Central government warn 7 states about possible of riots | 7 மாநிலங்களில் கலவரம் வெடிக்கும் என எச்சரிக்கை : உ.பி., கலவரத்தை அடுத்து மத்திய அரசு உஷார்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (59)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

லக்னோ: உ.பி.,யில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, ஏழு மாநிலங்களில், கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதனால், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அந்த மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.

உ.பி.,யின், முசாபர் நகர் மாவட்டத்தில், கடந்த மாத இறுதியில், இளம் பெண் ஒருவரை, கேலி செய்ததாக கூறி, மூன்று பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இதனால், ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை தாக்கினர். இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், பெரும் கலவரமாக மாறியது. மற்ற மாவட்டங்களுக்கும், கலவரம் பரவியது. தீ வைப்பு, கத்தி குத்து, துப்பாக்கிச் சூடு என, முசாபர் நகர் மாவட்டம் முழுவதும், போர்க்களமாக மாறியது.இந்த கலவரத்துக்கு, நேற்று வரை, 31 பேர் பலியாகி விட்டனர். ராணுவம், மத்திய பாதுகாப்பு படையினர், போலீசார் உள்ளிட்டோர், கலவர பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில், ராணுவத்தினர், கொடி அணிவகுப்பு நடத்தினர். ஆனாலும், கலவரம் கட்டுக்குள் வரவில்லை.நேற்றும், பல இடங்களில் கலவரம் நீடித்தது. கலவரத்துக்கு பயந்து, கிராம மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். கலவரம் நடந்த பகுதிகளில் பணியாற்றிய, உயர் போலீஸ் அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கலவரத்தை தூண்டும் வகையிலான வீடியோ காட்சிகளை, இணையதளத்தில் வெளியிட்டதாக கூறி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், குகும் சிங், சுரேஷ் ராணா, பர்தேந்து, சங்கீத் சோம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காங்., முன்னாள் எம்.பி., ஹரேந்திர மாலிக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து, கலவரத்தில் ஈடுபட்டதாக, 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவர பகுதிகளில், போலீசார், வீடு வீடாகச் சென்று, சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கத்திகள், துப்பாக்கிகள் உட்பட, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, கலவரம் தொடர்பாக, விரிவான அறிக்கையை தயாரித்துள்ள, உ.பி., கவர்னர், பி.எல்.ஜோஷி, அதை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். கலவர பகுதிகளை ஆய்வு செய்ய, ரவிசங்கர் பிரசாத் தலைமையில், பா.ஜ.,வின் உண்மை கண்டறியும் குழு, நேற்று, முசாபர்

நகருக்கு புறப்பட்டது. உ.பி., அரசு, அவர்களை இடையிலேயே தடுத்து நிறுத்தியது.இதேபோல், காங்கிரஸ் சார்பில் சென்ற குழுவும், தடுத்து நிறுத்தப்பட்டது. ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவரும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சருமான, அஜீத் சிங்கையும், போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அவர்களை தடுத்து நிறுத்தியதாக, போலீசார்அறிவித்துள்ளனர். பதற்றம் நீடிப்பதால், கூடுதல் படையினர், அங்கு விரைந்துள்ளனர்.நேற்று மாலை, முதல்வர் அகிலேஷ் யாதவை, தொடர்பு கொண்டு பேசிய, பிரதமர் மன்மோகன் சிங், கலவர நிலைமை குறித்த தகவல்களை கேட்டறிந்தார். இந்நிலையில், கலவரத்தை கட்டுப்படுத்த தவறி விட்டதாக கூறி, "சமாஜ்வாதி அரசை, டிஸ்மிஸ் செய்து விட்டு, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என, பகுஜன் சமாஜ், பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

எச்சரிக்கை:மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில், டில்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், "கலவர நிலைமை குறித்து, 12 மணி நேரத்துக்கு ஒருமுறை, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உ.பி., மாநில அரசுக்கு, உத்தரவிடுவதென, முடிவெடுக்கப்பட்டது. இதுபற்றிய விவரம், உ.பி., அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த கலவரம், பீகார், ராஜஸ்தான், ம.பி., கர்நாடகா, அரியானா, ஜம்மு - காஷ்மீர் உட்பட, ஏழு மாநிலங்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும், போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், சம்பந்தபட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதற்கிடையே, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர், முலாயம் சிங் யாதவ், லக்னோவில் நேற்று, முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன், அவசர ஆலோசனை நடத்தினார்.

Advertisement

மனித உரிமை கமிஷன் கவலை:தேசிய மனித உரிமை கமிஷன் தலைவர், கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:உ.பி.,யில் நடந்த கலவரத்தில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல, மனித உரிமை மீறல்களும் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதை, தேசிய மனித உரிமை கமிஷன், கவனத்தில் கொள்ளும். கலவர பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியதும், மனித உரிமை கமிஷன் பிரதிநிதிகள், அங்கு சென்று, விரிவான விசாரணை நடத்துவர். மனித உரிமை மீறல்கள் நடந்தது, உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறினார்.

சுப்ரீம் கோர்ட் மறுப்பு:"உ.பி.,யில் நடக்கும் கலவரத்தை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்கும்படி, அம்மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, "பெஞ்ச்'சிடம், நேற்று வாய்மொழியாக கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "கலவரம், உ.பி.,யில் நடப்பதால், அலகாபாத் ஐகோர்ட்டில் தான், இதுகுறித்து முறையிட வேண்டும். ஐகோர்ட்டை தாண்டி, சுப்ரீம் கோர்ட்டுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை' என்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (59)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-செப்-201317:15:15 IST Report Abuse
Malick Raja இரண்டு வாலிபர்கள் என்ன செய்தார்களாம்...சவுந்தர ராஜனின் வீட்டில் உள்ள பெண்களை பாலியல் கொடுமை செய்தால் வேடிக்கை பார்ப்பார் போல் தெரிகிறது... ஆர். எஸ். எஸ் பயங்கரவாத கும்பலின் உறுப்பினர் தான் என்பதை வெளிப்படுத்தி விட்டார்... மிக்க நன்றி... இந்திய நாட்டில் வன்முறை ஒரு போதும் வெற்றி பெறாது... இந்தியாவை சேர்ந்த,இந்திய இரத்தத்தில் தர்மம் என்றென்றும் உள்ளது... 99.8% மக்கள் அமைதியாகவே வாழ விரும்புகிறார்கள்... சிக்கல் உருவாக்குவது என்ற கொள்கையுடையவர்கள் 02% மட்டுமே... எனவே எவ்வளவுதான் ஊத்தி பெரிதாக்கினாலும் ஜாட் இன மக்களையோ, முஸ்லிம் மக்களையோ மயக்கமடைய மாட்டார்கள்... முஸ்லிம் மதத்தில் எல்லோருமே மாறியவர்கள் தானே தவிர வெளிநாட்டு இறக்குமதி இல்லை சகோதரர்களே... அணைத்து சமுதாயதில்லிருந்தும் மாறி முஸ்லிம் என்ற பெயரில் இருக்கிறார்கள்..(பிராமின் முதல் மலைச்சாதியினர் வரை அணைத்து சமுதாயதிலிருந்தும் ஒரே சமுதாயமாக முஸ்லிம் என்ற வழியில் நடக்கிறார்கள் தவிர வேறொன்றும் இல்லை.. ஆனால் ஆர்.எஸ். எஸ் கும்பல் வெளிநாட்டு இறக்குமதியே அன்றி அவர்கள் பரிபூரண இந்தியர்கள் இல்லை .. இன்னும்.. எந்த வடநாட்டு குடும்பப்பெயரிலும் இல்ல்லாத முஸ்லிம் பெயர்கள் இருக்காது.. படேல்.சவுதிரி,திவாரி,மேனன், இன்னும் அணைத்து குடும்ப பெயர்களிலும் முஸ்லிமும் இருக்கிறது... எனவே முஸ்லிம் என்ற பெயரில் இருப்பவன் வன்முறையில் ஈடுபட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கிலிடலாம்... அதுதான் சட்டமும்.. எந்த ஒரு உயிரையும் காரணமின்றி கொல்பவன் இறைவன் விரும்புவதில்லை.. காரணம் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே... கொசு முதல் கோடீசுவரன் வரை அனைத்தும் அழியக்கூடியவை.. முஸ்லிம்களை பார்த்து முஸ்லிம் ஆக கூடாது... மாறாக கொள்கையை படித்து கொள்கையால் மட்டுமே முஸ்லிமாக வேண்டும்... முஸ்லிம்களும் மனிதர்களே தவறுதல் இருக்கலாம் கொள்கைகள்,சட்டங்கள்.நீயாய அநியாயம் இதல்லாம் இருக்கிறது..இதெல்லாம் பார்த்துதான் முன்னால் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் கூட இன்று முஸ்லிமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் ,, எனவே இந்தியாவிலுள்ள அணைத்து சமுதாய மக்களும் முஸ்லிமாகி வாழ்கிறார்கள்... பயங்கரவாதம் ,மதவாதம்,கொடுஞ்சொல், பாலியல் குற்றம்,கொலை,கொள்ளை, எல்லாம் இருக்கக்கூடாது... அதே சமயம் முஸ்லிம் சமுதாயத்தையே வெளியேற்றுதல், கொள்ளுதல்,போன்றவைகளை தடுத்துக்கொள்ள உரிமை சிறப்பாகவே இருக்கிறது... சமுதாயங்கள் ஆறுகள்... முஸ்லிம் ஒரே சமுதாயம் அமைதிக் கடல்... எனவே அன்புடன் உரிமைகளுடன் ஒருவருக்கொருவர் சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதே மனித பண்புகளின் தலையானதாகும்... மனிதர்களாக இந்தியன் என்ற பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்...
Rate this:
Share this comment
ganapathy - khartoum,சூடான்
11-செப்-201316:34:42 IST Report Abuse
ganapathyமனிதன் தோன்றியது ஆப்ரிக்காவில், பின்னர் அவன் குழுவாக பிரிந்து, ஆசியா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு பயணிக்கிறான். பாபரும், கணவாய் வழி வந்தவர் தான். அவர்கள், கத்தி முனையில் மதம் மாற்றினர், கோவில்களை இடித்தனர் என்பதும் உண்மை. அவுரங்கசீப், ஜ்ஹசியா வரி வித்திக்க சிவாஜியின் தலைமையில் மக்கள் வீறு கொண்டு எழுகின்றனர். அப்படி வந்தது தான் இந்து இயக்கங்களும். ஆட்சியில் இருக்கிறவன் அடக்குமுறை பண்ண கூடாது. இந்தியாவில் இந்து கோவில் இடிக்கப்பட்டது தவறு எனவே, அதை இந்துகளிடம் ஒப்படைக்கலாம் என்று யாரவது தர்ம நியாயம் பேசினால் ஒப்புக்கொள்ளலாம். நான் இந்து, சுப்ரீம் கோர்டில் வழக்கு இருக்கும் பொது பாபர் மசூதியையை இடித்தது தவறு என்று எப்போதும் சொல்லுவேன். என் என்றால், அங்கு தொல்லியல் துறை ஆறாய்ச்சி நடத்தி கோவில் இருந்ததை உறுதி செய்துள்ளது. இப்போது இஸ்லாமியர்கள் விட்டு தருவது அமைதுக்கு வழி வகுக்கும். அன்புடன்......
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
10-செப்-201316:47:40 IST Report Abuse
JALRA JAYRAMAN தேர்தல் வருது இப்போவே ராமர் கோவில், பிரச்சினையை கையில் எடுத்து வாக்கு அறுவடைக்கு பிஜேபி கட்சி தயார்
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
10-செப்-201316:45:39 IST Report Abuse
JALRA JAYRAMAN அகிலேஷின் ஒரே தகுதி முலாயம் மகன் என்பது தான்
Rate this:
Share this comment
Cancel
Indian - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-201316:34:25 IST Report Abuse
Indian இந்த கலவரத்துக்கு காரணமானவர்கள் இந்துக்களாக இருந்தாலும் சரி முஸ்லிம்களாக இருந்தாலும் சரி கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
10-செப்-201313:56:50 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் அவங்க இனத்தவங்களே தங்களில் உள்ள தீவீரவாதிகளை தாட்சணியம் பாக்காம பிடிச்சு கொடுத்திருந்தா அவங்கமேல சந்தேகமே வந்திருக்காதே சொந்த இனத்தவரின் பாதுகாப்பு இல்லாம பதுங்குமிடம் இல்லாம நெடுநாள் எவனும் தப்பித்து வாழமுடியுமா? மாட்டுவோம் யாம் பாதுகாப்பு கொடுக்க மாட்டாங்க என்பது தெரிந்தால் எவனாவது பயங்கரவாதம் செய்வானா/ குண்டு வைப்பானா? பிரிவினையின் தழும்புகள் ஆற பல தலைமுறைகளாகும் அதுவரை சிறுபான்மையினர் சந்தேகத்துக்கு இடம் கொடுக்காமல் வாழ்வது ஒற்றுமையை வளர்க்கும்
Rate this:
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
10-செப்-201313:49:25 IST Report Abuse
vidhuran >> ஒரு பெண்ணைக் கேலி கிண்டல் செய்த பிரச்சினையை, பிரதமர் பதவி வெறிபிடித்தலையும், ஒரு மத வெறி கொண்ட கும்பல், எப்படியெல்லாம் இந்தியாவையும், இந்திய உடன் பிறப்புகளையும் சின்னா பின்னமாக்கி பார்க்கத் துடிக்கிறது என்பதற்கு சரியான சான்று.
Rate this:
Share this comment
Sathyamoorthy - Bangalore,இந்தியா
10-செப்-201314:28:37 IST Report Abuse
Sathyamoorthyவிதுரா, வாய மூடு... சீக்கிய கலவரம் எல்லாம் மறந்து விட்டதா? நடிகர் சல்மான் கானின் தந்தை அவர்களே இதை பற்றி பேசி உள்ளார்... அவரது கருத்து என்னவென்றால், எல்லோரும் குஜராத் கலவரத்தை பற்றி மட்டும் பேசுகிறார்கள். இதற்கு முன்னர், பம்பாயில் இதை விட பெரிய கலவரம் நடந்துள்ளது. மற்றும் பாஜக அல்லாத மாநிலங்களில் இதை விட பெரிய கலவரங்கள் நடந்துள்ளன. அதை எல்லாம் கண்டுகொள்ளாத மக்கள், மோடியை மட்டும் வாரி தூற்றுவது ஏன் என்று கேட்டுள்ளார். இதற்கு உன்னுடைய பதில்?...
Rate this:
Share this comment
Cancel
10-செப்-201313:38:05 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் இந்த லிஸ்டில் குஜராத் பெயரே இல்லை. அதாவது அங்குள்ள பாகிஸ்தான் தொப்புள்கொடி உறவுகளுக்கு 2002 லேயே மோடி ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துட்டார் இனி அங்கு எந்த துரோகியும் ஆடமாட்டான் அதுபோல இந்தியா முழுவதும் உள்ள பாக் பயங்கரவாதிகளுக்கும் .மதவெறியர்களுக்கும் பயங்கர ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கணும் கொடுக்கிற அடியில் அவனவன் வாயையும் மற்ற.தையும் பொத்திக்கிட்டு அடிமையா அடங்கி இருக்கணும் அப்போதான் நாம் நிம்மதியா வாழலாம் அதுக்கு மோடிதான் வேணும்
Rate this:
Share this comment
ganapathy - khartoum,சூடான்
10-செப்-201315:37:14 IST Report Abuse
ganapathyகுஜராத்தில் மோடி கலவரத்தை உருவாக்கவில்லை. 63 பேர் கொல்லப்பட, இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இஸ்லாமியர்களுக்கு அருகே இந்துக்களும் இருந்ததால் கலவரம் அடக்க முடியாமல் போனது. அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கும், 63 பேர் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் உறுத்தல் தந்து இருக்கும். அவர்களும் அமைதியாய் இருந்தால் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கலாம் என்பதையும் உனர்ந்துள்ளனர். எனவே அங்கு கலவரம் வராது. ஓட்டுக்கு காசு கொடுத்து பதவியில் இருப்பவன், மதகலவரத்தை தூண்டி, சிறுபான்மை, பெரும்பான்மை என்று சொல்லி பதவி சுகம் அனுபவிக்கறான். மக்கள் அடிபட்டு சாகின்றனர்.அமைதியாக வாழுங்கள். ஆண்டவனை கும்பிடுங்கள். வீடியோ போன்றவற்றில் வதந்திகளை பரப்பாதீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
10-செப்-201313:15:55 IST Report Abuse
v j antony நேர்மையானவர்கள் அரசியலை விரும்பாத வரை இது போல பக்குவம் இல்லாத அரசியல் வாரிசுகளின் ஆட்சி தொடரும் மாநிலங்களின் நிலை பரிதாபதற்கு உரியதே ...மாற்றங்கள் விரைவில் நாடு முழுவதும் வர அனைவரும் முயற்சி எடுப்போம்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-செப்-201312:49:49 IST Report Abuse
Malick Raja ஒரே மனப்பான்மையுள்ள மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தான் மனிதத்தன்மையற்ற மிருக குணம் கொண்ட சிலரால் ஏவப்படுகின்ற தாக்குதல்கள். இந்திய மக்களில் மிகப்பெரும்பான்மையோனோர் மனிதநேயத்துடன் நடக்கும் திறன் கொண்டதால் தான் மிருகவாதிகளின் வேலைகள் பயனளிக்காமலேயே போய்க்கொண்டிருக்கிறது... இது போன்ற கலவவரங்களில் ஈடுபடுவோர் நாடு முழுவதும் கணக்கெடுத்தால் சில லட்சங்களே இருப்பார்கள். ஆனால் அவர்கள் அரசியல் கட்சிகளின் ஆதரவைகொண்டுதான் முயற்சிகள் பல செய்து தோல்வி மட்டுமே பலனாக கிடைத்துள்ளது... 125 கோடி மக்கள் தொகையில் சில லட்சங்களை ஒடுக்குவது மிகப்பெரிய காரியம் அல்ல.. இப்போதைய நிலையில் விசாரணை முடிந்தவுடன் உண்மை நிச்சயம் வெளிவரும்..
Rate this:
Share this comment
Cancel
Soundara Rajan - sydney,ஆஸ்திரேலியா
10-செப்-201312:17:46 IST Report Abuse
Soundara Rajan இந்த கலவரத்திற்கு காரணமான வீடியோவை நான் பார்த்தேன். கிட்டத்தட்ட 15 நிமிடங்களாக சிறிது சிறிதாக மிகவும் கொடூரமான முறையில் இரு ஹிந்து வாலிபர்களை நூற்றுக்கும் மேற்பட்ட அமைதியான மதத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்துகொண்டிருந்த காட்சி. அதை பார்த்தவர்கள் யாருக்குமே ரத்தம் சூடேறும். அதை பர்ர்த்து கொதித்து போன ஹிந்துமக்கள் கூட்டம் போட்டு கண்டித்து விட்டு திரும்பியவர்களை காத்திருந்து அமைதியான மதத்தை சேர்ந்தவர்கள் துப்பாகிகளால் சுட்டும் வெட்டியும் கொலை வெறி அரங்கேறியிருக்கிறது. இப்படிப்பட்ட கொலைவெறியர்களை கொண்ட சமூகம் இருக்கும் நாட்டில் கலவரத்தை தூண்ட எந்த அரசியல் வாதியும் தேவைபடாது என்பதே என் கருத்து. ஆனால் கலவரங்களை அடக்க துப்புகெட்ட கட்சிகளும் மீடியாக்களும் போட்டி போட்டுகொண்டு அமைதியை விரும்பும் மதத்தவர்களின் அடிவருடிகளாக மாறுவதும் அரசியல் ஆதாயம் தேடுவதும், ஹிந்துக்களின் புனங்களில் மிளகாயை தெஇய்ப்பதுவும் தான் உண்மையான மதசார்பற்ற நியாயம் என்று கூரிகொண்டிருகொண்டு வோட்டுக்களை மட்டுமே குறிவைக்கிறார்கள். சிறுபான்மையினர் என்ன கொடூரமான செயல்கள் செய்தாலும் காங்கிரஸ் கட்சியும் பிற மாநில முன்னேற்ற கட்சிகளும் தொடர்ந்து பிஜேபி, RSS பாடுகளையே தொடர்ந்து பாடுவார்கள். நமது நாட்டில் நடக்கும் மதகலவரங்களை அடக்க நமது நாட்டு அரசியல் வாதிகளுக்கு துணிவு இல்லவே இல்லை.
Rate this:
Share this comment
Sathyamoorthy - Bangalore,இந்தியா
10-செப்-201314:31:04 IST Report Abuse
Sathyamoorthyஇது இப்படியே போனால், ஹிந்துக்கள் ஒரு நாள் வெகுண்டு எழுந்து ஹிந்துக்களுக்கு சப்போர்ட் செய்யாத, எல்லா கட்சி MP MLA க்களையும், விரட்டி விரட்டி அடிப்பது உறுதி....
Rate this:
Share this comment
JAY JAY - CHENNAI,இந்தியா
10-செப்-201314:33:48 IST Report Abuse
JAY JAY அய்யா..வீடியோவே போலி வீடியோ என்கிற போது, அதை பார்த்ததாக எழுதுவதும் ரத்தம் கொதிக்கிறது என்று எழுதுவதும் கேட்பதற்கு கேனத்தனமாக அல்லவா உள்ளது....புரளிகளை பரப்பாதீர்.... நேர்மையை , உண்மையை மட்டும் கருத்தாக எழுதவும்... உண்மை என்றாலும் கூட சில விஷயங்களில் வலைதளங்களில் உசுப்பேத்திவிடும் கருத்து எழுதி பிரச்சினையை ஊதி பெரிசாக்குவதற்கு மட்டும் அல்ல, அதன் மூலம் அப்பாவி மக்கள் இரு பிரிவிலும் பாதிக்கப்பட வைக்க , யாருக்கும் அதிகாரம் இல்லை.......
Rate this:
Share this comment
Meto Enjoy - Singapore,சிங்கப்பூர்
10-செப்-201315:20:40 IST Report Abuse
Meto Enjoyநடந்தத அப்படியே மாற்றி சொல்லுறார். உங்களை போன்ற சிலரால் தான் இந்த பிரச்னை. ஒழுங்க தெரிந்தா எழுதுங்க. சில வீடியோ, வேண்டும் என்றே மார்பின் செய்து போட்டது உண்மை என்று நிரூபித்திருக்கு. அதனை போன்ற தவறான வீடியோ தான் இதற்கு காரணம் என்றும், அதனை செய்த 3 பி.ஜெ.பி அரசியல்வாதி மேல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.