"மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு' - இளம்தாமரை மாநாட்டின் தாரக மந்திரம் : திருச்சியில் வெங்கைய்யா நாயுடு பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு' - இளம்தாமரை மாநாட்டின் தாரக மந்திரம் : திருச்சியில் வெங்கைய்யா நாயுடு பேட்டி

Added : செப் 10, 2013 | கருத்துகள் (4)
Advertisement
"மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு' - இளம்தாமரை மாநாட்டின் தாரக மந்திரம் : திருச்சியில் வெங்கைய்யா நாயுடு பேட்டி

திருச்சி: ""லோக்சபா தேர்தலுக்கான தலைவரை பிரச்னையின்றி விரைவில் முடிவு செய்வோம்,'' என, பா.ஜ., கட்சியின் தேசிய துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு பேசினார்.

இதுகுறித்து அவர் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்துக்காக, ஆறு திட்டங்களை, பா.ஜ., வகுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள, 100 முக்கிய நகரங்களில் பிரச்சார கூட்டம், 543 தொகுதிகளிலும் பொதுக்கூட்டம், கட்சியல்லாது பா.ஜ.,வை ஆதரிப்பவர்களை ஒருங்கிணைத்தல், அறிவுசார் மக்களுடன் கலந்தாய்வு, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுடன் ஆலோசனை, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் ஆகிய, ஆறு திட்டங்களை, பா.ஜ., செயல்படுத்தி வருகிறது. தவிர, 10,000 தன்னார்வலர்கள், 10 லட்சம் ஐ.டி., துறையினரிடம் இணையதளம் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தலையொட்டி பா.ஜ.,வில், 20 கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். நாட்டின் வளர்ச்சி, நல்ல நிர்வாகம் ஆகியவையே பா.ஜ.,வின் குறிக்கோள். கடந்த கால, பா.ஜ., ஆட்சியின் சாதனைகளையும், காங்கிரஸ் அரசின் சாதனைகளையும் பட்டியலிட்டு, மக்களிடம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மோடியின் கடந்த காலம் என்று அடிக்கடி காங்கிரஸ் பேசி வருகிறது.
ஆனால், கடந்த காலம் என்று பார்த்தால், காங்கிரஸ் நிறைய கேள்விகளுக்கு பதில் செல்ல வேண்டி வரும். சுப்பிரமணியசாமி, பா.ஜ.,வில் சேர்ந்து விட்டால், கட்சிக்கு கட்டுப்பாட்டுத்தான் அவர் நடக்கவேண்டும். இலங்கையை எதிரி நாடாக நாங்கள் நினைக்கவில்லை. இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும், தமிழர்களின் நலனுக்கான, 13வது சட்டப்பிரிவை அமல்படுத்த வேண்டும், மறுவாழ்வு மற்றும் தமிழர்களை அவரவர் இடங்களில் குடியமர்த்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தான், பா.ஜ.,வின் நிலைப்பாடு. லோக்சபா தேர்தலுக்கான தலைவரை (பிரதம வேட்பாளரை) பிரச்னை இல்லாமல் விரைவில் முடிவு செய்வோம். தமிழகத்தில் தற்போது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.திருச்சியில் நடக்கும் இளம்தாமரை மாநாட்டின் தாரக மந்திரமே, "மலைக்கோட்டையிலிருந்து, செங்கோட்டைக்கு' என்பது தான். லோக்சபா தேர்தலுக்கு பின், தமிழகத்தில் அதிசயங்கள் நிகழும். காத்திருந்து பாருங்கள். மக்களின் மனநிலை, பா.ஜ., ஜனதாவை பக்கம் திரும்பியுள்ளது. அவர்கள் காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் சந்தர்ப்பத்துக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் லோக்சபா தேர்தலின் மூலம், பா.ஜ., ஆட்சிக்கு வருவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.J.P. MADHAVAN - chennai ,இந்தியா
11-செப்-201307:36:00 IST Report Abuse
B.J.P. MADHAVAN இளந்தாமரை மாநாடு சிறப்புற எனது ஆலோசனைகள்: மாநாட்டிற்கான நுழைவு படிவங்களை மாநிலத்தலைவர் , மாநில நிர்வாகிகள் மூலம் மாவட்டத்தளைவரளுக்கு அனுப்ப வேண்டும். மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மூலம் மண்டல தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும். மண்டல தலைவர்கள் மண்டல நிர்வாகிகள் மூலம் கிளைத் தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும். கிளைத் தலைவர்கள் கிளை நிர்வாகிகள் மூலம் பா.ஜ.க. வின் தொண்டர்களிடம் கொடுக்க வேண்டும். பா.ஜ.க. தொண்டர்கள் அருகில் உள்ள பொது மக்களிடம் சேர்த்தால் ஆர்வ முள்ள பொதுமக்களும் இதில் பங்கேற்று மாநாட்டை சிறக்க செய்வார்கள் என்பது எனது கருத்தாகும். ஏனென்றால் மாநாடு நடக்க 15 நாட்கள் இருக்கும் நிலையில் இன்னும் பா.ஜ.க. தொண்டர்களிடமே அந்த அனுமதி படிவம் வந்து சேரவில்லை. சென்னை 197 வது டிவிஷனில் உள்ள மாநாட்டில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் யாரிடம் அந்த படிவத்தை பெறுவார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
11-செப்-201306:51:00 IST Report Abuse
Thangairaja 'பஞ்ச்' எல்லாம் 'இந்தியா ஒளிர்கிறது' மாதிரி பிரமாதமாகத்தான் இருக்கிறது. பாவம் வெங்கையா நாயுடுவை பார்க்கும் போது தான் பரிதாபமாக இருக்கிறது. தேசிய அரசியல்ல இருக்கற திறமையான நல்ல மனுஷன், இப்படி மாநில முதல்வரை தூக்கி பிடித்து சுற்ற வேண்டி இருக்கிறதே. .........
Rate this:
Share this comment
Cancel
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
11-செப்-201305:27:17 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar இலங்கை விசயத்தில் கிட்டத்தட்ட காங்கிரஸ் நிலைதானா..? முடிந்தது தமிழக தமிழர் கனவு...
Rate this:
Share this comment
Cancel
இளங்கோ - chennai,இந்தியா
11-செப்-201302:30:49 IST Report Abuse
இளங்கோ காங்கிரஸ் மேல் அதிருப்தி அடைந்திருக்கும் மக்களின் மனநிலையை பிஜேபி - க்கு ஆதரவாக மாற்ற நீங்கள் அதிகம் உழைக்க வேண்டும். ஆர்ப்பாட்ட அரசியலை தவிர்த்து நிதானமான போக்கை கடைபிடித்தல் அவசியம்.நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்புக்கு முன்னுரிமை,,ஊழலற்ற நிர்வாகம் தருவீர்கள் என்ற நம்பிக்கையை கொடுத்தால் வெற்றி கிடைக்கும்.இந்த வாய்ப்பை பயன் படுத்த தவறினால் கெடுதல் உங்கள் கட்சிக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கே என்பதை நினைவில் கொள்க. ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை