போலீஸ்- வக்கீல் மோதலுக்கு காரணம் என்ன? : சட்ட கருத்தரங்கில் பேராசிரியர் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ்- வக்கீல் மோதலுக்கு காரணம் என்ன? : சட்ட கருத்தரங்கில் பேராசிரியர் விளக்கம்

Added : செப் 09, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை:"சமீப காலமாக போலீஸ் -வக்கீல்கள் இடையே நடக்கும் மோதலுக்கு, "அதிகாரம் தன் கையில்' என்ற "ஈகோ' தான் காரணமாக உள்ளது' என,தேர்தல் கருத்துக்கணிப்பாளர் பேராசிரியர் ராஜநாயகம் தெரிவித்தார்.கோவை வக்கீல்கள் சங்கத்தின் சார்பில், "மாதமொரு சான்றோர்' பங்கேற்கும் சொற்பொழிவு நடக்கிறது. பல்வேறு துறைகளில் அனுபவமிக்கவர்கள் பங்கேற்று பேசுகின்றனர். கோர்ட் வளாகத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு, கோவை வக்கீல் சங்க தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். செயலாளர் லோகநாதன்,பொருளாளர் விஜயராகன் முன்னிலை வகித்தனர்.தேர்தல் கருத்துக்கணிப்பாளரும், சென்னை லயோலா கல்லூரி பேராசிரியருமான ராஜநாயகம் பேசியதாவது:தமிழகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் யாரிடம் கூடுதல் அதிகாரம் இருக்கிறது என்பதில் ஏற்படும் "ஈகோ' தான். சில நேரங்களில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பும் இம்மோதலுக்கு காரணமாகின்றன.
வக்கீல் தொழிலில் யாருக்கும் யாரும் போட்டியில்லை. வழக்கு விசாரணையின்போது மட்டுமே எதிரெதிர் வாதங்களை மேற்கொள்கின்றனர். விசாரணை முடிந்ததும், ஒன்று சேர்ந்து விடுகின்றனர். இன்றைய அரசியலில் எந்த கட்சிக்கு வக்கீல்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என வக்கீல்களிடம் சர்வே மேற்கொண்டோம். இதில், 60 பேர் அ.தி.மு.க..வுக்கும், 10
பேர் தி.மு.க.,வுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.வக்கீல்கள் சட்டம் படித்து, அதில் உள்ள பல நுணுக்கங்களை அறிந்ததால், யாரிடத்திலும் துணிச்சல், தைரியமாக பேசுகின்றனர்; சவால் விடுகின்றனர். வக்கீல்கள் இல்லாமல் இருந்தால், அதிக அதிகாரம் படைத்தவர்களாக போலீசார் உயர்ந்திருப்பர். பொதுவாக ஆளும் அரசுகள் கோர்ட் தீர்ப்புகளுக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பதில்லை. மேல்முறையீடு செய்தே காலம் கடத்தப்படுகிறது. நீதித்துறையில் ஆழமான, விரிவான, துணிச்சலான சீராய்வு தேவை. இதேபோல்,அரசியல்வாதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளூர் அதிகார மையங்கள் என வேண்டப்பட்டவர்களுக்கு போலீசார் பணிந்து செல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது.இவ்வாறு, பேராசிரியர் ராஜநாயகம் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X