E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அதிகாரிகள் பிடியிலிருந்து எங்களை விடுவிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., வேண்டுகோள்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

12 செப்
2013
01:22
பதிவு செய்த நாள்
செப் 10,2013 23:44

புதுடில்லி:"அதிகாரிகளின் பிடியிலிருந்து, எங்களை விடுவித்து, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

சி.பி.ஐ., அமைப்புக்கு அதிக அதிகாரம் அளிப்பது தொடர்பான வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி, ஆர்.எம்.லோத்தா தலைமையிலான, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், அம்ரேந்திரா சரண் கூறியதாவது: ஒவ்வொரு வழக்கின் விசாரணையின் போதும், ஒவ்வொரு கட்டத்திலும், எங்களுக்கு பல்வேறு தடைகளும், இடையூறுகளும் ஏற்படுகின்றன. இவை அனைத்தும், அதிகாரிகளால் ஏற்படுகின்றன. நாங்கள், என்ன கோரிக்கை வைத்தாலும், அதை, அவர்கள் ஏற்பதில்லை.இதற்கு மாறாக, சம்பந்தபட்ட துறைகளில் உள்ள தலைமை எழுத்தர்கள் மூலமாகவே, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. எனவே, அதிகாரிகளின் பிடியிலிருந்து, எங்களை விடுவித்து, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதையடுத்து, "இந்த பிரச்னையை தீர்க்க, அரசு தரப்பில், ஏதாவது முடிவெடுக்கப்பட்டுள்ளதா' என, நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த, அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, ""இது குறித்த, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,'' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
11-செப்-201310:42:09 IST Report Abuse
mirudan தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம், எம்.எம்.எல் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை போன்றவற்றிக்கு உடனடியாக நடவடிக்கை திருட்டு காங்கிரஸ் கட்சி சீ.ஐ.இக்கு அதிகாரம் கொடுக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை ? மாயாவதி / முலாயாம் / தானை தலைவர் போன்றவர்களை மிரட்டி / உருட்டி வைக்க சி.ஐ யை தான் காங்கிரஸ் பயன் படுத்தி கொண்டு இருக்கு ? அது போய் விட்டால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள் அல்லவா ?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201310:20:37 IST Report Abuse
kumaresan.m " நீங்க( சிபிஐ ) தைரியசாலிகள். துணிந்து வெளியில் சொல்லி விட்டீர்கள். நாங்கள் ( நீதிமன்றம் ) மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வெளியில் துப்பவும் முடியாமல் சகித்து கொண்டு இருக்கிறோம்
Rate this:
0 members
0 members
48 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201310:16:11 IST Report Abuse
kumaresan.m " வாகன்வதி அவர்கள் அரசியல்வாதிகளின் ஏஜண்டுகள் போன்று செயல்படுகிறார் ....நீதிபதி கேட்கும் கேள்விக்கு பள்ளி பிள்ளைகள் போன்று பதில் கூறுகிறார் ??? இந்த பதில் அவரின் பதவிக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொன்னால் மிகையல்ல
Rate this:
0 members
0 members
18 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201310:13:21 IST Report Abuse
kumaresan.m " அரசியல்வாதிகளின் வழிகாட்டுதலின் பெயரில்தான் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். ஆனால் இவர்களை தடுக்கும் அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டால் மிக்க நன்றாக இருக்குமே ???? சிபிஐ யை கண்டு அதிகாரிகள் பயந்த காலம் போய் அதிகாரிகளையும் / அரசியல்வாதிகளையும் கண்டு சிபிஐ பயம்படும் காலம் வந்து விட்டது
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
11-செப்-201309:13:41 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN பெரும்பாலான அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தயவில் முன்னேற்றங்களைப் பெறுவதால் அரசியல்வாதிகளின் கைப்பாவைகள் ஆகிவிடுகின்றனர். அரசியல்வாதிகளும் சரி இல்லை, அதிகாரிகளும் சரி இல்லை. அரசியல்வாதிகளில் நேர்மையானவர்கள் குறைவு என்றால் அதிகாரிகளிடம் நேர்மையோடு திறமையும் குறைவு. அதனால் அதிகாரிகளும் அரசியல்வாதிகளின் தயவில் தான் வாழவேண்டியதுள்ளது. சிபிஐயோ அரசியல்வாதிகளின் கைப் பாவைகளாக உள்ள அதிகாரிகளின் தயவை நாடி நிற்கவேண்டிய நிலை. இவை அனைத்தும் முன்பே அனைவருக்கும் தெரிந்த செய்திதான். அரசியல்வாதிகளிடமிருந்து அதிகாரிகளை பிரிக்க ஒரு தனி தலைமை வேண்டும். அது தவிர அதிகாரிகளை கவனிக்க சிபிஐ போன்ற தனி அமைப்புகள் தேவை. தற்போதைக்கு உச்ச நீதி மன்றம் தவிர வேறு யாரும் இதை செய்ய முடியாது. அதிகாரிகளிடமிருந்து கிடைக்க வேண்டிய தகவல்களை அறிய அரசியல் கலப்பு இல்லாத தனி துறை வேண்டும். அப்போது அரசியல்வாதிகளின் கொட்டம் அடங்குவதோடு சிபிஐ க்கு தேவையான தகவல்கள் சரியாக கிடைப்பதோடு, ஆவணங்களும் தொலையாது.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
Manoharan Prushothaman - mayiladutharai,இந்தியா
11-செப்-201307:57:08 IST Report Abuse
Manoharan Prushothaman பிரதமர் அலுவலகத்தின் ஒரு தலைமை எழுத்தருக்கு சி பி ஐ கட்டுப்பட்டு நடக்கவேண்டிய பரிதாபமான நிலமை அதனாலதான் மோடி போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் மாறன் சகோதரர்கள் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமால் இருப்பதற்கும் சி பி ஐ பயன்படுதப்படுகிரது என்ற குற்றச்சாட்டு உண்மைதானே l
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-செப்-201307:53:36 IST Report Abuse
villupuram jeevithan சிபிஐ சொல்லும் இந்த குற்றச்சாட்டு உண்மைதானா என்று கண்டுபிடிக்க ஒரு சிபிஐ விசாரணை தேவை?
Rate this:
4 members
0 members
23 members
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
11-செப்-201307:24:55 IST Report Abuse
ஆரூர் ரங் அஸ்கு புஸ்கு இந்த சிபி ஐ சுல்லாங்களுக்கு பேராசை இங்கு சோனியாவை எதிர்த்துக் கொண்டு ஒரு நீதிபதி கூட செயல்படுஅது கடினம்
Rate this:
1 members
0 members
31 members
Share this comment
Cancel
SURESH SUBBU - Delhi,இந்தியா
11-செப்-201307:21:12 IST Report Abuse
SURESH SUBBU காங்கிரெஸ்சிடம் இருந்து இந்த நாட்டு மக்களுக்கு விடுதலை வேண்டும்.. இப்படிக்கு நாட்டு மக்கள்..
Rate this:
1 members
1 members
25 members
Share this comment
Cancel
aanthai - Toronto,கனடா
11-செப்-201305:57:41 IST Report Abuse
aanthai சுதந்திரமாக செயல்படவிட்டால் நாங்களெல்லாம் மாட்டிக்குவோமுல்ல
Rate this:
2 members
0 members
16 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.