E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
திருப்பூர் முதலிடம்: இதில், பெருமைப்படவா முடியும்? அதிகரிக்கும் தற்கொலை மரணங்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

11 செப்
2013
01:42
பதிவு செய்த நாள்
செப் 09,2013 23:58

கோவை : "தற்கொலை செய்ய முடிவெடுப்பவர், தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வதில்லை. தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில் தள்ளி விடுகிறார். தற்கொலை என்னும் தவறான முடிவு, பல்வேறு சமூகப்பிரச்னைகளை ஏற்படுத்துகிறது' என்கின்றனர், மன நல நிபுணர்கள்.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் அடங்கிய தமிழக மேற்கு மண்டலத்தில், இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான எட்டு மாதத்தில் மட்டும், 1,287 ஆண்கள், 615 பெண்கள், 58 சிறுவர்கள், 94 சிறுமிகள் என, மொத்தம் 2,054 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இவர்களில் 905 பேர், தற்கொலைக்கு தேர்ந்தெடுத்த ஆயுதம், விஷம் குடிப்பது. 598 ஆண்கள், 260 பெண்கள், 22 சிறுவர்கள், 25 சிறுமிகள், விஷத்தில் உயிரை மாய்த்துள்ளனர். நீர்நிலைகளில் குதித்து 146 பேரும், தூக்கிட்டு 813 பேரும், தீக்குளித்து 190 பேரும், தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 815 பேர், 30 வயதுக்கு உட்பட்டவர்கள்; 576 பேர் 31 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்; 384 பேர் 41 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்; 279 பேர் 51 வயதுக்கு மேற்பட்டவர்கள்.பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், திருப்பூர், கோவையில்தான் அதிக எண்ணிக்கையில் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.தொழில் நிமித்தம் பல்வேறு தரப்பினரும் வசிக்கும் திருப்பூர் மாவட்டத்தில், தற்கொலை என்பது அன்றாட நிகழ்வாகி விட்டது. இம்மாவட்டத்தில், கடந்த எட்டு மாதத்தில் மட்டும், காதல் தோல்வியால் எட்டு பேரும், குடும்பத்தகராறில் 196 பேரும், கடன் தொல்லையால் 27 பேரும், வேலையின்மையால் ஏழு பேரும், வயிற்று வலியால் 74 பேரும், கள்ளத்தொடர்பால் நான்கு பேரும், வாழ்க்கையை வெறுத்த நிலையால் 24 பேரும், பிற காரணங்களால் 114 பேரும் என மொத்தம் 454 பேர் தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், காதல் தோல்வியால் 20 பேரும், குடும்பத்தகராறு காரணமாக 46 பேரும், வேலையின்மையால் 40 பேரும், வயிற்று வலியால் 130 பேரும், கள்ளத்தொடர்பால் 16 பேரும், வாழ்க்கையை வெறுத்த நிலையால் 44 பேரும், பிற காரணங்களால் 30 பேரும், என மொத்தம் 336 பேர் உயிரை மாய்த்துள்ளதாக, போலீசார் கூறுகின்றனர்.

தற்கொலை மரணங்களை தடுப்பது குறித்து, மனநல நிபுணர் பொன்னி கூறியதாவது:இருபது வயதுக்குட்பட்டவர்கள் பெரும்பாலும் காதல் விவகாரங்களால் உயிரை விடுகின்றனர். அடுத்து, 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்கள், கணவனின் குடிப்பழக்கம், பொருளாதார நெருக்கடி, மனரீதியான பாதிப்புகள், உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகம். இந்த பருவத்தில் இருக்கும் குழந்தைகளுடன், பெற்றோர் கருத்து பரிமாற்றம் செய்வது அவசியம். பெற்றோர், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.பள்ளிகளில், மதிப்பெண் என்ற எல்லையை வகுப்பது தவறு. பெற்றோர், தங்களது குழந்தைகள் இன்ஜினியர், டாக்டராக வேண்டும் என்றே விரும்புகின்றனர். தங்கள் ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்கின்றனர். இது பெரும் தவறு. குழந்தைகளுக்கு மனக்குழப்பத்தை தராமல் இருந்தாலே தற்கொலை எண்ணத்தை தடுத்து விடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தற்கொலை என்பது முடிவல்ல!



தற்கொலை முடிவை கடைசி நேரத்தில் கைவிட்ட லதா நடராஜன் "அட்வைஸ்':பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, என் சகோதரி, அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டனர். அந்த காலகட்டத்தில் நானும், என் கணவரும் தற்கொலை முடிவெடுத்தோம்.கடைசி நேரத்தில் முடிவை கைவிட்டோம். தற்போது நாங்கள் ஒரு கிராம் தங்கம் தயாரித்து கொடுக்கும் சுயதொழில் செய்து வருகிறோம். இப்போது தான், தற்கொலை முடிவு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை உணர முடிகிறது.இதேபோன்று எனது சகோதரியும் யோசித்திருந்தால், அவளது குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்திருப்பாள். தற்கொலை என்பது ஒரு முடிவல்ல; அந்த தவறை யாரும், ஒருபோதும் மேற்கொள்ள கூடாது.இவ்வாறு லதா நடராஜன் கூறினார்.

