DMK chief Karunanidhi for anti-superstition bill | மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி விருப்பம் | Dinamalar
Advertisement
மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி விருப்பம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : "மூட நம்பிக்கை ஒழிப்புக்கு, உரிய சட்டம் ஒன்றை, மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:மஹராஷ்டிரா மாநில அரசு சமீபத்தில், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. நரபலி, பில்லி, சூனியம், மாந்திரீகம் மற்றும் இதர மனித நேயமற்ற கொடுமையான பழக்கங்களுக்கு எதிராக, அச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இச்சட்டத்தின்படி மோசடி செயல்களில் ஈடுபடுவோர் கைதானால், குற்றம் நிரூபிக்கப்படும்போது, ஏழாண்டு தண்டனை கிடைக்கும்.மகராஷ்டிர மாநிலத்தில் புகழ் பெற்ற பகுத்தறிவாளர் நரேந்திர போல்கர், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அவரது படுகொலை சம்பவம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என, உணர்த்தியிருக்கிறது.மூட நம்பிக்கை ஒழிப்புக்கு உரிய சட்டம் ஒன்றை, மத்திய அரசும், மாநில அரசும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டம், பள்ளி, கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்.அக்கோரிக்கையை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முனைப்போடு, முன்னெடுத்துச் செல்வோம். அதுவே நரேந்திர போல்கர் நினைவுக்கு, நாம் செலுத்திடும் வீர வணக்கம்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (152)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian.S - Chennai,இந்தியா
11-செப்-201300:26:33 IST Report Abuse
Subramanian.S எவ்வளவோ மெகா ப்ரொஜெக்ட்கள் ஆரம்பிக்கும் முன் நரபலி கொடுப்பதாக அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள் வருகின்றன. மூட நம்பிக்கைகள் தனி மனிதனைப் பாதிக்கும் போது அது தவறுதான். பெரியாருக்கும், அண்ணா சமாதியில் அண்ணாவுக்கும் சூடம் எற்றுவதாலோ மொட்டை போடுவதாலோ அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்கும் வரை அடுத்தவருக்குப் பாதிப்பில்லை. எனக்குத் தெரிந்தவரை பெரியார் பகுத்தறிவு வாதத்தை பிரச்சாரம் செய்ததன் விளைவாக இன்று மூலை முடுக்கிலுள்ள கோவில்கள் எல்லாம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோயில்களில் எருமைக் கடாவை வெட்டி பலியிடுவதை பெரியார் எதிர்த்தார். ஆன்மீக வாதிகள் கூட இதை ஆமோதித்தனர் . ஆனால் பெரியார் ஒட்டகத்தை வெட்டி குர்பானி கொடுப்பதை ஒருபோதும் எதிர்க்கவில்லை. இந்த முரண்பாட்டைத்தான் பகுத்தறிவாளர்கள்," தமிழ் காட்டுமிராண்டி மொழி" எனக் கூறிய பெரியாரைக் கேட்கவில்லை. கலைஞரை விட்டுவிடுங்கள் பாவம். அவருக்கென்று தனி கொள்கைகள் எப்போதும் இருந்ததில்லை. ஆட்சியையும் அதிகாரத்தையும் எப்படியாவது கைப்பற்றி அதன் பலனை அனுபவிக்கவேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே உள்ளவர். எல்லோரையும் கேள்வி கேட்டே பழக்கப்பட்டவர் மற்றவர்கள் கேள்வி கேட்கும்போது மன உளைச்சலில் ஏதோ பிதற்றுகிறார்.விட்டுவிடுங்கள்.
Rate this:
1 members
0 members
22 members
Share this comment
Cancel
sing venky - Stanford University, Melnopark,யூ.எஸ்.ஏ
10-செப்-201313:36:51 IST Report Abuse
sing venky என்னதான் உங்களை (நான் உட்பட) சமீபத்திய காலங்களில். உங்கள் & உங்கள் குடும்பத்தாரின் ஊழல் மற்றும் குற்ற சாட்டுகளால் உங்களையும் உங்கள் கட்சியையும் வெறுத்தாலும் பாராட்டப்பட வேண்டிய உண்மை ஒன்று உள்ளது: தமிழ் நாட்டில் உயர் சாதியினரின் ஆதிக்கம், மூட நம்பிக்கைகள் அவர்களின் வெறியாட்டங்களில் இருந்து, திராவிட கொள்கைகளை ஏற்று, சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டார் கல்வியிலும், வாழ்விலும் உயர்ந்திட நீங்கள் உங்கள் ஆட்சியில் ஏற்படுத்திய சட்டம், சலுகைகள் ஏராளம். இன்று என்னைப்போல் பல நடுத்தர வர்க்கத்தினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் உயர் கல்வி பெற இத்தகைய சட்டங்கள் தான் வழி வகுத்தன. ஜாதி வைத்து ஆட்சியை பிடிப்பதும், அரசியல் செய்வதும் உங்கள் சாமர்த்தியம் என்றாலும் அந்த வேறுபாடுகள் படிப்படியாக குறைக்க நீங்கள் எடுத்த வழிமுறைகளே அப்போதைய சமூக அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப நடைமுறைக்கு சாத்தியமானவை. ஒருவேளை இன்னும் நல்ல சமூக சிந்தனையுடன் நீங்கள் செயல் பட்டிருந்தால் நாடு இன்னும் சீக்கிரம் முன்னேறாமலா இருந்திருக்கும்?..
Rate this:
114 members
2 members
20 members
Share this comment
Cancel
Susa Vengat - Chennai,இந்தியா
10-செப்-201313:32:32 IST Report Abuse
Susa Vengat முதல்வர் பதவில இருக்கும் போது மட்டும் தன் குடும்பத்த தவிர வேறு எதுவும் தலைவரோட கண்ணுக்கு தெரியாது. பதவி போன பிறகுதான் இந்த ஞானம் எல்லாம் வரும்.
Rate this:
7 members
0 members
85 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-செப்-201313:30:33 IST Report Abuse
Pugazh V கலைஞரின் கருத்துக்கள் பிடிக்காவிடில் தவிர்ப்பதை விடுத்து, கலைஞரின் குடும்பம் பற்றிக் கேவலமாக நாகரீகமற்று பதிவுகள். அவரது கருத்தை விமர்சியுங்கள், அவரை ஏன் விமர்சிக்கிறீர்கள்? திருந்தவே மாட்டார்கள். கருத்தைப் பதிவு செய்ய என்றால், ஒரு செய்தியினால் என்னவிதமான சமுதாய பாதிப்பு அல்லது நன்மைகள் நிகழலாம் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதைப் பதிவு செய்வது தான் கருத்துப் பதிவு என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அல்லது செய்தியின் நாயகரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது கருத்துப் பதிவு அல்ல. அவர் என்ன நிறத் துண்டு போட்டால் பிறர்க்கென்ன? மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் சட்டம் வேண்டும் என்கிறார். தேவையற்றது அல்லது தேவை தான் அதனால் என்ன நன்மைகள், என்ன தீமைகள் என்ன சமுதாய பாதிப்பு என்று பதிவு செய்வது தான் முறை. வாசகர் பார்வைக்கு வருமா? நன்றி.
Rate this:
335 members
0 members
111 members
Share this comment
Seshadri Raghavan Raghavan - Chennai,இந்தியா
11-செப்-201304:09:14 IST Report Abuse
Seshadri Raghavan Raghavanமற்றவர்களை கலைஞர் கேவலமாக விமர்சித்ததைவிட யாராலும் விமர்சித்துவிட முடியுமா? இதில் இவர்தான் முதல்வர் .நாகரிகமற்று பேசுவதிலும் இவர்தான் முதல்வர். காமராஜரை கருப்பு கோட்டன் என்றும் ,ஹைதராபாத்-ல் இவருக்கு குடும்பம் உள்ளது என்றும் சொல்லியதற்கு இது வரையில் ஒரு பொது மன்னிப்பு கேட்பாரா?...
Rate this:
2 members
0 members
37 members
Share this comment
Puthiyavan Raj - New Delhi ,இந்தியா
14-செப்-201301:24:38 IST Report Abuse
Puthiyavan Rajபுகழ், கலைஞரின் கருத்துக்கு பதில் சொல்ல முடியாமல் தானே தனிப்பட்ட, நாகரிகமற்ற தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். இவர்களிடம் நாகரிகத்தை எதிர்பார்ப்பது மிலிடரி ஹோட்டலில் இட்லி சாம்பார் கேட்பது போல. சேஷாத்ரி ராகவன் 30 வருடம் முன்பு கலைஞர் சொன்னதாக ஏதோ சொல்கிறார். அதில் உண்மையா என்று தெரியாது. ஆனால் கலைஞர் குறளோவியம் போன்று பல சுவையான நல்ல இலக்கிய நயத்துடன் நகைச்சுவையுடன் பல கருத்துக்களை சொல்லி இருக்கிறார். ஆனால் இவருக்கு அநாகரீகமான பேச்சுக்கள் தான் ஞாபகம் இருக்குமா ? நல்ல விஷயங்கள் ஞாபகத்தில் இருக்காதா? காமராஜருக்கு மணி மண்டபம் கட்டியது கலைஞர் தான். காமராஜர் பெயரில் பல ஏழைக்குழந்தைகளுக்கு அரசு மூலம் தன ஆட்சியில் கல்வி உதவி செய்ததும் கலைஞர் தான். நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் நன்றல்லதை 30 வருடங்களுக்கு மேலாக மறக்காமல் வைத்திருப்பவர் இவராகத்தான் இருக்கும்....
Rate this:
5 members
0 members
1 members
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
10-செப்-201313:15:02 IST Report Abuse
adithyan பதவியை பிடிக்க அஸ்வமேத யாகம் செய்வது, அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆடு வெட்டுவது, தினமும் ஒரு பிராமனரைகொண்டு கணபதி ஹோமம் செய்வது, நவராத்திரி சமயத்தில் சுவாசினி பூஜை செய்வது, போன்றவை ஒரு பகுத்தறிவாளர் செய்வது மூட நம்பிக்கை ஆகாது. காரணம் அவை ஒரு பகுத்தறிவாளர் சோதிடரால் சொல்ல பட்டவை.
Rate this:
7 members
1 members
90 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-செப்-201313:13:20 IST Report Abuse
Nallavan Nallavan முதலில் இவர் தனது குடும்பத்தினரும், ஏன் தாமும் கூட மூட நம்பிக்கை இல்லாதவர்கள்தாம் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் .... மூட நம்பிக்கைகள் என்று நமக்கு முன்பு தோன்றிய பல தற்போது அறிவியல் உண்மைகளாகி வருகின்றன. மஞ்சள் துண்டு எதற்கு என்ற கேள்விக்கு இன்றுவரை சரியான பதில் கிடைக்கவில்லை .... முதலில் புத்தர் அணிந்திருந்த ஆடையின் வண்ணம் மஞ்சள்தான் என்றார் ..... பின்னர் பற்பல காரணங்களை அடுக்கினார். ஒரு அடையாளத்துக்காக என்று கூறியதுதான் லேட்டஸ்ட் காரணம். உண்மையான காரணம் ஒன்றே ஒன்றுதான் இருக்கமுடியும் ..... இவருக்கு அதைச் சொல்ல மனமில்லை
Rate this:
6 members
1 members
109 members
Share this comment
Cancel
Muthukumar Jeevarathinam - trichy,இந்தியா
10-செப்-201313:08:43 IST Report Abuse
Muthukumar Jeevarathinam மூடநம்பிக்கை ஒழிய தஞ்சாவூர் கோவிலுக்கு இனி யாரும் பட்டு வேஸ்டி சட்டை அணிந்து பின் பக்க வாசல் வழியாக வரகூடாது, தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் திருப்திக்கு மனைவியை அனுப்பி (துணைவியும்) சாமி கும்புட கூடாது, எருமைகடா பலி குடுத்து தோசம் கழிக்க கூடாது என சட்டம் கொண்டு வரலாம்
Rate this:
4 members
0 members
131 members
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
10-செப்-201312:54:03 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் மூட நம்பிக்கை-பகுத்தறிவு என்ற பெயரில் சொல்லாடி மக்களை மயங்கவைத்து சுகாதாரம்-கல்வி-அடிப்படை வசதி கொடுக்காமல், இந்திய கோடீஸ்வரர் ஆகி உள்ளதே சில குடும்பங்கள். கருணா குடும்பம் மட்டும்தான், திமுகவை காக்கும், வழி நடத்தும் என்பது தான் மிகப்பெரிய மூட நம்பிக்கை. 2ஆம் நிலையில் இருந்து கொண்டு சம்பாதிக்க கருணா புதல்வர்களை எதிர்க்க மனம் இல்லாமல் இருப்பவர்கள்தான் மூட நம்பிக்கை உள்ளவர். மூட நம்பிக்கை-பகுத்தறிவு இனி மேல் மக்களிடம் வேகாது. காசுக்கு ஒட்டு போட்டாலும் சொன்னத செய்யவில்லை என்றால் அடுத்த முறை ஒட்டு கிடையாது எனபது இந்த காலம். சொல்லாடலில் இனி ஒட்டு வாங்க முடியாது
Rate this:
3 members
0 members
156 members
Share this comment
Cancel
naveen chandru - Chennai,இந்தியா
10-செப்-201312:43:42 IST Report Abuse
naveen chandru மூட நம்பிக்கையை ஒழிக்க சட்டம் கொண்டு வருவது தான் வெட்க கேடான விஷயம். இதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அல்லவா ஒழிக்க வேண்டும்? முதலில் உங்கள் கட்சியிலிருந்து மூட நம்பிக்கையை ஒழியுங்கள். தி.மு.க. பிரமுகர்களே கெடா வெட்டு போன்றவற்றில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும். 'சாதி' - இதுவே ஒரு பெரிய மூட நம்பிக்கை. இதை ஒழிக்காமல் சாதிக்கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். எப்பொழுது ஓட்டுக்காக உங்கள் கொள்கைகளை மறந்தீர்களோ அன்றே நீங்கள் தோற்று விட்டீர்கள்.
Rate this:
5 members
0 members
81 members
Share this comment
Cancel
shankar - tiruchirapalli,இந்தியா
10-செப்-201312:42:38 IST Report Abuse
shankar ஆடு, கோழி பலியிட தடைச்சட்டம் கொண்டு வந்த போது அதை எதிர்த்தது இந்த மஞ்சத்துண்டுதானே
Rate this:
3 members
0 members
157 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்