துணி விலையில் இல்லை மாற்றம் : நீடிக்கிறது ஜவுளி தொழிலில் தேக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துணி விலையில் இல்லை மாற்றம் : நீடிக்கிறது ஜவுளி தொழிலில் தேக்கம்

Added : செப் 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சோமனூர்:துணி விலையில் எந்த மாற்றமும் இல்லாததால், ஜவுளித்தொழிலில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது.கடந்த சில மாதங்களாக பருத்தி மற்றும் பஞ்சு விலை உயர்வால் நூல் ரகங்கள் கடுமையாக விலை உயர்ந்தன. அதனால், உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்கள் அசலுக்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மழை பெய்வதாலும், ஏற்றுமதி ரகங்களுக்கு ஆர்டர் இல்லாததாலும் துணி ரகங்கள் சோமனூரில் தேங்கியுள்ளன. துணி விற்பனையில் தேக்க நிலை மாறும் வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்திக்குறைப்பை நடைமுறைப்படுத்தினர். இதனால், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் பாதிக்கப்பட்டனர். 15 நாட்களாக உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டது. இருந்தபோதிலும் துணி விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு சில சிறு மில் அதிபர்கள் நூல் ரகங்களை மாற்றி ஓட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். வட மாநிலங்களில் முழு வீச்சில் டையிங், பிராசசிங் உள்ளிட்ட வேலைகள் தொடங்கினால் தான் துணி ரகங்களின் தேவை அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்தால் மட்டுமே துணி ரகங்களுக்கு கிராக்கி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இதே மந்த நிலை நீடிக்கும் என்பதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் மட்டுமே, மில்கள், விசைத்தறி கூடங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை