E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2013,23:41 IST
கருத்துகள் (35)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில தண்டனை அறிவிப்பு 13-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. "டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, நான்கு பேர் மீதான குற்றங்களும், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் குற்றவாளிகள்' என, டில்லி விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, மக்கள் மத்தியில் ஆவேசத்தை உருவாக்கிய இந்த வழக்கில், ஒன்பது மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை, பலரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 13-ம்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌ தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அனேகமாக, மரண தண்டனை வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தாண்டு டிசம்பர், 16ல், டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவியும், அவரது ஆண் நண்பரும், இரவு நேரத்தில், ஒரு பஸ்சில் ஏறினர். அந்த பஸ்சில் இருந்த, ஆறு பேர் கும்பல், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரையும், அவரின் ஆண் நண்பரையும் கடுமையாக தாக்கியது. பின், பஸ்சிலிருந்து இருவரையும் தூக்கி வீசியது.டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர நிகழ்வு, டில்லியில் பெரும், கொந்தளிப்பை ஏற்படுத்தியது.பெண்கள், மாணவர்கள் என, ஏராளமானோர் திரண்டு வந்து, டில்லி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். "குற்றவாளிகளுக்கு, கடும் தண்டனை அளிக்க வேண்டும்' என, போராட்டங்கள் நடத்தினர்.இந்த கொடூர பலாத்கார சம்பவம் தொடர்பாக, பஸ் டிரைவர், ராம்சிங், அவனின் நண்பர்கள், வினய் சர்மா,பவன் குப்தா, அக்ஷய் சிங், முகேஷ் மற்றும் மைனர் சிறுவன் ஒருவன் என, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், மைனர் சிறுவன் மீதான வழக்கு, டில்லி சிறார் நீதி வாரியத்தில் நடந்து, அவனுக்கு, சமீபத்தில், மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற ஐந்து பேரும், திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், பஸ் டிரைவர் ராம்சிங், கடந்த மார்ச்சில், சிறையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.அதனால், மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, டில்லி விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த, 3ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில், விரைவு கோர்ட்டின், கூடுதல் செசன்ஸ் நீதிபதி யோகேஷ் கன்னா, 237 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை, நேற்று வெளியிட்டார்.

அப்போது, அவர் கூறியதாவது:
மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட, வினய் சர்மா,, பவன் குப்தா, அக்ஷய் சிங் மற்றும் முகேஷ் மீது, கொலை செய்தல்,

கூட்டமாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் தடயங்களை அழித்தல் போன்ற பிரிவுகளின் கீழ், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், நான்கு பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்படுகிறது. மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் சிகிச்சையின் போது, நோய் தொற்று ஏற்பட்டது போன்றவையே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான, மருத்துவ மாணவியின் மரணத்திற்கு காரணம் என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், முன்வைக்கப்பட்டவாதத்தை ஏற்க முடியாது; அதை தள்ளுபடி செய்கிறேன். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும். இவ்வாறு, நீதிபதி தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை, ஒன்பது மாதங்களாக நடைபெற்றது. விசாரணையின் போது, 100 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், 18 பேர் சாட்சியம் அளித்தனர். இருப்பினும், பலாத்காரத்தில் பலியான, மருத்துவ மாணவியோடு, பஸ்சில் சென்றவரும், ஆறு பேர் கும்பலால் பலமாக தாக்கப்பட்டவருமான, மாணவியின் ஆண் நண்பர், சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்பதால், அவரது சாட்சியம், வழக்கில் முக்கியமானதாக கருதப்பட்டது. அது மட்டுமின்றி, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது, உயிருக்கு போராடும் நிலையில், மாணவி அளித்த மரண வாக்குமூலமும், போலீசாருக்கு வழக்கை விரைவாக முடிக்க, பெரும் உதவியாக இருந்தது.நாடு முழுவதும் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும், பரபரப்பாக பேசப்பட்ட, இந்த பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை, ஒன்பது மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்று தீர்ப்பு வெளியாக இருந்ததால், டில்லி சாகேத் கோர்ட்டில், தேசிய ஊடகங்கள் மட்டுமல்லாது, சர்வதேச ஊடகங்களும், அணிவகுத்து நின்றன. கோர்ட் முழுவதும், பெரிய அளவில், கூட்டம் காணப்பட்டது. நேற்றே தண்டனை அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இரு தரப்பு வாதங்கள்நடந்தன. இதையடுத்து மதியம் 2.15மணியளவில், தண்டனை விவரம், வரும் வெள்ளிக்கிழமை பிற்‌பகல் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

Advertisement

நான்கு பேருக்கும் மரண தண்டனை- மாணவியின் பெற்றோர் கோரிக்கை: "எங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கும், மரண தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் தூக்கிலிடப்படவில்லை எனில், அது சரியானநீதியாகாது' என, மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது:எங்கள் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்பது மாதங்களாக, நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் மகளிடம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட, நான்கு பேரும் தூக்கிலிடப்பட வேண்டும்.இந்த வழக்கைப் பற்றியே, கடந்த சில மாதங்களாக, நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம். சிறார் நீதி வாரியத்தில், மைனர் சிறுவனுக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது, எங்களை நிலை குலையச் செய்தது.தற்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கும், மரண தண்டனையை விட, குறைவான தண்டனை வழங்குவதை, நாங்கள் விரும்பவில்லை. இந்த வழக்கில், வழங்கப்படும் தீர்ப்பு, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். இதுபோன்ற கொடூர செயல்களில், இனி யாரும் ஈடுபடக்கூடாது.இவ்வாறு, மாணவியின் பெற்றோர் கூறினர்.

சுஷ்மா சுவராஜ்பா.ஜ., லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர்: இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தால் தான், இதைப் பார்த்து, இது போன்று குற்றம் செய்ய நினைப்பவர்களும் அஞ்சுவர். நாட்டிற்கே இந்த தண்டனை முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

-நமது டில்லி நிருபர்-




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appu - madurai,இந்தியா
11-செப்-201314:15:46 IST Report Abuse
appu மூட்டப்பூச்சிய நசுக்குற மாதிரி இவனுகள நசுக்கனும்...
Rate this:
7 members
0 members
20 members
Share this comment
Cancel
Sardhar Kathar - Riyadh,சவுதி அரேபியா
11-செப்-201314:04:42 IST Report Abuse
Sardhar Kathar கொடிய சிறுவனுக்கு ஆயுள் தண்டனையும் மிருகத்தனமான இளைஞர்களுக்கு மரண தண்டனையும் விதிப்பது தான் சரியான நீதியாக இருக்கும். அப்பொழுதுதான் இனி எவனும் இதுமாதிரியான கொலைபாதக செயல்களைச் செய்ய துணியமாட்டார்கள். இச்சம்பவத்திற்குப் பிறகும்கூட இதே மாதிரியான குற்றங்கள் இன்னும் நாடு முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன, காரணம் இக்குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இதுவரை விதிக்காததே
Rate this:
3 members
0 members
28 members
Share this comment
Cancel
v j antony - coimbatore,இந்தியா
11-செப்-201313:43:30 IST Report Abuse
v j antony இவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே மனித உயிர்களை பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை .இவர்கள் திருந்தி வாழ்ந்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் வாழ் நாள் முழுவதும் ஆனாதை விடுதியில் சேவை செய்ய வேண்டும்
Rate this:
200 members
4 members
13 members
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
11-செப்-201313:17:25 IST Report Abuse
Rangarajan Pg உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை தான் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அந்த பெண்ணின் பெற்றோரை நினைத்து பாருங்கள். அவர்கள் தம் மகளை எவ்வளவு ஆசையோடு வளர்த்திருப்பார்கள். எவ்வளவு கனவுகளோடு இருந்திருப்பார்கள். படிக்க வைத்திருப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அந்த பெண் ஒரு குழந்தை தானே? அப்படிப்பட்ட ஒரு பெண்ணை சிதைத்த இந்த கொடூர கயவர்களை தண்டிப்பதற்கு இந்த ஒன்பது மாதங்கள் எடுத்து கொண்டதே அதிகம். உறுதியான சாட்சிகள் உள்ளன. இறந்து போன பெண்ணின் மரண வாக்குமூலம் உள்ளது. உலகமே அறிந்த ஒரு விஷயம் தான் இந்த குற்றம். இதற்க்கு மேல் என்ன வேண்டும்? செய்த தவறை ஏற்று கொள்வது போல இதில் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். பிறகு எதற்கு ஒன்பது மாதங்கள் விசாரணை? இதுவே அதிகம். அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க பட வேண்டும். மேல் முறையீடு, கருணை மனு போன்ற எதையும் அனுமதிக்க கூடாது. முடிந்தால் சிறுவன் என்று கூறி கொண்டு சிறார் சிறையில் ஒளிந்திருக்கும் அந்த ஓநாயையும் பிடித்து கொல்ல வேண்டும். பெருவாரியான மக்கள் மற்றும் முக்கியமாக அந்த பெண்ணின் பெற்றோர்களின் மனநிலையை புரிந்து கொண்டு இந்த கயவர்கள் மாற்று வழியில் தப்பிபதற்க்கான வழி இல்லாமல் மரண தண்டனை வழங்கி உடனே நிறைவேற்றுமாறு உத்திரவிட வேண்டும்.
Rate this:
2 members
1 members
145 members
Share this comment
Cancel
sellamuthu kandasamy - musiri, tiruchi,இந்தியா
11-செப்-201312:02:51 IST Report Abuse
sellamuthu kandasamy நிறைய பெண்கள் அரசியல்வaதிகளால் கற்பழிக்கப்பட்டுள்ளனர் ஆனால் வெளியே தெரிவதில்லை,தமிழக ஆசிரியர்கள் ஊழல் பெயரில் kalvi அதிகாரிகள்,அமைச்சர்கள்,முதல்வர் ஆகியோரால் கற்பழிப்பை விட மோசமான கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் ,யார் கேட்பது?
Rate this:
2 members
1 members
17 members
Share this comment
Cancel
Indian - Chennai,இந்தியா
11-செப்-201312:00:38 IST Report Abuse
Indian நடு ரோட்டில் வைத்து தூக்கு தண்டனையை நிறைவேற்றினால் தான் மற்றவர்களுக்கும் பயம் வரும்.
Rate this:
4 members
3 members
23 members
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-செப்-201312:00:38 IST Report Abuse
Malick Raja வக்கீல் வைத்து வாதாடவே விட்டிருக்க கூடாது... காரணம் ஒப்புதல் வாக்குமூலங்கள்... சாட்சி நேரடியாக அனுபவித்து...சொன்னது.. எனவே மனசாட்சி இல்லாமல் குற்றவாளிக்கு ஆதரவாக வக்கீல் வாதடியதும் கண்டனதிற்க்குரியதே. ஆக வக்கீல்கள் பணத்திற்காக ஆட்டை கழுதையாக்க கூடாது...மனசாட்சியுடன், தனக்கோ,தன் குடும்ப அங்கதினர்களுக்கோ நிகழ்ந்தால் எப்படி பாதிப்பு இருக்குமோ அதுபோல் நடக்கவேண்டும்.. மாறாக பணத்திற்காக வாதாடி குற்றவாளிகளை விடுவிப்பதினால்தான் சில வக்கீல்கள் சிக்க்களில் மாட்டிக்கொள்ளும்போது காவல்துறை கவனிப்பதில்லை...
Rate this:
3 members
0 members
31 members
Share this comment
Cancel
ThangappandiRaji - viruthunagar,இந்தியா
11-செப்-201310:59:37 IST Report Abuse
ThangappandiRaji அந்த பெண் இறந்த தேதி அன்றைய தினத்திலே தூக்கில் இடவேண்டும்
Rate this:
4 members
0 members
16 members
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
11-செப்-201310:08:32 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar மரண தண்டனை தான் இக் குற்றவாளிகள் பெறுவார் என்பதில் ஐயமில்லை..,ஆயுள் தண்டனையும் ஒருவகையில் நிரந்தர மரண தண்டனைதான்., உச்ச நீதி மன்றம் உணர்த்தி இருக்கிறது. குற்றதன்மை நிலைமை மிக கொடூரமானது..,பயங்கரமானது..,உடனடி மரணதண்டனை தான் கிடைக்க வேண்டும் என்பது தான் சரியானது
Rate this:
3 members
0 members
16 members
Share this comment
Cancel
Amjath - Dammam,சவுதி அரேபியா
11-செப்-201309:55:57 IST Report Abuse
Amjath விரைவான தீர்ப்பாக இதனை கருதமுடியாது..., 9 மாதங்கள் எதற்கு இந்த தீர்ப்பு வழங்குவதற்கு.? இதே போல் பல வழக்குகள் ஐம்பது வருடங்களுக்கு மேலாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன குறிப்பாக முஸ்லிம்கள் சம்பந்தபட்ட வழக்குகள் குறிப்பாக பாபர் மசூதி வழக்கு வக்பு வாரிய சொத்துகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் .., முஸ்லிம்களுக்கு சாதகமான தெளிவுகள் ஏராளமாக இருந்த பின்பும் வழக்குகள் தாமதிக்க படுகின்றன..
Rate this:
36 members
0 members
23 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.