ஏழைகளுக்கு உணவு தருவது வீண் செலவல்ல: காங்., துணை தலைவர் ராகுல் விளக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""ஏழை மக்களுக்கு உணவு அளிப்பதற்காகச் செலவிடப் படும் பணத்தை, வீண் செலவாகக் கருத முடியாது,'' என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கூறினார்.

டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:தகவல் பெறும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் போன்றவை, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனை நடவடிக்கைகள். அந்த வரிசையில், தற்போது, உணவுப் பாதுகாப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மக்களுக்கு உணவு பெறும் உரிமையை அளித்து, நாட்டில் பசிக்கொடுமையை ஒழிப்பதற் காக, இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. உணவுப் பாதுகாப்புத் திட்டம், பணத்தை வீணடிக்கும் செயல் என, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. ஆனால், ஏழை மக்களுக்கு உணவு அளிப்பதற் காகச் செலவிடப்படும் பணத்தை, வீண் செலவாகக் கருத முடியாது.ஏழை மக்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற் காகவே, உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவின்படி, உணவுப் பாதுகாப்புத் திட்டம் அமலுக்கு வந்தால், நாட்டில் யாரும் பட்டினியாக இருக்க மாட்டார்கள்.இவ்வாறு, ராகுல் கூறினார்.

சச்சின் பைலட் மத்திய அமைச்சர்: அடுத்த ஆண்டு நடைபெறும், லோக்சபா தேர்தலை, கட்சியின் துணை தலைவர், ராகுல் தலைமையில் காங்கிரஸ் சந்திக்கும். இதில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், கடவுள் விருப்பமும் அதுவானால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மூன்றாவது முறையாக, ஆட்சியைக் கைப்பற்றும். அப்போது, பிரதமராக யார் பொறுப்பேற்பர் என்பது தெரிய வரும். என்னைப் பொறுத்தவரை, மதம், இனம், மொழி என, எல்லாவற்றையும் கடந்த, ஒரு சிறந்த தலைவராக, காங்., துணைத் தலைவர், ராகுல் திகழ்கிறார்.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (73)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agniputhran Sonoffire - jakarta,இந்தோனேசியா
12-செப்-201308:25:52 IST Report Abuse
Agniputhran Sonoffire கங்கையை காவிரியுடன் இணைப்பது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது என சில காலம் முழங்கிய சிங்கம் அல்லவா இது.
Rate this:
Share this comment
Cancel
Mag - Salem,இந்தியா
12-செப்-201300:18:21 IST Report Abuse
Mag இலவசம் == ஒட்டு. நிறைய பேர் மேலே சொன்னதுபோல, ஏழை ஒருவன் சொந்தகாலில் நின்று சம்பாரிச்சு சாப்பிடறதுக்கு வகை செய்யறமாதி கட்டமைப்பை உருவாக்கி கொடுக்கறதுதான் அரசின் வேலை. இந்திய மக்கள் கொடுக்கறதுல வள்ளலாதான் இன்னும் இருக்காங்க. மேலே இன்னொருத்தர் சொன்னதுபோல, "கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கறமாதிரி" மக்களின் வரிப்பணத்தை எடுத்து இலவசமா கொடுக்க அரசாங்கம் தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Murugan - utkottai,இந்தியா
11-செப்-201310:57:13 IST Report Abuse
Murugan உண்மையான காங்கிரஸ்காரங்க யாரும் இப்ப கங்கிரச்சுல இல்ல. மக்கள் யாரும் இத வீனுன்னு சொல்லல. உங்க மனசுல பட்டத அப்பப்ப இப்படிதான் சொல்றிங்க. இந்தியா உங்க சொத்துங்கிரதுல எங்களுக்கு சந்தேகம் இல்ல. எதோ பார்த்து.................
Rate this:
Share this comment
Cancel
Sengai Selvan - Perth,ஆஸ்திரேலியா
11-செப்-201310:45:20 IST Report Abuse
Sengai Selvan ராகுல் கண்டிப்பா வெளிநாட்டுக்காரர் தான். ஏன்னா அவரை தூக்கி விட ஆள் இருக்கு, மோடி இந்தியர்தான் ஏன்னா அவர் காலை வாரி விட நிறைய ஆட்கள் அவர் கட்சிலே இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-செப்-201310:45:12 IST Report Abuse
Nallavan Nallavan அதற்காக ஏழைகளை பிச்சை பெறும் வாக்கு வங்கியாகவே வைத்திருப்பது சரியா ராகுல் அவர்களே?
Rate this:
Share this comment
Cancel
tmsaravanai - CHENNAI,இந்தியா
11-செப்-201310:40:55 IST Report Abuse
tmsaravanai ஒருவனுக்கு ஒரு ரொட்டி தினமும் ஒரு வருடத்திற்கு கொடுப்பதை விட காலம் பூராவும் ரொட்டி செய்து சாப்பிட வேலை கொடுக்க வேண்டும் . பெரிய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் , சிறு சிறு வேலையைக்கூட தனி மனிதன் தன வீட்டில் குடுமபதோடு தான் நினைத்த நேரத்தில் செய்து குறித்த நேரத்தில் , தரமாக செய்ய வேண்டும் . அதற்கு அரசு திட்ட மிட வேண்டும் . சோறு போட்டு பிச்சைக்காரன் ஆக்காதே
Rate this:
Share this comment
Cancel
Madurai Mani - Chennai,இந்தியா
11-செப்-201310:38:06 IST Report Abuse
Madurai Mani பெரும்பாலான ஏழை இந்தியர்களை, பிச்சைக்காரர்களாகவே வைத்திருப்பதில் காங்கிரசுக்கு என்ன அக்கறை, ஒட்டு தானே?? மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள், அந்த ஏழைகள் உங்களுக்கு சோறு போடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201310:37:32 IST Report Abuse
kumaresan.m " எதிர்கட்சிகள் ஊழலை பற்றி கூடத்தான் குறைகூறுகிறார்கள் அதனை பற்றி கவலை பட்டோமா ???
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201310:32:56 IST Report Abuse
kumaresan.m " தலீவரு, உங்களின் அன்னைக்கு மணிமேகலை என்ற பட்டம் கொடுத்தார். உங்களுக்கு என்ன பட்டம் கொடுக்க போகிறார் ???
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201310:30:41 IST Report Abuse
kumaresan.m " நிஜமாளுமாக ஏழைகள் எப்பொழுதும் பிறரை எதிர்பார்க்காமல் வாழவேண்டும். ஏனெனில் இந்த திட்டத்தை அவர்களுக்கு சுயமாக வேலையை ஏற்படுத்தி கொடுக்குமானால் அதனை வரவேற்கலாம். ஆனால் அவர்களை எப்பொழுதும் கையேந்தும் நிலைக்கே வைக்க வேண்டும் என்பது என்ன நியாயம் ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்