Think big on agriculture, says Modi | எளிதில் கடன் கிடைக்காததே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்: மோடி புகார்| Dinamalar

எளிதில் கடன் கிடைக்காததே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்: மோடி புகார்

Updated : செப் 11, 2013 | Added : செப் 09, 2013 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 எளிதில் கடன் கிடைக்காததே விவசாயிகள் தற்கொலைக்கு காரணம்: மோடி புகார்

காந்தி நகர் :""விவசாயத் துறைக்கு எளிதில் கடன் கிடைக்காததே, விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நிகழக் காரணம்,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.

குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற விவசாயத் துறை தொடர்பான மாநாட்டில், மோடி பேசியதாவது:விவசாயத் துறைக்கு, எளிதில் வங்கிக் கடன் கிடைப்பதில்லை. வங்கிகளின் ஏராளமான சட்ட நடைமுறைகளால், விவசாயிகள் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால், கடன் சுமையால் தவிக்கும் விவசாயிகள், தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். கடந்த, 20 ஆண்டுகளில், 2.70 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.நபார்டு போன்ற வங்கித் துறை பற்றி, மத்திய அரசு எளிதாக சொல்லி விடுகிறது. ஆனால், இன்றும் கூட, 30 சதவீதத்திற்கும் குறைவான விவசாயிகளால் மட்டுமே, வங்கிக் கடன் பெற முடிகிறது. மற்றவர்கள் எல்லாம், அதிக வட்டி வசூலிக்கும் தனி நபர்களிடம் இருந்தே, கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஒவ்வொரு நாளும், 2,500 விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர். தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உள்ளதாக, அவர்கள் உணர்வதால், இவ்வாறு செய்கின்றனர். அதனால், மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, நம் நாட்டில், விவசாய விளை பொருட்கள் உற்பத்தி குறைந்து வருகிறது.பெப்சி, கோககோலா, பேண்டா போன்ற குளிர்பானங்களில், 5 சதவீதம், இயற்கையான பழரசம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நான் தெரிவித்தேன். இதனால், விவசாயிகள் பலன் அடைவர் என்றும் கூறினேன். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் நிர்பந்தத்தால், அந்த யோசனையை, மத்திய அரசு நிராகரித்து விட்டது.இவ்வாறு முதல்வர் மோடி கூறினார்.

பிரதமர் வேட்பாளராக மோடி :ராஜ்நாத்திடம் பொறுப்பு:"அடுத்த லோக்சபா தேர்தலுக்கான, பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வரும், 17ம் தேதிக்கு முன், அறிவிக்கப்படலாம்' என, அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின், இரண்டு நாள் ஆலோசனை கூட்டம், நேற்று முன் தினமும், நேற்றும் டில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மோடியை பிரதமர் வேட்பாளராக, எந்த தேதியில் அறிவிப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் தேசிய தலைவர், ராஜ்நாத் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, பா.ஜ., கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், சுஷ்மா சுவராஜ் ஆகியோருடன் நடத்திய பேச்சுக்களில், எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. பா.ஜ., தொண்டர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, ராஜ்நாத் சிங்கும், இதர, பா.ஜ., தலைவர்களும், மோடியை, வரும், 17ம் தேதிக்கு முன், பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தீர்மானித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L.Karthikeyan - Gudiyatham,இந்தியா
10-செப்-201312:40:55 IST Report Abuse
L.Karthikeyan நீங்க வாங்க ...........சீக்கிரம்(லோன்) கொடுங்கள்...........எதிர்பார்க்கிறோம்..
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-செப்-201309:37:21 IST Report Abuse
Pugazh V நிஜமா பேசுவதில்லை என்று மோடி விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறார் போலும். அதே போல, மோடி என்ன சொன்னாலும்,கண்ணை மூடிக் கொண்டு நம்புவது என்றும் சிலர் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது என்ன கருத்து பதிவு செய்ய?
Rate this:
Share this comment
Naga - Chennai,இந்தியா
10-செப்-201315:28:26 IST Report Abuse
Nagaஅவர் நிஜமே பேசினாலும், பொய் என்று சொல்லும் உங்களை என்ன சொல்வது. உண்மை கசக்கத்தான் செய்யும்....
Rate this:
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
10-செப்-201308:43:49 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் இந்திய விவசாயிகளின் தற்கொலைகள் கடன் கிடைக்காமை மட்டுமல்ல.. தண்ணீரும் சோதனை.. ஒருபுறம் வெள்ளக்காடு.. மறுபுறம் தண்ணீர் கிடைக்காமை.. கடன் கொடுத்து விவசாயிகளை ஊக்க படுத்தவேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.. அதே சமயம் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க வேண்டும்..இயற்கை உரம் மானிய விலையில் கிடைக்க வழி செய்ய வேண்டும்.. இதற்கெல்லாம் வழி செய்யாமல்... விவசாயிகளின் தற்கொலைகள் இந்த காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் என்கிற அரக்கன் .. மோடி குஜராத் விவசாயிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது போல (நர்மதா திட்டம்) பிரதமராகி இந்திய விவசாயிகளின் வளர்ச்சிக்கு வழி காட்ட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201308:32:18 IST Report Abuse
Srinivasan Kannaiya உண்மை..உண்மை... தமிழ்நாட்டை பொறுத்தவரை மிட்டா,மிராசுதார், அரசியல்வாதிகள் தான் விவசாய கடனை வாங்குகிறார்கள்... அதை திருப்ப செலுத்துவதே கிடையாது... .காரணம் .மத்திய, மாநில அரசுகள் அந்த கடனை அடிக்கடி தள்ளுபடி செய்கிறது... கடந்த 40 ஆண்டுகளாக கடன் வாங்கிய நபர்களின் விவரங்கள் எடுத்து பாருங்கள்... இந்த உண்மை விளங்கும்.,.. எந்த சாமானியமான விவசாயியும் இந்த சலுகையை அனுபவிப்பதில்லை..
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-செப்-201308:07:47 IST Report Abuse
villupuram jeevithan பாவம் இந்த விவசாயிகள், மணிமேகலை உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்திருப்பது தெரியாமல் தற்கொலை செய்து கொண்டுவிட்டனரே?
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
10-செப்-201308:03:44 IST Report Abuse
JALRA JAYRAMAN மோடி அண்ணன் தமிழ்வாணன் மாதிரி ஆகிவிட்டார் MASTER OF ALL SUBJECTS
Rate this:
Share this comment
Cancel
Sathiyan Jesudass - Doha,கத்தார்
10-செப்-201307:54:02 IST Report Abuse
Sathiyan Jesudass பாசு..இந்த புருடவல்லாம் வேகாது...வேற நல்லதா யோசிங்க...கேக்கிறவன் கேனயன இருந்த எறும்புக்கு பின்னாடி யானை ஒழிந்திருக்குன்னு கூட சொல்ல்வணுக...
Rate this:
Share this comment
Cancel
A.MARIAPPAN - vickramasingapuram,இந்தியா
10-செப்-201307:22:57 IST Report Abuse
A.MARIAPPAN தற்கொலைக்கு காரணங்கள் பல. மக்கள் தங்களது வருவாயை பெருக்கி கொள்வதற்கு பொது துறை வங்கிகளை அணுகுவது நன்றுதான். ஆனால்,இன்று பொது துறை வங்கிகளில் கடன் பெற்றால் கடனை திரும்ப செல்லுத வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இல்லை.நாளடைவில் அரசு வர கடன் என்று தள்ளுபடி செய்து விடும் என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. மேலும் பெரும் நிலா கிளார்கள்தான் இந்த தில்லு முல்லு வேலை செய்கிறார்கள். வறுமை விவசாயிகள் தங்களது செலவுகளை ஆராய்ந்து செலவு செய்ய வேண்டும். குடி போன்ற உடலுக்கு ஊரு விளைவிக்கும் எந்த தீய பழக்கத்திற்கும் ஆளாகாமல் திட்டமிட்ட குடும்ப வாழ்வை அமைத்து கொள்ளவேண்டும். அரசு மானியம் மக்களின் வரிப்பணம் என்ற எண்ணத்துடன் எல்லோரும் இலவசங்களை நாடும் மனப்பான்மை மாறவேண்டும். அன்புடன், எ.மாரியப்பன்.
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
10-செப்-201307:05:42 IST Report Abuse
Prabhakaran Shenoy எல்லா கடன்களையும் ரத்து செய்து இலவச மதுவும் உணவும் தங்க இடமும் கொடுக்கும் கட்சிக்கே வோட்டு
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
10-செப்-201305:23:17 IST Report Abuse
Thangairaja குஜராத்தில் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைக்கு என்ன காரணம்.?
Rate this:
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
10-செப்-201306:57:52 IST Report Abuse
ஆரூர் ரஙமகாராஷ்டிரா ஆந்திரா போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்தான் லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க . மத்திய அரசே ஒப்புக்குது குஜராத்தில் விவசாயத்தில் நஷ்டம் வந்தால் மற்ற துறை வேலை வாய்ப்புக்கள் கைகொடுக்கின்றன அதற்கே ஆளில்லாமல் ஆயிரம் கிமி தூரத்திலிருந்து மில்லியன் பேரை கொண்டு வந்துள்ளனர் எனவே முழு விஷயம் தெரியாமல் எழுதவேண்டாம்...
Rate this:
Share this comment
Sathiyan Jesudass - Doha,கத்தார்
10-செப்-201307:46:24 IST Report Abuse
Sathiyan Jesudassபோதுமுங்க நீங்க தருகிற ஜால்ரா சத்தம் துபாய் வரை கேக்குதுங்க......
Rate this:
Share this comment
Srinivasan N - Chennai,இந்தியா
10-செப்-201309:28:25 IST Report Abuse
Srinivasan Nவிவசாய வளர்ச்சி குஜராதில் எப்படி உள்ளது என்று தெரிந்து எழுதவும். விவசாயிகள் தற்கொலையை பற்றி ஊடங்கங்களில் நிறைய விவரங்கள் வந்திருக்கின்றன. படித்து புரிந்தபின் கருத்தை பதிவு செய்யவும்....
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
10-செப்-201310:31:31 IST Report Abuse
sankarஅவர் சொல்வது 30 சதவிகிதம் பேர்தான் லோன் பெறுகிறார்கள் என்று அவர் சொல்கிறார் . லோன் தரவேண்டிய மதிய அரசு அறிக்கை மட்டும் விடுகிறது . நடைமுறையில் ஒன்றும் இல்லை...
Rate this:
Share this comment
Rocky - Chennai,இந்தியா
10-செப்-201312:48:00 IST Report Abuse
Rockyநண்பரே ... குஜராத்தில் மற்ற எந்த துறை விவசாயிகளுக்கு கை கொடுக்குது என்று விவரமா சொல்லுங்களேன்.. ஒருவேளை அரசு துறைகளில் வேலை கிடைக்கிறதோ..? ஆயிரம் கி.மி இலிருந்து மில்லியன் பேரை கொண்டு வந்து என்ன செய்தனர்? பன்னாட்டு உற்பத்திகளில் நம் இஷ்டத்திற்கு மாற்றம் செய்ய இயலாது என்று மோடிக்கு நன்றாக தெரியும். இருந்தும் அவர் சொன்னால் நாம் நம்புவோம்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை