Modi's jibe at Congress over corruption, devises new political alpabet | ஊழல் இல்லாத இந்தியா உருவாக காங்., அரசு போக வேண்டும்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆவேசம்| Dinamalar

ஊழல் இல்லாத இந்தியா உருவாக காங்., அரசு போக வேண்டும்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆவேசம்

Updated : செப் 12, 2013 | Added : செப் 10, 2013 | கருத்துகள் (80)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 ஊழல் இல்லாத இந்தியா உருவாக காங்., அரசு போக வேண்டும்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆவேசம்

ஜெய்ப்பூர்:""காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அகர வரிசைப்படி, ஊழல் செய்து வருகிறது. ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், முதலில், காங்கிரஸ் கட்சியை, ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்,'' என, பா.ஜ., பிரசார குழு தலைவர், நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.

அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஒவ்வொரு மாநிலமாக சென்று, பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், நரேந்திர மோடி பேசியதாவது:காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு, அகர வரிசைப்படி, அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வருகிறது. ஏ - ஆதார்ஷ், பி - போபர்ஸ், சி - கோல் (நிலக்கரி) என, ஒவ்வொரு எழுத்துக்கும், ஒரு ஊழலை செய்து வருகிறது. குழந்தைகளுக்கு, அகர வரிசையை கற்றுத் தருவதற்கு, காங்கிரஸ் கட்சி, புதிய புத்தகமே வெளியிடலாம். ஊழல், காங்கிரஸ் கட்சியின் அணிகலனாக உள்ளது. அந்த கட்சியில் ஊழல் செய்பவர்களுக்கு தான், பதவி உயர்வும், பரிசும் வழங்கப்படுகிறது. ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், முதலில், காங்கிரஸ் கட்சியை, ஆட்சி கட்டிலிலிருந்து அகற்ற வேண்டும். நாடு, சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த காங்கிரஸ் வேறு; தற்போதுள்ள காங்கிரஸ் வேறு.தற்போதைய காங்கிரஸ், ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறி விட்டது. சமீபத்தில், "ஜி-20' மாநாட்டில் பங்கேற்க சென்ற, பிரதமர் மன்மோகன் சிங், அங்கு, என்ன பேசினார் என்பது, யாருக்கும் தெரியாது. ஆனால், மாநாட்டை முடித்து விட்டு, திரும்பும்போது, தன்னுடைய, புதிய முதலாளியின் (ராகுல்) தலைமையின் கீழ், பணியாற்ற தயாராக இருப்பதாக கூறுகிறார். எந்த பொறுப்புணர்வும் இல்லாதவர்கள் தான், இப்போதைய அரசை நிர்வகிக்கின்றனர்.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.


பீகாரில் அனுமதி :

பீகார் மாநிலம் பாட்னாவில், அடுத்த மாதம் நடக்கவுள்ள பா.ஜ., பிரசார கூட்டத்தில், நரேந்திர மோடி பேசவுள்ளார். இந்த கூட்டத்துக்கு, நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் அரசு, அனுமதி மறுத்தது. பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்த கூட்டத்துக்கு, தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் வேட்பாளராகிறார் மோடி:

ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், ராம் மாதவ் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள மக்கள், மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ற தலைவரை, பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்த வேண்டும். மக்கள் விரும்பும் தலைவரை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய கடமை, பா.ஜ.,வுக்கு உள்ளது. அதற்கான நேரம் வந்து விட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதையே, ராம் மாதவ், இவ்வாறு, மறைமுகமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள், பா.ஜ., தலைவர்களுடன், சமீபத்தில் பேச்சு நடத்தினர். வரும், 13ம் தேதி, பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம் நடக்கவுள்ளது. அந்த கூட்டதில், மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, தெரிகிறது.இவ்வாறு, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nedunchezhian Senthilnayagam - Chennai,யூ.எஸ்.ஏ
11-செப்-201310:48:23 IST Report Abuse
Nedunchezhian Senthilnayagam What about the corruption of BJP Government in Karnataka. A Minister in Modi's Govt has been sentenced to three yers RI in a corruption case. What is defence of Modi?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-செப்-201310:43:34 IST Report Abuse
Nallavan Nallavan நாட்டைப் பற்றி சிந்திப்பவர்கள், நாட்டின் முன்னேற்றம் குறித்துக் கவலைப்படுபவர்கள் மோதியைப் போலவே நிச்சயம் எண்ணுவார்கள் .....
Rate this:
Share this comment
Cancel
K.CHINNATHAMBI Karuppiah - MADURAI,இந்தியா
11-செப்-201310:40:57 IST Report Abuse
K.CHINNATHAMBI Karuppiah RSS, VHP, BJP , MODI இதெல்லாம் பார்க்கும்போது எல்லாமே இருட்டுக்குள்ள நடக்கிற மாதிரி இல்ல இருக்கு. குஜராத்தியர்களின் வெளிநாட்டுப்பணம் இப்போ இந்தியா பூரம் பாய்கிறதோ.
Rate this:
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
23-செப்-201311:39:50 IST Report Abuse
rajen.tnlRSS, VHP, BJP , MODI இவையெல்லாம் ,,அல்கொய்தா அமைப்பு அல்ல ......
Rate this:
Share this comment
Cancel
இளங்கோ - chennai,இந்தியா
11-செப்-201310:04:04 IST Report Abuse
இளங்கோ பிஜேபி வெற்றி பெற்றால்,நீங்களும் BJP யும் நிச்சயம் காங்கிரசை விட சிறந்த ஆட்சியை தருவீர்கள்.நீங்கள் தான் பிரதமர் வேட்பாளர் என்று பலவாறு செய்திகள் வருகின்றன.அதற்கான தகுதியும் மக்கள் ஆதரவும் உங்களுக்கு இருப்பதும் ஊடகங்கள் வாயிலாக தெரிகிறது .ஆனால் அதை விட அத்வானி அவர்களை பிரதமராக்கி ஓரிரு ஆண்டுகள் கழித்து நீங்கள் பிரதமர் ஆவதே சிறந்தது.மற்றவர்களை விட நீங்கள் தான் இதற்கு வழி செய்ய வேண்டும்.எனக்குள் எதோ ஒரு நம்பிக்கை.
Rate this:
Share this comment
Cancel
Amjath - Dammam,சவுதி அரேபியா
11-செப்-201310:02:29 IST Report Abuse
Amjath மோடியும் ஜால்ரா கூட்டமும்..... மிகப்பெரிய நகைசுவை ......., மோடி, மோடியின் அமைச்சர்கள் ஊழல் செய்யதா உத்தமர்களT? அவருடைய மாநிலத்தில் லோக் ஆயுக்த அமைபினை கடுமையாக எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று உச்ச நீதிமன்றத்தால் வங்கி கட்டி கொண்டவர் இவர்..., இவர் நல்லவர் வேடம் போடுகிறார்..., இந்தியர்களை இவர் முட்டாள்கள் என நினைத்துள்ளார்... பண மழையில் நனைந்த குஜராத் அமைச்சர்.. செய்தியினை மக்கள் உடனே மறந்து விடுகிறார்கள்..
Rate this:
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
23-செப்-201311:44:08 IST Report Abuse
rajen.tnlநீங்கள் எல்லாம் இந்தியாவை பார்த்து கொண்டு இருக்குறீர்கள்..பயத்துல உங்க நாடே அதிருதில்ல...
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
11-செப்-201309:59:26 IST Report Abuse
S Rama(samy)murthy திரு மோடிஜி அவர்களே, மொஹலிஸ்தான் கனவை தகர்க்கவேண்டும். பாரதம் என்ற பெயர் கேட்டால் அந்நியனுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க வேண்டும் . சுப ராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
Ibn Mathar - Old Mangaf,குவைத்
11-செப்-201309:58:34 IST Report Abuse
Ibn Mathar இந்த நியூசை படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி. உங்கள் மனசாட்சி படி சொல்லுங்கள். லஞ்சம் வாங்காத, ஊழல் செய்யாத அரசியல்வாதி யாராவது இந்தியாவில் உண்டா? அது சாதாரண வார்டு மெம்பராகவே இருக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sorb yesudhas - Chennai,இந்தியா
11-செப்-201309:57:30 IST Report Abuse
Sorb yesudhas அடுத்த தேர்தலில காணாமலே போயிடுவ பாரு
Rate this:
Share this comment
rajen.tnl - tirunelveli,இந்தியா
09-நவ-201315:10:33 IST Report Abuse
rajen.tnlயாரு ராகுல் காந்தியா ..அவருதான் இப்பவே காணாமல் போய் விட்டாரே...........
Rate this:
Share this comment
Cancel
Ibn Mathar - Old Mangaf,குவைத்
11-செப்-201309:54:21 IST Report Abuse
Ibn Mathar யார் வந்தாலும், அது BJP ஆக இருந்தாலும் சரி அல்லது காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி, இந்தியாவில் இனி ஊழலை ஒழிப்பது என்பது குதிரைக்கொம்பு. ஒவ்வொரு தனி மனிதனும் கடவுளுக்கு பயப்படவேண்டிய முறையில் பயப்படாதவரை, திருந்தாதவரை, மனசாட்சிப்படி நடக்காத வரை ஒன்றும் நடக்கப்போவது இல்லை. இருந்தும் ஒரு மாற்றம் வேண்டும். இவனுக இம்ச தாங்கமுடியல. நான் குவைத்துக்கு வரும் பொது 1 KD = RS 152 ~ 155 க்குள் தான் இருந்தது. இப்போ RS 240/- வரை வந்து விட்டது. பண வீக்கம், அது, இதுன்னு என்னெல்லாமோ சொல்லுதானுவோ. ஒரு எழவும் புரியல. ஒருவேளை அரசியல்வாதி ஒடம்பு வீங்குறதுதான் பண வீக்கமோ?. வெவரம் தெரிஞ்ச மக்கா, கொஞ்சம் சொல்லுதியலாப்பா.
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
11-செப்-201309:45:14 IST Report Abuse
ஆனந்த் ஊழல் இருக்கட்டும். இத்தாலி அடிமைகள் பல பேர் இருக்கிறார்களே, அவர்களை என்ன செய்யலாம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை