உலகளவில், "டாப்' பல்கலை பட்டியல் வெளியீடு: 200க்குள் இந்திய பல்கலைக்கு இடம் இல்லை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

உலகளவில், தரம் வாய்ந்த பல்கலைகளின் பட்டியலை, அமெரிக்க நிறுவனம், நேற்று வெளியிட்டது. இதில், முதல், 200 இடங்களில், இந்திய பல்கலைகள் எதுவும் இடம்பெறவில்லை. டில்லி ஐ.ஐ.டி.,க்கு, 222வது, "ரேங்க்' கிடைத்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், "குவாகுரேலி சைமண்ட்ஸ்' என்ற நிறுவனம், கடந்த, 2004ல் இருந்து, உலகளாவிய அளவில் உள்ள பல்கலைகளை ஆய்வு செய்து, ஆண்டுதோறும், தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 10வது ஆண்டாக, நேற்று, பல்கலைகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டது.இதில், அமெரிக்காவின், மாசாசூட்ஸ் தொழில்நுட்ப பல்கலை, இரண்டாவது ஆண்டாக, முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஹார்வர்டு பல்கலை, இரண்டாவது இடத்தையும், கேம்பிரிட்ஜ் பல்கலை, மூன்றாவது இடத்தையும் பிடித்து, சாதனை படைத்துள்ளன. முதல், 200 இடங்களில், இந்திய பல்கலைகளில் ஒன்றுக்கு கூட இடம் இல்லை.டில்லி, ஐ.ஐ.டி., 222வது இடம் பிடித்துள்ளது. மும்பை, ஐ.ஐ.டி.,க்கு, 233வது இடமும், சென்னை, ஐ.ஐ.டி.,க்கு, 313வது இடமும் கிடைத்துள்ளன. ஆசிய நாடுகள் என்ற அளவில் எடுத்துக்கொண்டால், சீன பல்கலைகள், அதிகம் இடம் பிடித்துள்ளன.

ஆசிய அளவில், ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை, முதலிடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலை, ஹாங்காங் பல்கலை ஆகிய இரண்டும், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. சியோல் தேசிய பல்கலை, மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.டில்லி, ஐ.ஐ.டி., 38; மும்பை, ஐ.ஐ.டி., 39; சென்னை, ஐ.ஐ.டி., 49; கான்பூர், ஐ.ஐ.டி., 51; காரக்பூர், ஐ.ஐ.டி., 58; ரூர்க்கி, ஐ.ஐ.டி., 66 மற்றும் டில்லி பல்கலைக்கு 80வது இடமும் கிடைத்துள்ளன.

ஆசியாவில், சீனா, தைவான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைகள், அதிக இடங்களை பிடித்துள்ளன.இந்தியாவில், நாடு முழுவதும், 600க்கும் அதிகமான பல்கலைகள் உள்ளன. மத்திய அரசு, உயர் கல்விக்காக, பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்கிறது. இருந்தபோதும், உலகளாவிய தர வரிசையில், முதல், 100 இடங்களில் கூட, ஒரு பல்கலையும் இடம் பெறாதது, அனைத்து நிலைகளிலும், உயர் கல்வியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை, எடுத்துக் காட்டுகிறது.

-நமது நிருபர்-

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (43)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
11-செப்-201310:49:42 IST Report Abuse
mirudan சம்பளம் என்ற அடிப்படையில் பார்த்தல் இந்திய பல்கலை கழகங்கள் தான் முதலிடம் பெறும் ?
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201310:48:19 IST Report Abuse
kumaresan.m " இந்தியாவில் கல்வியை அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்தவர்கள் வியாபாரமாக மாற்றிவிட்டார்கள். பிறகு எப்படி உலக தர வரிசையில் போட்டி போட முடியும் ??? ஆனால் இந்த பல்கலை கழங்களில் படித்தால்தான் அறிவாளி ஆக முடியும் என்பது அல்ல ??? மூளைக்கு வேலை கொடுத்து சிறப்பாக பணியாற்றினால் அந்த மாணவர்களின் நிலைக்கு நம்மால் உயந்து நிற்க முடியும் ....அவர்கள் தகவல் தொழில் நுட்பதின் பயன்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த தர வரிசையை வெளியிட்டு இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201310:42:56 IST Report Abuse
kumaresan.m " இந்திய பல்கலை கழகங்கள் உலக தர வரிசையில் முதல் இடத்தில் வராமல் இருந்து இருக்கலாம். ஆனால் பல் கலை கழகங்கள் செல்லாமல் பட்டங்கள் பெறாமல் ஊழல்கள் செய்யும் திறமை எங்க நாட்டு அரசியல்வாதிகளுக்கு இருக்கும் திறமை பிற நாடுகளில் உள்ள மெத்த படித்த அரசியல்வாதிகளுக்கு இருக்கிறதா என்பதைத்தான் அனைவரின் கேள்வி ????
Rate this:
Share this comment
Cancel
Just imagine - chennai,இந்தியா
11-செப்-201310:27:32 IST Report Abuse
Just imagine 1 பெரிசா .... 222 பெரிசா ..... அப்போ எங்கள் பல்கலைதான் உயர்ந்தது .
Rate this:
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
11-செப்-201309:47:44 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN நான் சமீப காலமாக சில வெளி நாடுகளுக்கு பயணித்துக்கொண்டு இருக்கிறேன். அத்துடன் அங்குள்ள கல்வித் தரத்தையும் குடும்ப உறவுகள் மூலமாக அறிந்து வந்து கொண்டிருக்கிறேன். இந்தியக் கல்வித் தரத்தில் ஏட்டுப் படிப்பே முன்னிலை வகிக்கின்றது. அனுபவப் படிப்பு மிகவும் குறைவு. அனுபவப் படிப்பிற்கு தற்கால தொழில் சார்ந்த உபகரணங்கள் நிறைய தேவை. அவற்றின் விலை அதிகமாகத்தான் இருக்கும். அவைகளை வாங்கி மாணவர்களுக்கு விளக்கவேண்டியது கல்லூரிகளின் கடமை. மாணவர்களிடமிருந்து 'கேபிடேஷின்' பணம் மட்டும் வாங்கிக்கொண்டு தன சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளும் போக்கு இருக்கும்வரை நம் ஊர் கல்வி நிலையங்கள் முதல் இடத்திற்கு வரவே வராது. அதைப் பற்றி அரசியல்வாதிகளுக்கு எந்த கவலையும் இல்லை. அவர்கள் பெட்டி நிரம்பினால் போதும். மூன்றாம் வகுப்பில் ஒலி சம்மந்தமான பாடத்திற்கு ஒலிப் பதிவு கூடத்திற்கே அழைத்துச் சென்று விளக்குவதோடு வகுப்பில் மாணவர்கள் ஒலி பற்றி விளக்கி இரு நிமிடங்கள் பேசவேண்டும் என்ற தன்மையில் பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. எந்த ஒரு பாடத்தையும் அடி முதல் முடிவு வரை வெளி நாடுகளில் சொல்லித் தரப்படுகின்றன. நம் ஊரிலோ புத்தகத்தில் உள்ளதை மட்டும் படித்து மனப்பாடம் செய்து தேர்வில் பேப்பரில் கொட்டிவிட்டால் போதும். இந்நிலை மாறும்வரை நம் கல்வித் தரம் உயரவே உயராது. ஒரு உண்மை நிகழ்ச்சி: பி எஸ் சி பி இ படித்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் தொழிற்சாலையில் சேர்ந்த புதிதில் பிச்டனைக் காட்டி இது என்ன? என்று கேட்டது இன்றும் என் நினைவில் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
11-செப்-201308:40:08 IST Report Abuse
venkat Iyer நல்லா படிக்கும் மாணவர்களுக்கு,எந்த பிரிவினராக இருந்தாலும் வய்ப்புகள் கிடைக்க வேண்டும்.அதற்கு ஈட் போன்ற நிறுவனங்களுக்கு,ஜாதி அடிப்படையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
11-செப்-201308:38:19 IST Report Abuse
ரத்தினம் என்னைக்கு மந்திரிமார் தனியாக கல்லூரிகள் ஆரம்பித்தார்களோ அன்னைக்கே படிப்பெல்லாம் பாழ்
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
11-செப்-201308:34:45 IST Report Abuse
Baskaran Kasimani எதற்க்கெடுத்தாலும் இட ஒதுக்கீடு என்றால் எப்படி மேலே வர முடியும்? தகுதி இல்லாதவர்கள் பேராசிரியர்களாக இருந்தால் ஒரு புண்ணாக்கும் செய்ய முடியாது.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-செப்-201308:14:29 IST Report Abuse
villupuram jeevithan ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்தில் இதே செய்தி, 200ல் இல்லை என்று திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்கிறது.அதை விடுத்து சென்ற கல்வி ஆண்டில் இந்தியாவின் ரேங்க் என்ன, இந்த ஆண்டு அது பெற்ற ரேங்க் என்ன என்று இரண்டையும் சொன்னால் பயனுள்ளதாக இருக்குமே?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-செப்-201308:09:01 IST Report Abuse
villupuram jeevithan ஆமா, மெகா ஊழல் செய்ய எந்த இந்திய பலகலைக் கழகத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள்? நம்ம அரசியல்வாதிகள் பிச்சி உதருகிரார்களே? அவர்களை விஞ்ச யாரும் இல்லை இந்த உலகத்தில்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்