Tasmac sales slashed | டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு: போலி 'சரக்கு' வரத்து காரணமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு: போலி 'சரக்கு' வரத்து காரணமா?

Updated : செப் 11, 2013 | Added : செப் 09, 2013 | கருத்துகள் (23)
Advertisement
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை சரிவு: போலி 'சரக்கு' வரத்து காரணமா?

போலி சரக்கு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் சரக்குகளால், "டாஸ்மாக்' கடைகளில், மது விற்பனை சரிவடைந்து வருகிறது.

1.60 லட்சம் பெட்டி:தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.60 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன."டாஸ்மாக்' கடைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் மற்றும் பீர் வகைகள், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான கடைகளில், ஒரு பாட்டிலுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.சென்ற ஆகஸ்ட் மாதம், தலா, 12 பாட்டில்கள் கொண்ட, 27 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது. இதன் மதிப்பு, 324 கோடி ரூபாய். அதேசமயம், ஜூலை மாதத்தில், 348 கோடி ரூபாய் மதிப்பிலான, 29 லட்சம் பெட்டிகள் விற்பனையாகி இருந்தன.இதே மாதங்களில், மது வகைகள் விற்பனை, 46 லட்சம் பெட்டிகளில் இருந்து, 45 லட்சம் பெட்டிகளாகக் குறைந்து உள்ளன.சமீப காலமாக, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் மாநிலங்களில், விலை குறைவாக உள்ள மது வகைகள், கள்ளத்தனமாக, "டாஸ்மாக்' பார்களில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


தண்ணீர் கலந்து விற்பனை:

மேலும், டெல்டா பகுதிகளான, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சீர்காழி, மயிலாடுதுறை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில், மது பாட்டில்களில் தண்ணீர் கலந்து விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவையே, "டாஸ்மாக்' விற்பனை சரிவிற்குக் காரணம் என, கூறப்படுகிறது.

இதுகுறித்து, "டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:புதுச்சேரியில், சில்லரை விற்பனையாளர்கள், மதுபான ஆலைகளில் இருந்து, "சரக்கை' மொத்த கொள்முதல் செய்கின்றனர். இதனால், அங்கு விற்பனையாகாமல் உள்ள சரக்கு, தமிழகத்தில் உள்ள, பார்களில், திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது.ஊழியர் முதல் போலீசார் வரை, "கூட்டணி அமைத்து' செயல்படுவதால், உண்மை கண்டறிவது, கடும் சவாலாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANUSHI - chennai,இந்தியா
10-செப்-201315:03:02 IST Report Abuse
MANUSHI நம்ம ஆளுங்க திருந்தி இருக்கலாமோ?
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10-செப்-201312:28:14 IST Report Abuse
kumaresan.m " விற்பனை குறைவது என்ன ??? தமிழ் நாட்டில் சாராயக்கடைகள் மூடப்பட்டு விட்டது என்ற செய்தி தான் குடும்ப பெண்மணிகளுக்கு இன்பத்தை கொடுக்கும் ....அதுசரி விற்பனை குறைவு என்பது தமிழக அரசு கவலை படுவதைவிட நமது நிருபர் ரொம்பவுமே கவலைபடுகிறார் ......இதனால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்து உள்ளது மற்றும் சீரழிந்து கொண்டு இருக்கிறது மற்றும் சீரழிய போகிறது என்று எழுதினால் பாராட்டலாம்
Rate this:
Share this comment
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
10-செப்-201312:21:51 IST Report Abuse
rasaa விஷ சாராயம் விற்பனை செய்யாமல் இருந்தால் சரி. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் லட்சகணக்கான குடிமகன்கள், மகள்கள் மொத்தமாக சாவது உறுதி. அதன்பின்னர்தான் இந்த அரசு மதுவிலக்கை கொண்டுவரும்.
Rate this:
Share this comment
Cancel
Pudiyavan India - chennai,இந்தியா
10-செப்-201311:48:54 IST Report Abuse
Pudiyavan India தேர்தல் வருதுல்லா. அரசுக்கு வர வேண்டியதை கொஞ்சம் கட்சி பக்கம் திருப்பி விட்டிருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
L.Karthikeyan - Gudiyatham,இந்தியா
10-செப்-201310:14:00 IST Report Abuse
L.Karthikeyan அருமை...... இதுயெல்லாம் உண்மை.........ஆனால் யாருக்கு லாபம் ...........குடிமகன்களுக்கா .....இல்லை ...அரசுக்கா .
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-செப்-201308:49:28 IST Report Abuse
villupuram jeevithan தினமும் மழை பெய்து தண்ணீர் கிடைப்பது ஒரு காரணமாக இருக்கும்?
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
10-செப்-201308:48:32 IST Report Abuse
chinnamanibalan டாஸ்மாக் விற்பனை சரிந்தால் மகிழ்ச்சியே.ஆனால் நாட்டில் அருவியாக பெருக்கெடுத்து ஓடும் லஞ்ச லாவண்யத்தில் டாஸ்மாக்கும் சேர்ந்து சிக்கி கொண்டதன் விளைவுதான் இந்த சரிவு என்பதை மறுப்பதற்கில்லை...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201308:38:55 IST Report Abuse
Srinivasan Kannaiya நல்லதுக்கு கூட்டணி உள்ளதோ இல்லையோ.... இதுமாதிரி விவகாரங்களுக்கு கூட்டணி உருவாகிவிடும்... வருந்தத்தக்க விசயம்..
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-செப்-201308:21:30 IST Report Abuse
villupuram jeevithan ஊழியர் முதல் போலீசார் வரை, "கூட்டணி", இந்த கூட்டணி இணைபிரியாத கூட்டணி. யாராலும் பிரிக்க முடியாத கூட்டணி.
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
10-செப்-201308:15:12 IST Report Abuse
JALRA JAYRAMAN .ஊழியர் முதல் போலீசார் வரை, "கூட்டணி அமைத்து' செயல்படுவதால், உண்மை கண்டறிவது, கடும் சவாலாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். இது தான் நம்ம நாட்டு லட்சணம், பொதுவாக எல்லா இடத்திலும் காணப்படும் நிலை எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் எல்லாருக்கும் பங்கு என்றால் உண்மை எப்படி வெளிவரும் பங்கு சரியாக வரவில்லை என்றால் ஒரு வேலை உண்மை வெளி வருமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை