2 ஆண்டிற்கு முன் காணாமல் போன மாணவி மண்டை ஓடு கண்டெடுப்பு : சூப்பர் இம்போசிங் ஆய்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 ஆண்டிற்கு முன் காணாமல் போன மாணவி மண்டை ஓடு கண்டெடுப்பு : சூப்பர் இம்போசிங் ஆய்வு

Added : செப் 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
2 ஆண்டிற்கு முன் காணாமல் போன மாணவி மண்டை ஓடு கண்டெடுப்பு : சூப்பர் இம்போசிங் ஆய்வு

குஜிலியம்பாறை: திண்டுக்கல், அழகாபுரியில் இரண்டு ஆண்டு களுக்கு முன் காணாமல் போன மாணவியின் மண்டை ஓடு, எலும்புக்கூட்டை குடகனாறு அணைப்பகுதியில் போலீசார் நேற்று கைப்பற்றினர். அழகாபுரி குடகனாறு அணை பகுதியில் ஆடு மேய்த்தவர்கள், பெண்ணின் எலும்புக்கூடு, சுடிதாருடன் ஒதுங்கி கிடப்பதாக, கூம்பூர் போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார், அரசு டாக்டர் விமலா உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மண்டை ஓட்டை "சூப்பர் இம்போசிங்' ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ராஜ முரளி கூறுகையில், "" இரண்டு ஆண்டுகளுக்கு முன் புது அழகாபுரியை சேர்ந்த நாச்சிமுத்து மகள் நித்யா,16, காணாமல் போனதாக, புகார் உள்ளது. வேடசந்தூர் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் போது, இவர் காணாமல் போயுள்ளார். இவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை