அணிலாடி கிராமத்தினர்மறியல் செய்ய முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அணிலாடி கிராமத்தினர்மறியல் செய்ய முடிவு

Added : செப் 10, 2013

செஞ்சி:மொடயூர்-அணிலாடி மற்றும் அணிலாடி-பேரணி சாலை மோசமானதால் பஸ்கள் பஞ்சராகி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கீழ்வயலாமூர், அணிலாடி கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.செஞ்சி தாலுகா அணிலாடி, கீழ்வயலாமூர் கிராம மக்கள் அனைத்து தேவைளுக்கும் செஞ்சி வருகின்றனர். இதே போல் நூற்றுக்கணக்கான மாண வர்கள் கல்லூரி மற்றும் பள்ளிக்கு பேரணி வழியாக, விழுப்புரம், திண்டிவனம் செல்கின்றனர்.செஞ்சிக்கு வரும் மொடையூர் சாலையும், திண்டிவனம் செல்லும் வழியில் நல்லாளம், கொத்த மங்கலம், பேரணி வரையிலான சாலையும் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது.இரண்டு ஆண்டுக ளாக புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. எனவே அணிலாடி, கீழ்வயலாமூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X