E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கலவரத்தை தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை : அகிலேஷ் எச்சரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 செப்
2013
16:26
பதிவு செய்த நாள்
செப் 10,2013 16:19

லக்னோ: மாநிலத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி., மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். முன்னதாக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து அமைச்சரவை சகாக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
உ .பி .யில் முஷாப்பர் நகர் பகுதியில் இரு தரப்பினர் கடுமையாக மோதிக்கொண்டனர், தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. ராணுவம் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஒரு வழியாக அடங்கியிருக்கிறது. மேலும் பலர் தங்கள் வீடுகள் இழந்து , அருகில் உள்ள உறவினர்கள் இல்லத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர், இங்கு முழு அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு முழு உதவி அளிக்கும் என உறுதி அளித்தார் பிரதமர்.


இந்நிலையில் இன்று மதியம் இப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு 2 மணி நேரத்திற்கு தளர்த்தப்பட்டது. மாநில சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக முதல்வர் அகிலேஷ் அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்:


முஷாப்பர் நகரில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக, இரு பிரிவினர் இடையே பிளவு ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். இதில் தயவு தாட்சண்யம் காட்ட மாட்டோம். நாங்கள் எடுத்துள்ள முயற்சி காரணமாக தற்போது இன ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளோம். காரணம் இதற்கு பின்னர் வன்முறை எதுவும் பரவாமல் கட்டுப்படுத்தியிருக்கிறோம். அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் முழு அளவில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். மேலும் கலவரத்தை அடக்க அதிகாரிகள் முழு சுதந்திரத்துடன் செயல்படுவர். அரசியல் தலையீடு எதுவும் இல்லை. அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் வாழ வேண்டும். இவ்வாறு அகிலேஷ் தெரிவித்தார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam - London,யுனைடெட் கிங்டம்
11-செப்-201310:37:20 IST Report Abuse
Sam ஜாட் இனத்தை சேந்த பெண்னை முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஒருவன் ஈவ் டீசிங் செய்ததால் அப்பெண்ணின் சகோதரனும் மச்சானும் அவனை கொலை செய்துள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த இருவரையும் இறந்தவனின் சொந்தகாரர்கள் கொன்று பலிதீர்துள்ளனர். சமாஜ்வாடி அரசு முஸ்லிம் வோட்டு வங்கியை கருத்தில் கொண்டு கடந்த இரு வருடங்கள்ளாக இந்து எதிர்ப்பு கொள்கைகளை ( போலி மதசார்பின்மை ) கொண்டுள்ளது. கொலை செய்தவர்களை கைது செய்யாமல் மெத்தனமாக இருந்தது தான் இந்த கலவரத்திற்கு காரணம். மதக்கலவரம் காட்டு தீயாய் வெடிக்க இருந்த வேளையில் காங்கிரஸ், பஹுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் வெள்ளி கிழமை நமாஸ் கூட்டத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளனர். ஜாட் இனத்தவர்கள் அவர்கள் இனத்தவரின் மகாபஞ்சாயத்தை கூட்டி கொலையாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடுமையாக பேசியுள்ளனர். இதில் பி.ஜே.பி., ராஷ்ட்ரிய லோக் தள் தலைவர்கள், ஒரு முன்னால் காங்கிரஸ் தலைவர் பேசியுள்ளார். பஞ்சாயத் முடிந்து திரும்பிய சிலரை துப்பாக்கி, கத்தி, கூர்மையான ஆயுதங்களை கொண்டு திட்டமிட்ட முறையில் முஸ்லிம் இனத்தவர்கள் தாக்கி கொன்றுள்ளனர். அடுத்த நாள் முழு மதகலவரம் வெடித்துள்ளது. இரு சாராரும் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் சிறுபான்மையாக வசிப்பவர்களை கொன்று சூறையாடியுள்ளனர். வோட்டு வங்கி அரசியல் செய்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்பவர்களை தேர்தலில் புறக்கணித்தால் ஒழிய இந்த கொடிய சம்பவங்களை தடுக்கமுடியாது. மக்களே விழித்து கொள்ளுங்கள்.
Rate this:
0 members
0 members
3 members
Cancel
இளங்கோ - chennai,இந்தியா
11-செப்-201309:37:01 IST Report Abuse
இளங்கோ பால் வடியும் புன்னகை ததும்பும் முகம் உங்களுக்கு. தந்தை வந்து உதவி செய்யும் அளவுக்கு அசட்டையாய் இருக்கலாமா? நீங்கள் உண்மையை உணரும் நேரம் வந்து விட்டது.தந்தையின் கொள்கை வழி செல்லாமல் சுயமாக சிந்தித்து நல்லாட்சிக்கு வழி செய்க.
Rate this:
0 members
0 members
2 members
Cancel
JP - Chennai  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201307:26:02 IST Report Abuse
JP இத்தன நாளா எங்கடா கண்ணு போன?
Rate this:
1 members
0 members
6 members
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
10-செப்-201317:45:04 IST Report Abuse
kumaresan.m " அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு உங்களின் மீதும் உங்கள் ஆட்சியில் உள்ள அமைச்சர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ....3 கொலைகள் நடந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தது யார் தவறு ??? இது போன்று ஒரு அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள்
Rate this:
9 members
0 members
36 members
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
10-செப்-201317:40:48 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இந்த பிரச்சினையில் குளிர்காய மோடி பக்தர்கள் முயல்வார்கள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை...தேர்தல் வரும் நேரத்தில் PRE PLANNED கலவரம் உண்டாக்குவதென்பது இவர்களது வாடிக்கை.
Rate this:
87 members
1 members
102 members
Venkat Iyer - Mumbai,இந்தியா
11-செப்-201300:08:54 IST Report Abuse
Venkat Iyerநல்ல கண்டுபிடிப்பு ...இதுபோல யோசித்தால் குஜராத் கலவரத்துக்கு காரணமே மோதிக்கு எதிரான காங்கிரஸின் PRE PLANNED ஐடியா தான்...சாவு வீட்டில் கூட மதரீதியாக யோசிப்பதை விடுங்கள் ..........
Rate this:
21 members
0 members
34 members
P.GOWRI - Chennai,இந்தியா
11-செப்-201310:19:05 IST Report Abuse
P.GOWRIவெரி குட். நீங்க சொல்வது சரிதான்...
Rate this:
1 members
0 members
2 members
balajiu - Chennai,இந்தியா
11-செப்-201310:56:49 IST Report Abuse
balajiuசுலைமான் அவர்களே.. காஷ்மீரில் ஹிந்து பண்டிட்களை காஷ்மீரை விட்டு உங்களுடைய பக்தர்கள் விரட்டிய கதை உங்களுக்கு தெரியுமா.. இன்னும் உங்களுடைய பக்தர்களை எவ்வளவு படு பாதக தேச விரோத செயல்களையும் செய்தாலும் நாட்டை விட்டு துரத்தவில்லை.....
Rate this:
1 members
0 members
3 members
Cancel
Ramu - Dubai  ( Posted via: Dinamalar Android App )
10-செப்-201317:01:47 IST Report Abuse
Ramu இவனுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு சங்கு
Rate this:
12 members
0 members
29 members
Cancel
P.GOWRI - Chennai,இந்தியா
10-செப்-201316:53:28 IST Report Abuse
P.GOWRI எப்போ. 31 பேர் பலி ஆகும் வரைக்கும் என்ன பண்ணினிங்க ? இன்னும் எத்தனை பலி ஆன உடன் நடவடிக்கை எடுப்பீங்க ? பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பு அட்ட பேச்சு .
Rate this:
64 members
0 members
35 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.