நகையை நம்பித்தான் நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
09-செப்-201310:29:17 IST Report Abuse
villupuram jeevithan ஒழுங்காக இறக்குமதி செய்திருந்தால் மத்திய அரசுசுக்கு வரி மூலம் வருமானம் கிடைத்திருக்குமே?
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-செப்-201309:18:21 IST Report Abuse
g.s,rajan தெருத் தெருவாய் தங்கம் விற்பனை செய்யுங்கள் இந்தியா வளமான நாடு பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடு என்று அறிவித்து விடலாம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
09-செப்-201307:40:09 IST Report Abuse
பி.டி.முருகன்    விலை குறைவுக்கு கடத்தல் தங்கம் காரணமாக இருக்காது.செம்பு அதிகம் சேர்த்து செய்த தரமில்லாத ஆபரணமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, சென்னையில் விற்கப்படும் தங்கம் குவாலிடி உள்ளதா என்று சோதிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
09-செப்-201307:27:24 IST Report Abuse
villupuram jeevithan கடத்தலா, அம்மாதிரியாக எதுவும் நடக்காது. நாம் நம்பித்தான் ஆக வேண்டும், இவர்கள் சொல்லுவதை?
Rate this:
Share this comment
Cancel
srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ
09-செப்-201304:48:49 IST Report Abuse
srideesha நாமும் இந்தியாவை ஏழை நாடு என்கிறோம். இங்கு யார் தினமும் 120 கோடி ரூபாய்க்கு தங்கம் வாங்குகிறார்கள்? ஹும்ம் கடவுளுக்கே வெளிச்சம்
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
09-செப்-201304:44:14 IST Report Abuse
Baskaran Kasimani விட்டால் தங்கம் என்றால் என்ன, கடத்தல் என்றால் என்ன என்று கூட கேட்பார்கள் இந்த தங்க வர்த்தகர்கள். பணம் பண்ணுவதில் சூரர்களான இவர்கள் நேர்மையாக நடந்து கொள்வது நடவாத காரியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.