40 வினாடிக்கு ஒருவர்!



மனநல நிபுணர் மோனி கூறுகையில், ""உலகில், ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நோய், கொலை ஆகியவற்றால் உயிரிழப்பதைவிட, தற்கொலையால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம்.தற்கொலை என்பது சமூக நாணமாக கருதப்படுகிறது. அதை தடுத்து சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தற்கொலை தடுப்பு தினத்தின் நோக்கம். திருமணம் ஆகாத ஆண்களே அதிகம் தற்கொலை செய்கின்றனர். திருமணம் ஆனவர்களுக்கு பொறுப்பு அதிகம் உள்ளதால் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது மிகவும் குறைவு,'' என்றார்.

வாழ நினைத்தால் வாழலாம்:-இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்- :



வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள, தைரியமில்லாமல் கோழைத்தனமாக எடுக்கும் முடிவு தான் தற்கொலை. பிரச்னைகள் இல்லாதவர்களே உலகில் இல்லை. பிரச்னை உள்ளவர்கள் அனைவரும் தற்கொலை தான் செய்ய வேண்டுமெனில், உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். இது முட்டாள்களின் செயல் என வல்லுனர்கள் விமர்சிக்கின்றனர். பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு, தற்கொலை என இன்னும் பலர் நினைக்கின்றனர். ஆனால் இதனால் அவரை சார்ந்திருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என அறியாமல் செய்து விடுகின்றனர். தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக, செப்., 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

25 சதவீதம்:



உலக அளவில் சராசரியாக, ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேர்; ஆண்டுக்கு 10 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 15-44 வயதுக்கு உட்பட்டோர் தான் அதிகம் தற்கொலை செய்கின்றனர். நோய்களால் ஏற்படும் இறப்பில், 25 சதவீதம் தற்கொலை மூலம் நடக்கிறது.

பல காரணங்கள் :



கல்வியில் சாதிக்க முடியாத காரணத்தால், மாணவர்கள், வரதட்சனை, பாலியல் உள்ளிட்ட கொடுமைகளால் பெண்களும், வறுமை, கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆண்களும்; வேலையில் தொந்தரவு, காதல் தோல்வி போன்ற காரணங்களுக்காக இளைஞர்களும் தற்கொலைக்கு முயல்கின்றனர்.பிரச்னைகளை சந்திக்கும் பக்குவத்தை பெற்று விட்டால், தற்கொலை எண்ணம் தலை தூக்காது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DINAKARAN S - Adama / Nazareth,எத்தியோப்பியா
10-செப்-201312:41:07 IST Report Abuse
DINAKARAN S வயிற்று வலி என்று ஒரு காரணம் கொண்டு தற்கொலை செய்கிறார்களா???? இன்றைய நவீன மருத்துவ சிகிச்சைகளில் குணமடையாத வயிற்று வலி என்ன என்பதை அரசு கண்டுபிடிக்க வேண்டும் ...ஏறக்குறைய 200 உயிர்கள் வயிற்று வலிக்கு இந்த ஆண்டு பலியாகி உள்ளது ஏதோ ஒரு கொடிய நோய் நம்மையும் மீறி வருத்துகிறதா ???? அல்லது உண்மையான காரணம் மறைக்கப்படுகிறதா???
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
10-செப்-201311:44:46 IST Report Abuse
LAX பல காரணங்கள் என்ற வகையில் 'நாட்பட்ட - தீராத நோய்' என்பதும் அடங்குகிறது. தீராத வயிற்றுவலி போன்ற ரணங்களை தாங்க முடியாதவர்களும், வலியைப் பொறுத்துக்கொண்டு வாழ்வதைவிட, தற்கொலை செய்துகொள்வதே மேல் என நினைப்பதுண்டு.. இதற்க்கு என்ன தீர்வு?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
10-செப்-201311:01:24 IST Report Abuse
JAY JAY உலகில் வாழ்ந்து பல பேரை கொன்று கொண்டு இருக்கும் பலரை விட, தானே சாகதுணியும் இவர்கள் தைரியசாலிகள் என்றாலும் தற்கொலை ஒரு தீர்வு அல்ல...குறிப்பாக பெண்கள்.... சாவதற்கே பிறந்தவர்கள் என்ற தொனியில் சின்ன காரணத்திற்கு கூட உயிரை மாயிக்கிரார்கள்...பெண்களாக பிறப்பது அவ்வளவு பெரிய சாபக்கேடா? ...உண்மையிலேயே நாம் நமது நாட்டு பெண்கள் பால் கனிவு கொள்ள வேண்டும்..அவர்களது மனநிலை தேன்கூடு போல மிருதுவானது... சமுதாயம் பெண்களுக்கு அதிகம் கவுன்சலிங் கொடுக்க வேண்டும்...ஆண்களை பொருத்தவரை கடன் தொல்லை , காதல் தோல்வி,போன்றவை.... சாராயத்தை அதிகம் குடித்தாலே , ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணம் தான் தோணும்... அளவுக்கு அதிகம் போனால் அமிர்தமும் விஷம்... தற்கொலை பற்றி கவலை படும் நாம், விரும்பாமலேயே சாகும் , சாலை விபத்துக்களை பற்றி கவலை படுவதில்லை... இந்தியாவில் சாலையில் நடந்து போகிற யாரையும் , யாரும் தூக்கலாம் என்ற நிலைமை தான் உள்ளது... அதற்க்கு காரணமும் சாராயம் தான்.... சாராயம், மற்றும் பெட்ரோல் பயன்பாட்டை குறைப்போம் என்பது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் தற்போதைய இந்தியாவுக்கு கண்டிப்பாக தேவை....
Rate this:
1 members
1 members
77 members
Share this comment
Cancel
L.Karthikeyan - Gudiyatham,இந்தியா
10-செப்-201310:25:48 IST Report Abuse
L.Karthikeyan ரெடிமேட் ஆடை உற்பத்தியில் முதலிடம்......தற்கொலையில் கூட முதலிடமா?.......பாவம் திருப்பூர் மக்கள் ....இதற்கு மக்கள் அனைவருக்கும் கவுன்சிலிங் தேவை.
Rate this:
0 members
1 members
28 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10-செப்-201308:49:38 IST Report Abuse
kumaresan.m " சமுதாயத்தில் உள்ள ஒரு சில ஏற்ற தாழ்வுகள் மற்றும் ஆணும் பெண்ணும் சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலை மாறினால் இது போன்று தன் நம்பிக்கையில்லா தற்கொலைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது .....கிராம நிர்வாகங்கள் / மகளிர் மன்றங்கள் / பள்ளிகளில் தன்னம்பிக்கை ஊட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்
Rate this:
0 members
1 members
2 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201308:48:51 IST Report Abuse
Srinivasan Kannaiya பிரச்சினைகளுக்கு தற்கொலை தீர்வாகாது என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும்...
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10-செப்-201308:46:05 IST Report Abuse
kumaresan.m " மாறிவரும் வாழ்க்கை சூழ் நிலை மற்றும் கலாச்சார சீர்கேட்டின் விளைவுகள் தான் இந்த மரணங்கள் என்று சொன்னால் மிகையல்ல
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201308:44:11 IST Report Abuse
Srinivasan Kannaiya திருப்பூர் நகரத்தில் மட்டும் அரசு இலவசமாக நிறைய கௌன்சிலிங் மையங்கள் திறந்து மக்களுக்கு அறிவுரை சொல்லி, இந்த சம்பவங்களை தடுக்கலாம் இல்லையா...
Rate this:
0 members
1 members
4 members
Share this comment
Cancel
Amutha Sathiyan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-201307:59:10 IST Report Abuse
Amutha Sathiyan ஜெயலலிதா ஆட்சியின் சாதனை....ஒரு நாளைக்கு 10-12 மணிநேரம் கரண்ட் கட் பண்ணினது, அது சார்த்த தொழிலாளியின் நிலை இதுதான்.
Rate this:
2 members
0 members
139 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
10-செப்-201307:13:51 IST Report Abuse
Thangairaja "எளிதில் கடன் கிடைக்காததே, தற்கொலைகள் அதிகம் நிகழக் காரணம்,'' என்கிறார் மோடி. அவரது தோழியின் ஆட்சியில் தான் இந்த அவலம். எளிதில் கடன் கிடைத்து விட்டால் மட்டும் இந்த கோழைத்தனம் முடிவுக்கு வருமா......? நிச்சயம் கிடையாது. அதிக வட்டிக்கு கடன் வாங்குவதும் தன் தகுதிக்கு மீறி ஆடம்பரமான வாழ்க்கை வாழ நினைப்பதும் தான் தற்கொலையும் கொலை, கொள்ளையும் பெருகி வருவதற்கான கரணம். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தாராளமயமாக்கள் கொள்கையால் ஏற்பட்டிருக்கும் நுகர்வு கலாச்சார சீரழிவை இப்போதைக்கு தடுக்க முடியாது.
Rate this:
12 members
0 members
85 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.