பெண் அதிகாரியிடம்7 பவுன் செயின் பறிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் அதிகாரியிடம்7 பவுன் செயின் பறிப்பு

Added : செப் 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை: ரோட்டில் நடந்து சென்ற பெண் அதிகாரியிடம் தாலியுடன் கூடிய 7 பவுன் தங்கச் செயினை பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடுகின்றனர். கோவை, பீளமேடு, அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் ஜெயகோபிநாத்தின் மனைவி ஜோதி,50. இவர், பல்லடம் பகுதி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். தனது வீட்டில் இருந்து பஸ் ஸ்டாப்புக்கு தினமும் நடந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல, மெயின் ரோட்டை நோக்கி நடந்து சென்றார். அப்போது, எதிரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவரில் ஒருவன்,ஜோதியின் கழுத்தில் இருந்த தாலியுடன் கூடிய 7பவுன் தங்கச் செயினை பறித்து தப்பினர். அதிர்ச்சி அடைந்த ஜோதி, சத்தம் போட்டார். அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு வந்து விசாரித்தனர். பீளமேடு போலீசார் வழிப்பறி ஆசாமிகளை தேடுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை