Forces trying to destroy UP’s social fabric: Akhilesh Yadav | கலவரத்தில் ஈடுபடுவோருக்கு உ.பி., முதல்வர் அகிலேஷ் எச்சரிக்கை| Dinamalar

கலவரத்தில் ஈடுபடுவோருக்கு உ.பி., முதல்வர் அகிலேஷ் எச்சரிக்கை

Updated : செப் 11, 2013 | Added : செப் 10, 2013 | கருத்துகள் (9)
Advertisement

லக்னோ:""உ.பி.,யில், இனி, வன்முறைக்கு இடமில்லை. கலவரத்தில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வர், அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். கலவர பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால், ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. பலி எண்ணிக்கை, 38 ஆக உயர்ந்து உள்ளது.


திடீர் மோதல்:

உ.பி.,யில், முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. கடந்த மாத இறுதியில், அங்குள்ள முசாபர் நகர் மாவட்டத்தில், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது, கலவரமாக மாறியது.கத்திக்குத்து, தீ வைப்பு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அரங்கேறின. 30க்கும் மேற்பட்டோர், இந்த கலவரத்தில் கொல்லப்பட்டனர். மற்ற பகுதிகளுக்கும் கலவரம் பரவியதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் உ.பி., போலீசார், பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். "கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய, சமாஜ்வாதி அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு, மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். "கலவர நிலைமை குறித்து, 12 மணி நேரத்துக்கு ஒருமுறை அறிக்கையை, உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்' என, உ.பி., அரசுக்கு, உத்தரவிட்டனர்.


மன்னிப்பு கிடையாது:

இந்நிலையில், கலவர நிலைமை குறித்து, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில், மாநில அமைச்சரவை, நேற்று ஆலோசனை நடத்தியது.

பின், முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:கலவரத்தில் ஈடுபடுவோர், யாராக இருந்தாலும், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்போருக்கு, மன்னிப்பு கிடையாது. உ.பி.,யில், இனி, வன்முறைக்கு இடமில்லை.புதிதாக, எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு படையினர், கலவர பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். டில்லியிலிருந்து வந்த, கூடுதல் படையினரும், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.கலவரம் காரணமாக, வீடுகளை விட்டு வெளியேறியவர்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்ப துவங்கியுள்ளனர். மாநில அரசுக்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வதந்திகளை நம்பாமல், சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்.இவ்வாறு, அகிலேஷ் யாதவ் கூறினார்.

இதற்கிடையே, கலவரத்தில் பலியானோரின் எண்ணிக்கை, நேற்று, 38 ஆக அதிகரித்தது. கலவர பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால், ஊரடங்கு உத்தரவு தொடருகிறது. கலவரம் குறித்து விசாரிப்பதற்காக, மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள, ஒரு நபர் விசாரணை குழு, விசாரணையை துவக்கியுள்ளது.கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாயும், நிதியுதவி அளிப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.


"அமைதியுடன் வாழுங்கள்':

"வாழும் கலை அமைப்பை' சேர்ந்த, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பரமார்த்த நிகேதன் அமைப்பை சேர்ந்த, சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, இமாம் உமர் அகமது இலியாசி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:முசாபர் நகரில் நடந்த கலவரம், மிகுந்த கவலை அளிக்கிறது. பழிவாங்கும் உணர்வை மேற்கொள்ளாமல், அமைதியுடன் வாழ வேண்டும். எந்தவிதமான வதந்தியையும் நம்ப வேண்டாம். பழிவாங்கும் உணர்வால், துயரம் தான் வந்து சேரும். சட்டத்தை, யாரும், தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு, மாநிலத்தில், உருப்படியாக எந்த வளர்ச்சி திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இதனால், அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், அந்த கட்சியால் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத பிரச்னையை உருவாக்கி, அதன் மூலம், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, சமாஜ்வாதி கட்சி முயற்சிக்கிறது.
அஜீத் சிங் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர்

முசாபர் நகர் கலவரத்துக்கும், அகிலேஷ் யாதவ் அரசுக்கும், எந்த தொடர்பும் இல்லை. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவே, இந்த வன்முறை. அடுத்த லோக்சபா தேர்தலில், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ஆசை எதுவும், எனக்கில்லை.
முலாயம் சிங் யாதவ்சமாஜ்வாதி தலைவர்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201310:07:22 IST Report Abuse
kumaresan.m " பாதிக்கப்பட்ட நகரில் சகோரத்துவம் மற்றும் சகிப்பு தன்மையை நிலைநாட்டவும் மற்றும் பகைமையை மறக்க அரசுடன் சில சமூக தொண்டு அமைப்புகள் சேர்ந்து பணியாற்றிட வேண்டுவோம்
Rate this:
Share this comment
Cancel
Amjath - Dammam,சவுதி அரேபியா
11-செப்-201310:06:33 IST Report Abuse
Amjath காவி தீவிரவாத கும்பலை அடியோடு தடை செய்யுங்கள் மக்கள் நிம்மதியாக சகோதரத்துவத்துடன் வாழமுடியும்.., இந்த தீவிரவாத கும்பல் சுதந்திரமாக நடமாடும் வரை இவர்கள் நாட்டை அமைதியக இருக்க விட மாட்டார்கள்..
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201310:01:10 IST Report Abuse
kumaresan.m " பிரதமரின் இந்த அறிவிப்பு தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகிறார் என்று தோன்றுகிறது மற்றும் வன்முறைக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது எனலாம் ....இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் போன்ற அறிவிப்புகள் எதற்கு ??? இவர்கள் விபத்தாலோ அல்லது இயற்க்கை சீற்றத்தாலோ பாதிக்கப்படவில்லை தங்கள் கொழுப்பால் பாதிக்கப்பட்டவர்கள் ????
Rate this:
Share this comment
Cancel
செல்வ.கமலகண்ணன் - ஸ்ரீமுஷ்ணம்,இந்தியா
11-செப்-201308:18:49 IST Report Abuse
செல்வ.கமலகண்ணன் எதையும் ஆரம்பத்திலே அடக்க வேண்டும். அந்த பகுதி ஆட்சியர் என்ன செய்து கொண்டிருந்தார் இது நடக்கும் போது
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
11-செப்-201306:16:12 IST Report Abuse
Thangairaja அனுபவ குறைவும் அதிகாரிகளின் அலட்சியமும் இந்த அக்கிரமத்திற்கு துணை போய்விட்டது. சாதிமத துவேஷம் தலைதூக்க விடாமல் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அகிலேஷ் முன்னுதாரணமாக கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
11-செப்-201305:15:08 IST Report Abuse
Skv கலவரம் செய்யத்தூண்டும் எதிர்கச்சிகளை கவனிக்கவேண்டியாவிதத்துலே கவனிச்சால் போதும் (தூக்கி உள்லேபோடுங்க )தான் அடங்க்குவாணுக .ஆளவுடுங்க மாயாவதியே முக்கிய காரணம்
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
11-செப்-201303:23:13 IST Report Abuse
Sekar Sekaran இந்த கிழட்டு அரசியல் அப்பாக்கள் எப்படியாவது தங்களது மகன்களை அரசியலில் தூக்கி விடவேண்டும் என்பதால் திணிக்கப்பட்ட முதல்வர் பதவியில் இருந்தாலும் சரி..து. முதல்வராக, மத்திய அமைச்சராக திணிக்கப்பட்டாலும் கூட இப்படித்தான் செயல்பாடுகள் இருக்கும். அகிலேஷின் திறமை சுத்தம்..படுவேஸ்ட்...இது உ பி அரசு என்றால்..உதாரணம் போதும்..டெல்லியில் நம்ம அஞ்சா நஞ்சரின் திறமை நகைப்புக்கு உள்ளானது..து முதவராக இருந்த ஸ்டாலினும் அப்படித்தான்..பதவியில் இருந்தபோது மிரட்டி வாங்கிய சேட்டு வீட்டு பிரச்சினை சமீபத்தில்தான் சமரசம் செய்த காட்சியை கண்டோம்..இவர்களுக்கு திறமை போதாது..ஆனாலும் திணிக்கப்படுவதுதான் இத்தகைய சம்பவங்களை ஒடுக்க முடியாமல் திணறுகின்றனர்..கேட்டால் வாரிசு உள்ளவர்கள் செய்கின்றனர் என்று எகத்தாளம் பேசுகின்றனர்..வாய்தான்
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
11-செப்-201302:12:00 IST Report Abuse
Kunjumani இதெல்லாம் வழக்கமா சொல்வதுதான், அடுத்த முறை கலவரம் முடிந்த பின்னும் உ.பி.,யில், இனி, வன்முறைக்கு இடமில்லை என்று சொல்வீர்கள்... இன்று ரொக்கம் நாளை கடன் மாதிரிதான்.
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
11-செப்-201301:10:10 IST Report Abuse
Vettri பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுகளை பெறுவதற்கு ஆளும் அரசே திட்டமிட்டு வன்முறையை தூண்டுகிறது என்கின்ற எண்ணம் வலுக்கத்தான் செய்கிறது. பல அப்பாவி மக்கள் பலியான பின்னரும் தற்போது தான் இவர் எச்சரிக்கை விட்டு கொண்டு இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை