TC broadly approves plan to give free tablets and mobiles | இலவச மொபைல்போன், கம்ப்யூட்டர்கள்: தொலை தொடர்பு ஆணையம் அனுமதி | Dinamalar
Advertisement
இலவச மொபைல்போன், கம்ப்யூட்டர்கள்: தொலை தொடர்பு ஆணையம் அனுமதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு, இலவச மொபைல் போன்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச டேப்லெட் கம்ப்யூட்டர்களை வழங்குவதற்கு, தொலைதொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள், 2.5 கோடி பேருக்கு, மொபைல் போன்கள் வழங்கவும், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ்-2 மாணவர்கள், 90 லட்சம் பேருக்கு, டேப்லெட் கம்ப்யூட்டர்கள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இத் திட்டம், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்கு முன், துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தொலைதொடர்பு துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான தொலை தொடர்பு ஆணையம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் இத் திட்டத்திற்கு ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இது விரைவில், மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பபடும் என தொலை தொடர்பு துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மொபைல் போன் மற்றும் டேப்லெட் கம்ப்யூட்டர்கள், மூன்றாண்டு உத்தரவாதம் கொண்டவை. மொபைல் போன்கள், முதலாண்டு, 25 லட்சம் பேருக்கும், இரண்டாம் ஆண்டு, 50 லட்சம் பேருக்கும், மூன்றாண்டாம் ஆண்டு, 75 லட்சம் பேருக்கும், நான்காம் ஆண்டு, ஒரு கோடி பேருக்கும் என நான்கு கட்டமாக வழங்கப்பட உள்ளது. அதே போல், கம்ப்யூட்டர்கள் மூன்று கட்டமாக வழங்கப்பட உள்ளன.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
11-செப்-201315:13:07 IST Report Abuse
N.Purushothaman இதுக்கு மட்டும் நிதி இருக்கா???? இந்த மாதிரி பொழப்பு பொழைக்கரதுக்கு பதிலாக வேறு எதையாவது செய்யலாம்....
Rate this:
0 members
0 members
57 members
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
11-செப்-201314:08:16 IST Report Abuse
Narayan 67 வருடங்களில் பெரும்பாலும் எல்லா கட்சிகளும் காங்கிரஸ் போல்தான். ஆனால் இருக்கும் ஒரே நல்ல இந்திய தேச கட்சி பாஜகவும் இது போன்ற திட்டங்களை தைரியமாக எதிர்க்க முடிவதில்லை. காரணம் : நாம் மக்கள்தான் இட ஓதிக்கீடு, பல உதவாக்கரை சோஷலிச திட்டங்கள், இலவசங்கள், படி படியாக குறைத்து நிறுத்த வேண்டும் எனும் நல்ல கொள்கை உடைய பாஜக, எங்கே அதை வெளியே சொல்லிப பார்க்கட்டும், ஒரு வோட்டு கூட விழாது, இதுவே நாம் மக்கள்.
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
11-செப்-201313:51:58 IST Report Abuse
Narayan 67 வருஷமா எல்லோரையும் பிச்சைக்காரங்கலாகவே ஆக்கியது மட்டுமில்லாமல், இப்போதும் அதையேதான் காங்கிரஸ் செய்கிறது . அந்த கட்சி எவ்வளவு வருடம் ஆனாலும் திருந்தாது. மக்களுக்கு வேண்டியது தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, கட்டுமானம்/infrastructures, நேர்மையான அரசு, வீரமான வெளி உறவு கொள்கைகள். இது போன்ற பிச்சை வேண்டாம். எல்லோருக்கும் வேலை கொடுங்கள், உணவு, உடை, மிக்சி, மளிகை, டிவி, போன் போன்றவை நாங்களே வாங்கி கொள்கிறோம்.
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
Bahurutheen NoorMohamed - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-201313:01:49 IST Report Abuse
Bahurutheen NoorMohamed இந்த செல் போனால் இன்னும் எத்தனை குடும்பங்கள் தெருவில் வரப்போகுதோ
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Cancel
Thiruvaalar Kalugu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-201312:42:45 IST Report Abuse
Thiruvaalar Kalugu எனது வரி பணத்தை இலவசமாக கொடுக்க இவன் யார்
Rate this:
0 members
0 members
21 members
Share this comment
Cancel
sundar - Hong Kong,சீனா
11-செப்-201310:18:25 IST Report Abuse
sundar இது ஒரு தொலைநோக்கு பார்வை திட்டம். இலவச போன் கொடுத்து. எங்கள் நாட்டில் 80 கோடி சந்ததரர்கள் உள்ளனர் என சொல்லி, வெளிநாட்டு கம்பனிக்கு 3G, 4G நல்ல விலையில், நம்மையும் சேர்த்து விற்க நல்ல திட்டம். இதுக்கெல்லாம் இவர்கள் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. இலவசம் ஒழியாமல் நாடு விளங்காது.
Rate this:
0 members
0 members
29 members
Share this comment
Cancel
sundar - Hong Kong,சீனா
11-செப்-201310:11:06 IST Report Abuse
sundar நீங்கள் மொபைல் போன் இலவசமாக கொடுத்து, மாதா மாதம் மொபைல் பில் பணத்தை 2G, 3G, 4G என லட்சம் கோடியில் கொள்ளை அடிக்கலாம் என அருமையான திட்டம். மாதா மாதம் நீங்களே இலவச recharge செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
0 members
0 members
42 members
Share this comment
Cancel
G.Senthamilselvan - mannargudi ,இந்தியா
11-செப்-201309:36:14 IST Report Abuse
G.Senthamilselvan வாயி கூழுக்கு அழுகுது கொண்டை பூவுக்கு அழுகுதாம் குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க வழியில்லை ஒங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா
Rate this:
1 members
1 members
34 members
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
11-செப்-201308:53:27 IST Report Abuse
rajan ஒரு பக்கம் மானியங்களை ஒழிக்கும் வகைல திட்டம் இன்னொரு பக்கம் ஆட்சிய பிடிக்கும் நினைப்பில் மாநில அரசுகளுக்கு மதிய அரசு சளைத்ததில்லை எனும் வகைல இலவசங்களை இப்படி வீசுகிறீர்களே. யாருக்கு என்ன தேவை என்பதை மக்களே முடிவு செய்து வாங்குவார்கள். விவசாயிக்கு விவசாயம் தேவை அதுக்கு தண்ணீர் தேவை அதை கொடுங்கள் இலவசமாய். நாட்டின் தேவை போர்முனை ஏர்முனை இரண்டும் கூர்மை படுத்துங்கள் மீதி எல்லாம் நல்ல வளர்ச்சி காணும்.
Rate this:
0 members
0 members
37 members
Share this comment
Cancel
செல்வ.கமலகண்ணன் - ஸ்ரீமுஷ்ணம்,இந்தியா
11-செப்-201308:34:40 IST Report Abuse
செல்வ.கமலகண்ணன் செய்ய வேலை இல்லை நீங்க கொடுத்த வேலையும் சரியாக நடக்கறது இல்லை அதுக்குள்ள இப்ப செல்போன் வேற
Rate this:
0 members
0 members
22 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்